தொடர்கள்
அனுபவம்
தக்காளி..., தக்காளி என்ன விலை ?? - விகடகவியார்.

20230615075300440.jpg

மத்திய அரசு தக்காளியை விவசாயிகளிடமிருந்து வாங்கி எல்லா மாநிலங்களுக்கும் அனுப்ப முடிவு செய்திருக்கிறதாக அறிவிக்கிறது. தமிழக முதல்வர் விலையை கட்டுப்படுத்த மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார். கூடவே பத்தாயிரம் டன் கோதுமை மற்றும் துவரம் பருப்பு தாருங்கள் இன்று கோரிக்கை வைக்கிறார்.

நியாய விலைக் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி கிடைப்பதாக அறிவித்தாலும் அங்கு 50 கிலோ 60 கிலோ மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது தவிர அது எல்லா நியாய விலைக் கடைகளிலும் விற்பனை செய்வதில்லை. எனவே இதன் மூலம் மக்களின் அத்தியாவசி தேவையை இந்த அரசு பூர்த்தி செய்தது என்று பெருமை பேச முடியாது. தக்காளி விலை இன்று வரை தமிழ்நாட்டில் உச்சத்தில் தான் இருக்கிறது. சின்ன வெங்காயம் தக்காளியை தோற்கடித்து 240ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வியாபாரிகள் இவையெல்லாம் சீரடைய குறைந்தது மூன்று மாதம் ஆகும் அப்போது கூட படிப்படியாகத்தான் விலை குறையும் இவையெல்லாம் சந்தைக்கு எந்த அளவுக்கு பொருட்கள் வருகிறது என்பதை பொறுத்துதான் என்கிறார்கள்.

20230615075324724.jpeg

​தக்காளி விலை அதிகமானதை தொடர்ந்து ஸ்மார்ட் போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு கிலோ தக்காளி இலவசம் என்று மத்திய பிரதேசத்தில் ஒரு மொபைல் விற்பனை கடையில் அறிவிப்பு பலகை வைத்ததும் அந்தக் கடையில் ஸ்மார்ட் போன் வியாபாரம் அபாரம். இரண்டு கிலோ இலவசமாக தக்காளி கிடைக்கிறதே என்பதுதான் காரணம் ..உத்தர் பிரதேசத்தில் ஒரு தக்காளி விற்பனை கடையில் பவுன்சர்களை நியமித்தது சர்ச்சையாகி அரசியல் ஆனது.

​தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லா அத்தியாவசிய பொருட்களுக்கும் நாம் பிற மாநிலங்களை எதிர்பார்த்து தான் இருக்கிறோம் என்பது தான் உண்மை ..வட மாநிலங்களில் பருவ மழை தவறிப் பெய்ததால் பருப்பு விலை உயர்ந்தது. பெரும்பாலான மளிகைபொருட்களுக்கு தமிழகம் ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிராவை நம்பி இருக்கும். சீரகம் சோம்பு கடுகு ஆகியவற்றுக்கு ஒரே வழி குஜராத் தான் அங்கு மட்டுமே இவையெல்லாம் கிடைக்கிறது. குஜராத்தில் தென்மேற்கு பருவ மழை இப்போதுதான் தீவிரம் காட்ட தொடங்கி இருக்கிறது விவசாயிகள் இனிமேல் சாகுபடி செய்து இவை எல்லாம் சந்தைக்கு வர குறைந்தது மூன்று மாதம் ஆகும் அதுவரை இந்த தட்டுப்பாடு விலை உயர்வு இருக்கத்தான் செய்யும் என்கிறார்கள் வியாபாரிகள்.

​இதே போல் தக்காளி சாகுபடி திடீரென எல்லா பெரும்பாலும் விவசாயிகளும் தக்காளியை பயிர் செய்தார்கள் விளைச்சல் அதிகரித்தது தக்காளி வரத்து அதிகமானது தக்காளி ஒரு கட்டத்தில் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கிலோ விற்பனையானது. ஆனால் விவசாயிகளுக்கு லாபகரமாக இல்லை எனவே தக்காளி விளைச்சலை அவர்கள் குறைத்துக் கொண்டார்கள் என்பதும் விலை உயர்வுக்கு ஒரு காரணம். எந்த விளைபொருட்கள் விலை உயர்வும் விவசாயிக்கு அது லாபத்தை என்றும் தந்ததில்லை அந்த லாபம் எல்லாம் பதுக்கள் காரர்களுக்கும் வியாபாரிகளுக்கும் தான் போய் சேருகிறது.

​துவரம் பருப்பு விலை உயர்வுக்கு காரணம் துவரம் பருப்பு பெரும்பாலும் மகாராஷ்டிராவில் இருந்து தான் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. சமீப காலமாக மகாராஷ்டிராவில் இருந்து உக்ரேன் நாட்டுக்கு துவரம் பருப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. துவரம் பருப்பு தட்டுப்பாடுக்கு இதுவும் ஒரு காரணம் அதனால் தான் விலை உயர்ந்தது என்கிறார்கள் விவசாயிகள்.

​தமிழகத்தைப் பொறுத்தவரை நமக்கு தேவையான 50 சதவீத அரிசி ஆந்திரா மற்றும் கர்நாடகாவை தான் நம்பியிருக்கிறோம். தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு யார் ஆட்சி செய்தாலும் உரிய மரியாதை இல்லை எனவே இப்போது விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டுமனைகளாக மாறிவிட்டது. நாமும் என் பையனை இன்ஜினியர் ஆக்குகிறோம் டாக்டருக்கு படிக்க வைக்கிறோம் என்று சொல்கிறோமே தவிர யாரும் விவசாயியாக ஆக்கப் போகிறேன் என்று சொல்வதில்லை விவசாயத்தின் மீது நமக்கான நம்பிக்கை இப்போது மெல்ல குறைய தொடங்கி விட்டது. எத்தனை அதிகாரிகள் அமைச்சர்கள் உழவர் சந்தையில் போய் விவசாயிகள் நிலை பற்றி கேட்கிறார்கள். அங்கும் அரசியல்வாதிகள் துணையோடு வியாபாரிகள் ஆதிக்கம் தான் ஓங்கி நிற்கிறது. நியாய விலை கடைகளில் தக்காளி தருகிறோம் என்று அமைச்சர்கள் பெருமை பேசுவதை விட்டு தரிசு நிலங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் அரசே தக்காளி பயிரிடலாம் அல்லது விவசாயிகளை அங்கு பயிரிட அனுமதிக்கலாம். ஆனால் இது பற்றி எந்த யோசனையும் எந்த அரசுக்கும் கிடையாது. வேளாண் பட்ஜெட் என்பது ஒரு அலங்கார அறிவிப்புகள் கொண்ட ஒரு பட்ஜெட் அவ்வளவுதான். சென்ற ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எத்தனை திட்டங்களை செயல்படுத்தினார்கள் என்று கேட்டால் அதற்கான பதிலே வராது ..சேமிப்புக் கிடங்குகள் கிடையாது இன்றும் மழையில் நெற்பயில்கள் நனைந்து முளை விடுகிறது இதுதான் விவசாயிகளுக்கு இந்த அரசு செய்யும் சேவை. எல்லாமே வெறும் வெற்று அறிவிப்போடு சரி. விவசாயிகளில் இருந்து கொள்முதல் செய்யும் வியாபாரிகள் பொருட்களை அதிக லாபத்திற்கு விற்கும் போது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்ற விவசாயிகளின் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை விலை உயர்வு நாமே தேடி பெற்றது.