தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

20221124103010336.jpg

ஜி எஸ் டி என்பது தொடர் சர்ச்சையாகி வருகிறது. இப்போதும் மாநிலங்கள் தங்களுக்கு தரவேண்டிய ஜி எஸ் டி வரி இழப்பு நிலுவை தொகையை வழங்காமல் மத்திய அரசு இழுத்தடிக்கிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் என்ற அறிவிப்பு வெளியானாலே ஏதாவது புது வரி இருக்குமோ என்ற அச்சம் பொது மக்களுக்கு இப்போது வரத் தொடங்கி இருக்கிறது. ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்தில் புது வரி இல்லை என்பதை இப்போது ஊடகங்களை தலைப்புச் செய்தியாக சொல்லத் தொடங்கி இருக்கிறது. வரி வருமானம் என்பது மக்களை சுரண்டுவது என்ற அளவில் தான் இப்போதைய வரிவிதிப்பு முறை இருக்கிறது என்பதுதான் உண்மை.

கடந்த 70 ஆண்டுகளில் காதிப் பொருட்களுக்கு வரிவிதிப்பு இல்லை. இப்போது காதிப்பொருட்களுக்கு 5% முதல் 18 %வரை ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. வேப்பம் புண்ணாக்கு கூட 5% ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது. இதனால் பல காதிவஸ்திராலயா நிலையங்கள் மூடப்பட்டது ஆட்குறைப்பு போதிய சம்பளம் இல்லை என்ற அளவில் ஜி எஸ் டியின் தாக்கம் காதி என்ற சர்வோதய அமைப்பை மூடு விழா நடத்த தள்ளி இருக்கிறது. அரசாங்கம் காதி மற்றும் கைத்தறிகளுக்கு சலுகைகள் வழங்கும். கைத்தறியை வார விழா கொண்டாடி காதி மற்றும் கைத்தறியைப் போற்றி பாதுகாக்கும். ஆனால், ஜி எஸ் டிக்கு கைத்தறி காதியின் அவசியம் தெரிய வாய்ப்பில்லை. அதற்குத் தெரிந்ததெல்லாம் வரி மேலும் வரி என்பதுதான். இந்தியா கிராமத்தில் வாழ்கிறது என்றார் தேசப்பிதா காந்திஜி இப்போது கிராமமும் இல்லை காதி கைத்தறியும் இல்லை இதுதான் இந்த அரசு காந்திஜிக்கு செலுத்தும் நன்றி கடன்.