தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

ஜெயிலர்

20230614081432308.jpeg

ஜெய்லர் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இந்த மாதம் 29-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் விழா நடக்கும் என்கிறார்கள்.

இந்த விழாவிற்கு மோகன்லால் சிவராஜ் குமார் தமன்னா ஜாக்கி ஷரப் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்தை அழைத்து பிரமாண்டப்படுத்த திட்டமாம்.

திரிஷா

20230614081900218.jpeg

ஐடென்டி என்ற மலையாள படத்தில் நடிக்கிறார் நடிகை திரிஷா. இது திரிஷாவின் இரண்டாவது மலையாள படம்,

காதல் மன்னனுடன் நயன்தாரா

20230614174007983.jpeg
டைரக்டர் அட்லீ நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பிரமோ வீடியோ வெளியாகி சமுக வலைதளங்களில் வரவேற்பை பெற்று உள்ளது. ஜவான் படத்தின் டிரைலரை பார்த்த விக்னேஷ் சிவன், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டி, பதிவு வெளியிட்டிருந்தார்.
விக்னேஷ் சிவனின் இந்த பதிவை பார்த்த ஷாருக்கான் இந்த படத்தில் நடித்ததன் மூலம், சண்டை போடுவதற்கு நயன்தாரா கற்றுக் கொண்டார் எனவே, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் விக்னேஷ் சிவன் என்று நகைச்சுவையாக தெரிவித்து இருந்தார்.
ஷாருக்கான் பாராட்டை பார்த்த விக்னேஷ் சிவன் ஆமாம் சார் மிகவும் கவனமாக இருக்கிறேன். படத்தில் உங்கள் இருவருக்கும் இடையே நல்ல காதல் காட்சி இருப்பதாக கேள்விப்பட்டேன், நயன்தாரா காதல் மன்னனிடம் இருந்து கற்றுக்கொண்டாள், எனவே அத்தகைய கனவில் உங்களுடன் அறிமுகமான மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என்று விக்னேஷ் சிவன் நன்றி மெசேஜ் சமுக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

மிருனாள்

20230614161624886.jpg

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் மிருனாள் தாக்கூர் கதாநாயகி.

சாய் பல்லவி

20230614161829871.jpg

இன்னும் பெயரிடாத படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அமர்நாத் கோயில் பனி லிங்கத்தை தரிசித்தார் சாய் பல்லவி கூடவே ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார் சாய் பல்லவி.

10 கோடி பார்வையாளர்கள்

20230614162506712.jpeg

கேஜிஎப் புகழ் இயக்குனர் பிரசாந் நீல்சாலர் என்ற படத்தை இயக்குகிறார் .இது ஒரு பான் இந்தியா படம். இதில் பிரபாஸ், பிரித்திவிராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். இதன் டீசர் ஜூலை ஆறாம் தேதி வெளியானது. இதுவரை 10 கோடி பார்வையாளர்களை இந்த டீசர் கவர்ந்திருக்கிறது.

செல்வராகவன்

20230614162638107.jpg

தனுஷ் இயக்கி நடிக்கும் ஐம்பதாவது படத்தில் அவரது சகோதரர் செல்வராகவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் எடுக்கப்படுகிறது

லால் சலாம்

20230614082853410.jpg

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் வேடத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். மொத்தம் 20 நிமிடம் தான் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் இதற்கான படப்பிடிப்பு மும்பை மற்றும் திருவண்ணாமலையில் நடந்து நிறைவடைந்தது.

ஐம்பதாவது படம்

20230614162812272.jpg

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படத்துக்கு மகாராஜா என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இந்தப் படத்தை இயக்குகிறார். அனுராக் காஷ்யப் மம்தா மோகன்தாஸ் நட்டி அபிராமி அருள்தாஸ் முனீஸ் காந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.

விஜய்

20230614082310870.jpg

விஜய் நடிக்கும் எழுபதாவது படத்தை சங்கர் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு அரசியல் படமாக இருக்குமாம். அதேசமயம் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்காக மூன்று வருடம் சினிமாவிற்கு ஓய்வு என்ற பேச்சும் வரத் தொடங்கியிருக்கிறது.

விருது

20230614163016268.jpg

பிரெஞ்சு பன்னாட்டு பட விழாவில் உதயநிதி தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே படத்திற்கு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கு, சிறந்த நடிகை விருது தமன்னாவிற்கு, சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கு என்று மூன்று விருதுகள் கிடைத்து இருக்கிறது.

சிவகார்த்திகேயன்

20230614163155154.jpg

பெரிய இயக்குனர்கள் இப்பதான் என்னை தேடி வருகிறார்கள் என்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். மாவீரன் ட்ரெய்லர் விழாவில் நடிகை சரிதா சிவகார்த்திகேயனை நடிகர் ரஜினியுடன் ஒப்பிட்டு பேசினார். இயக்குனர் மிஷ்கின் பேசும்போது அதை ஆமோதித்தார்.

மீண்டும் மீரா ஜாஸ்மின்

2023061408214550.jpg

ரன், சண்டைக்கோழி போன்ற படங்களில் நடித்த மீரா ஜாஸ்மின் திருமணத்துக்குப் பிறகு நடிக்க வரவில்லை. இப்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். தமிழில் விமானம் படத்தை அடுத்து டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் கவர்ச்சி வேடம் என்றால் தாராளமாக என்னை அழைக்கலாம் என்கிறார் மீரா ஜாஸ்மின்.