நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசின் கேள்விக்கு உரிய விளக்கம் தரப்படும் அமைச்சர் மா. சுப்ரமணியம்
விளக்கம் தருவோம் ஆனா விலக்கு கேட்கமாட்டோம்.
தமிழகத்தில் மூன்று நாட்கள் ராகுல் காந்தி பாத யாத்திரை செய்ய உள்ளார்.
வெளிநாட்டு யாத்திரை நடுவுல உள்நாட்டு யாத்திரையும் உண்டு.
எடப்பாடி நாளை டெல்லி பயணம்
அப்ப இனிமே வருமான வரி சோதனை ரோதனை எல்லாம் நின்னு போயிடும்.
ஜெயலலிதாவின் செங்கோல் வெள்ளி சிலை திருட்டு
சட்டம் ஒழுங்கு சரியில்லை என அறிக்கை வெளியிட வேண்டியது தான்
ஆவின் நெய் லிட்டருக்கு 45 ரூபாய் விலை உயர்வு
ரொம்ப நன்றி ஜி.எஸ்.டி
மத்திய அரசை காரணம் காட்டி மின் கட்டணத்தை உயர்த்துவது எதிர்வினை ஏற்படுத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
அதாவது பாராளுமன்ற தேர்தலில் தோற்று போய்விடுமோ என்று பயப்படுகிறார்.
திமுக இளைஞரணி செயல்பாடு தொடரட்டும் முதல்வர் ஸ்டாலின்
இதுக்காக அமைச்சர் பதவி துணைமுதல்வர் பதவி தாங்க என்று டிஸ்டர்ப் பண்ண கூடாது
மாணவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் சான்றிதழ் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அச்சச்சோ அவங்க வருவாய் இல்லாமல் சான்றிதழ் தர மாட்டாங்களே ரொம்ப கஷ்டம்.
மாவட்ட நிர்வாகம் காவல்துறை அலட்சியத்தால் கள்ளக்குறிச்சி பள்ளி போர்க்களமானது வைகோ
அதாவது இதற்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று அண்ணன் சொல்கிறார்.
என்னால் யாரும் நஷ்டம் அடைந்தது இல்லை கமல்ஹாசன்
டெபாசிட் தான் போகும் என்கிறார் ஒரு வேட்பாளர்
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
இறந்தவர் குடும்பத்திற்கு ஒரு கோடி நஷ்ட ஈடு சிபிஐ விசாரணை சட்டம் ஒழுங்கு சரியில்லை இப்படியெல்லாம் பேசக் கூடாதாம்
யாரோ செய்த தவறுக்கு எந்த தவறும் செய்யாத மக்களை தண்டிப்பது நியாயமில்லை டாக்டர் ராமதாஸ்
அது எப்படி ஓட்டு போட்டது தவறுதானே என்கிறார் ஒரு அரசியல் தலைவர்.
Leave a comment
Upload