வாரிசு படம் அமோக வியாபாரம்
2023 பொங்கல் திருநாளில் வாரிசு படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. நான்கு மொழிகளில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு உரிமை சன் டிவி வாங்கி இருக்கிறது. இதற்கு 67 கோடி ரூபாய் இணைய ஒளிபரப்பு உரிமை அமேசான் நிறுவனம் 100 கோடி என்று வியாபாரம் ஆகி இருக்கிறது. இது வரை நடித்த விஜய் படங்களில் வாரிசு படத்துக்கு ஒளிபரப்பு உரிமை மூலம் இவ்ளோ பணம் கிடைப்பது இதுவே முதல் தடவையாகும்.
வில்லன் சத்யராஜ்
மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்க சத்யராஜ் விரும்புகிறார். இதற்காக தன்னை சந்திக்க வரும் இயக்குனர்களிடம் தன்னுடைய விருப்பத்தை தொடர்ந்து சொல்லி வருகிறார். வில்லனாக அறிமுகமான சத்யராஜ் கதாநாயகனாக உருமாறி இப்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த வேடங்கள் எல்லாம் அலுத்துப்போய் வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறார். என்னவோ அதே சமயம் இயக்குனர் சங்கர் சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க முதலில் சத்யராஜை தான் அணுகினார். அப்போது அவர் மறுத்துவிட்டார்.
மீண்டும் கவுண்டமணி
ஒரு காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த கவுண்டமணி மெல்ல படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இதற்கு அவரது வயதும் ஒரு காரணம்.கடந்த ஆறு வருடங்களாக அவர் நடிப்பதை நிறுத்தி விட்டார். ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மாவீரன் படத்தில் கவுண்டமணி நடிக்க வேண்டுமென்று விருப்பப்பட்டு அவரிடம் நேரில் சொல்லி சம்மதம் வாங்கி விட்டார் சிவகார்த்திகேயன்.
சந்திரமுகி இரண்டாம் பாகம் தொடக்கம்
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படப்பிடிப்பு மைசூரில் பூஜையுடன் தொடங்கியது. இந்தப்படத்தில் வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். படப்பிடிப்புக்கு முன் ராகவா லாரன்ஸ் ரஜினியை சந்தித்து வாழ்த்து வாங்கினார்.
எனக்கா கல்யாணம்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நித்யா மேனன் நடிகர் விஜயுடன் இணைந்து மெர்சல் படத்தில் நடித்திருக்கிறார். தற்போது தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலத்தில் மூன்று கதாநாயகிகளில் நித்யா மேனனும் ஒருவர். திடீரென்று இவருக்கு திருமணம் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது உடனே செய்தியாளர்களை எல்லாம் அழைத்து இதுபோன்ற செய்திகளை எல்லாம் வெளியிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு உண்மையா என்று விசாரித்து செய்தியை வெளியிடவும். இப்போது நீங்கள் வெளியிட்ட செய்தி பொய் என்று அறிவுரை சொல்லி அனுப்பி இருக்கிறார் நித்யா மேனன்.
Leave a comment
Upload