தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20221014181425595.jpeg

Heading : மீண்டும் அவதார் - ஜேம்ஸ் காம்ரூன் சிருஷ்டிக்கும் அற்புத உலகம். - ராம்.

Comment : பண்டோரா என்ற அற்புதமான, மயக்கும் காட்டுக்குள் இருந்து, தண்ணீர் உலகை சிருஷ்டித்த, புதிய கற்பனை உலகத்தில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அதிசய மிருகங்களையும், செடி கொடி மலர்களையும், மனிதர்களையும், பறவைகளையும், இடத்தையும் பார்க்க வைத்த ஜேம்ஸ் அடுத்ததாக எங்கெங்கு அழைத்து செல்வாரோ என்ன உருவாக்குவாரோ என்ற எதிர்பார்ப்பு நாங்கள் படம் பார்க்கும்போதே எகிறி போயிருக்கிறது. அடுத்தடுத்து 3டி கிளாஸ் வழியே பார்க்க தயாராகிவிட்டோம்!

கௌஷிக், தீட்சிதா, சாய்கிருஷ்ணா, சென்னை

Heading : வலையங்கம்

Comment : 'லஞ்சம் தொடர்பான வழக்கில், சட்டத்தின் சந்துபொந்துகளில் புகுந்து இனி லஞ்சப் பேர்வழிகள் தப்பிக்க முடியாதபடி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 'செக்' வைத்துவிட்டது. இனி லஞ்ச வழக்கில் முறையீடு, மேல்முறையீடு, ஜாமீன் போன்றவற்றுக்கு இத்தீர்ப்பு முற்றுப்புள்ளி வைக்குமா?' என்ற விகடகவியின் வலையங்க கேள்வி வரிகளுக்கு விடை கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.

ராதா வெங்கட், பெங்களூரு

Heading : வாழ்க்கை இது தான்

Comment : கோபத்தை தூக்கி எறிபவனே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்ற வரிகள் அனைவரின் மனதிலும் விதையாக பதியவேண்டிய வரிகள். மிகச் சிறப்பு!

ஜெயசீலன், ரவிக்குமார், கோவை

Heading : அரவணைப்பு - சிறுகதை - பா அய்யாசாமி

Comment : அரவணைப்பு சிறுகதையில் 'என்ன... ஐயா இவ்வளவு நல்லவங்களா இருக்காங்க', 'நீங்க நல்லவரு ஐயா ! அதனாலதான் எல்லாரும் உங்களுக்கு நல்லவங்களா தெரியறாங்க போல..', 'நீங்க நல்லா செய்யறீங்க ஐயா!' என்ற அய்யாசாமியின் கிண்டலான வரிகள் காவல் துறை ஆய்வாளரின் நேர்மை குறித்து நெகிழ் வைத்தது.

மாயா குப்புசாமி , ஊத்துக்கோட்டை