தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம்

20221109164033622.jpeg

குழந்தைகளிடம் பேசுங்கள்

பெங்களூரில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்த போது கிடைத்த பொருட்கள் என்னென்ன தெரியுமா சிகரெட் பாக்கெட், போதை பாக்குகள், கட்டு கட்டாக பணம் இதெல்லாம் மாணவர்கள் புத்தகப் பையில் இருந்தது மாணவிகளின் பைகளை சோதனை போட்ட போது கிடைத்த பொருட்கள் காண்டம் கருத்தடை மாத்திரைகள் குடிநீர் பாட்டிலில் மது தமிழ்நாட்டில் மாணவ மாணவிகளின் புத்தகப் பையை சோதனை போட்டாலும் இவையெல்லாம் இருக்கக் கூடுமோ என்று நெஞ்சம் பதறுகிறது. மது குடிக்கும் மாணவிகள் சிகரெட் பிடிக்கும் மாணவிகள் இப்படி தாங்கள் ஒழுக்க நெறி தவறி தடம் புரண்டு போவதை பற்றிய எந்த கூச்சநாச்சம் இல்லாமல் வீடியோவாக எடுத்து பெருமையாக வெளியிடுகிறார்கள் மாணவர்களின் இந்த போக்குக்கு காரணம் என்ன என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

எம்ஜிஆர் ஒரு படத்தில் புலமைப் பித்தனின் வரிகளில் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவன் நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பிலே என்று பாடியிருப்பார். இதை ஒரு சினிமா பாட்டு என்று நாம் பார்த்துவிட்டு கடந்து விட முடியாது இதுதான் உண்மை. ஒரு குழந்தையைப் பத்து மாதம் தனது வயிற்றில் சுமந்த தாய் தான் அவர்களை சரியான வழியில் அழைத்துச் செல்லும் பொறுப்பும் கடமையும் அவருக்குத்தான் உண்டு.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டும் என் பையன் தப்பு செய்ய மாட்டான் என் மகள் அப்பாவி என்று சொல்வதெல்லாம் இப்போதைய சூழலில் அது வெறும் மூடநம்பிக்கை என்று ஆகிவிட்டது என்பதை பல நிகழ்வுகள் நிரூபித்து விட்டன. குழந்தைகளுக்கு வீட்டில் ஒரு முகம் வெளியில் இன்னொரு முகம் என்ற வகையில் தான் அவர்கள் செயல்பாடு இருக்கிறது. எனவே நாம் தோழமையுடன் மனம் விட்டு பேச வேண்டும் அவர்களுக்கு எதார்த்த சூழலை புரிய வைக்க வேண்டும் அவர்களை தெளிவுபடுத்த வேண்டும் இது உங்கள் மகன் அல்லது மகளுக்கு செய்யும் கடமையாக மட்டுமல்ல இதை ஒரு சமூக கடமையாக பெற்றோர்கள் பார்க்க வேண்டும்.அது உங்கள் பொறுப்பும்கூட