தொடர்கள்
அரசியல்
செந்தில் பாலாஜி தப்ப முடியாது !! பிடி இறுகுகிறது ! - விகடகவியார் ஸ்பெஷல் ரிப்போர்ட்

20230615074827948.jpeg

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு கிட்டத்தட்ட செந்தில் பாலாஜிக்கு பின்னடைவு என்று தான் சொல்ல வேண்டும். செந்தில் பாலாஜிக்கு வாதாடிய முகில் ரோத்தகி கபில் சிபல் இரண்டு பிரபல மூத்த வழக்கறிஞர்கள் இதுவரை 10அல்லது 15 நாட்கள் உச்சநீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் செந்தில் பாலாஜிக்காக வாதாடினார்கள். இவர்களுக்கான ஒருநாள் வக்கீல் கட்டணம் 25 லட்சம் இதுவரை இவர்களுக்கு வக்கீல் கட்டணமாக கோடிக்கணக்கில் செலவாகி இருக்கும். இது யார் பணம் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

20230615075100502.jpg

இனி நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்புக்கு வருவோம். செந்தில் பாலாஜி பாதிக்கப்பட்டவர் என்று அவர் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் வாதாடிய போது அப்போது குறுக்கிட்ட நீதிபதி உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் செந்தில் பாலாஜியிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் தான். போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக சொல்லி வேலை வாங்கித் தராமல் ஏமாந்த அந்த அப்பாவிகள் பற்றி இங்கு யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அவர்கள் தங்கள் வீட்டு நகைகளை விற்று கடன் வாங்கி அமைச்சருக்கு பணம் தந்திருக்கிறார்கள் என்பதை வேதனையோடு குறிப்பிடுகிறேன் என்று நீதிபதி சொன்னபோதே வழக்கு கிட்டத்தட்ட செந்தில் பாலாஜிக்கு சாதகமாக இல்லை என்பது தெரிந்து விட்டது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜிக்கு வாதாடிய வழக்கறிஞர் கபில் சிபில் மீதும் கருணை காட்டினார் நீதிபதி கார்த்திகேயன். கபில் சிபல் திடீரென வாதத்தை நிறுத்திவிட்டு நேற்றுதான் சிகிச்சை முடித்து திரும்பினேன். இப்போது நான் கொஞ்சம் அசௌகரியமாக இருப்பதாக உணர்கிறேன் என்று சொன்ன போது நீதிபதி கார்த்திகேயன் இது பள்ளியோ கல்லூரியே கிடையாது நீங்கள் ஓய்வெடுங்கள் சிறிது நேரம் கழித்து வழக்கை தொடரலாம் என்று சிறிது நேரம் வழக்கை ஒத்தி வைத்தார் நீதிபதி கார்த்திகேயன்.

நீதிபதி கார்த்திகேயன் தனது தீர்ப்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தான் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று குறிப்பிட்டார். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி கைது செய்வதற்கான காரணங்களை அவரிடம் சொல்லவில்லை என்று சொல்வது ஏற்க முடியாது அமலாக்கத்துறை அதிகாரிகள் காலையிலிருந்து செந்தில் பாலாஜியை விசாரணை செய்திருக்கிறார்கள். அப்போது அவரிடம் எதற்கு விசாரணை ஏன் கைது செய்கிறோம் என்று சொல்லாமல் எப்படி இருந்திருப்பார்கள் என்று கேட்டார். நீதிபதி கார்த்திகேயன் கைதுக்கான காரணம் செந்தில் பாலாஜிக்கு தெரியாது என்பதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டார். அமலாக்கத்துறைக்கு செந்தில் பாலாஜி விசாரிக்க காவலில் எடுக்க சட்டப்படி அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதி இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆட்கொணர்வு மனு ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல நீதிபதி பரத் சக்கரவர்த்தியின் தீர்ப்போடு நான் உடன்படுகிறேன் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நீதிமன்ற காவல் எல்லாம் சட்டப்படி சரிதான் என்று சொல்லி தான் செஷன்ஸ் நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமினை நிராகரித்து இருக்கிறது என்று சுட்டிக் காட்டினார். நீதிபதி .நீங்கள் விசாரணையை தடுக்க முடியாது அவர் நிரபராதி என்றால் அதற்கான ஆதாரங்களை தந்து நீதிமன்றத்தில் நிரூபியுங்கள். அமலாக்கத்துறை விசாரணை நடத்த கைது செய்ய அதிகாரம் உள்ள ஒரு அமைப்பு தான். அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது உச்ச நீதிமன்றத்தின் தொடர் நடவடிக்கையாக தான் பார்க்க வேண்டும் அது தவறு என்று எப்படி சொல்ல முடியும் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி கார்த்திகேயன்.

நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் செந்தில் பாலாஜி தற்போது அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையின் நாலாவது மாடியில் உள்ள தனி அறையான அறை எண் 435க்கு மாற்றப்பட்டுள்ளார். பைபாஸ் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மூன்று வார காலம் அவர் மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பார் என்கிறார்கள். இப்போது தினமும் நடைப்பயிற்சி யோகா தியானம் என்று தனது அறையிலேயே செய்து பழகி வருகிறார் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜி பற்றிய மருத்துவ அறிக்கை இன்னும் முறையாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதேபோல் ஜூன் 16-ஆம் தேதிக்கு பிறகு கிட்டத்தட்ட 26 நாட்களாக செந்தில் பாலாஜி சந்திக்க சிறைத்துறையிடம் யாரும் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை யாரும் அவரை சந்திக்கவும் இல்லை. இவை எல்லாவற்றையும் அமலாக்கத்துறை கண்காணித்து வருகிறது.இப்போது அவரை விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி தந்து விட்டது எப்போது வேண்டுமானாலும் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை தனது கஸ்டடியில் கொண்டு வரும் இந்த தீர்ப்புக்காக தான் அமலாக்கத்துறை பொறுமையாக காத்திருந்தது இதுவரை இனிமேல் அமலாக்கத்துறை ஆட்டம் ஆரம்பமாகும்.