தொடர்கள்
அழகு
60 ஆண்டுகள் கழித்து காதலை சொன்னால் ???? மாலா ஶ்ரீ

20230620235126410.jpg

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்தவர்கள் தாமஸ் மெக்மேகின், நான்சி கம்பேல். இவர்கள் பள்ளியில் ஒன்றாக படித்தபோது, இருவருக்கும் இடையே ஒருவித ஈர்ப்பு இருந்தது. எனினும், மலையாளத்தில் 'பிரேமம்' மற்றும் தமிழில் '96' படங்களை போல், இருவரும் ஒருவரை ஒருவர் பள்ளியில் பார்த்துக் கொண்டு இருந்தாலும், தங்களின் காதலை வெளிப்படுத்தாமல் இருந்துள்ளனர்! பின்னர் பள்ளி படிப்பு முடிந்ததும் இருவரும் தனித்தனியே பிரிந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இருவரும் தனித்தனியே கல்லூரி வாழ்க்கை, திருமணம் என வெவ்வேறு இடங்களில் செட்டிலாகி விட்டனர். எனினும், இருவருக்கும் இடையே பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதல் மனதுக்குள் அப்படியே பசுமையாக இருந்திருக்கிறது. பின்னர் நீண்ட காலத்துக்கு பிறகு இருவரும் பள்ளியின் 50-வது ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதன்முறையாக மேக்மேகினும் நான்சி கம்பெல்லும் சந்தித்துள்ளனர்.

ஆனால், அப்போது இருவரும் தனித்தனியே குடும்பம், குழந்தைகள் என செட்டில் ஆனதால், இவர்கள் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பின்னர் வழக்கம் போல் இருவரும் பிரியாவிடை கொடுத்து திரும்பி சென்றுவிட்டனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அப்பள்ளியின் 60-ம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மேக்மேகினும் நான்சி கம்பெல்லும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்.

இப்போது இருவருமே குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததால், மேக்மேகினுக்கும் நான்சி கம்பெல்லுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்துள்ளது. எனினும், அந்நிலையில் இருவரும் பெரிதாக வெளிக்காட்டிக் இருந்துள்ளனர். ஆனால், தனது பள்ளிப் பருவக் காதலை நான்சியிடம் எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என்று மேக்மேகின் திட்டமிட்டு இருக்கிறார்.

அதன்படி, தம்பா விமான நிலையத்தில் இருந்து நான்சி கம்பெல்லை வரவழைத்து, அவருக்கு சர்ப்ரஸ் கொடுக்கும் விதமாக, தனது பள்ளிப் பருவ காதலை, தனது 78-வது வயதில் மேக்மேகின் 'பொக்கே'வுடன் ஒரு கடிதத்தில் புரபோஸ் செய்துள்ளார்.

இந்த காதல் புரபோசலுக்கு 'எத்தனை வருடங்கள் ஆனாலும் காதல் மறைவதில்லை' என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வாலிபங்கள் போகும் வயதாக கூடும்..ஆனாலும் அன்பு மாறாதது........