1.1990 - 2022 காதல் என்ன வித்தியாசம்?
கி.மு. 2022 -1990 ல் காதல் எப்படி இருந்ததோ அதே கதை தான் இப்போதும். காதலில் 'அசடு வழிவது' சாஸ்வதமானது. அந்த காலத்தில் புறாவின் காலில் காதல் கடிதத்தை பிணைத்து அனுப்பினார்கள் இப்போது எஸ்எம்எஸ் ட்விட்டர் என்று வந்துவிட்டது. மற்றபடி (நிஜ )காதலின் வீரியம் ஒரே மாதிரி தான்!
2. உங்களுக்கு பிடித்தது அம்மா சமையலா, உங்கள் திருமதி சமையலா?
அம்மா வேகமாக சமைப்பாள். திருமதி நிதானம். மற்றபடி போகப்போக இருவர் சமையலும் ஒரே மாதிரி ஆகிவிட்டது! (வேண்டாம் வம்பு!)
3. பூமிக்கு அடிக்கடி வரும் ஏலியன்களால் நமக்கு நல்லதா? கெடுதலா?
ஏலியன்களை பார்த்தேன் என்று சிலர் சொல்வதுண்டு. அது கற்பனை, பிரமை அல்லது உடான்ஸ் தான் ஆனால் அண்ட வெளியில் பல கோடி கிரகங்கள் உண்டு. அதில் பூமியை போன்ற கிரகங்களும் இல்லாமல் இருக்காது. அங்கே ஏலியன்கள் இருக்க வாய்ப்புண்டு என்று நம்புகிறவன் நான். ஆனால் அங்கே இருந்து நம் கிரகத்துக்கு வர அந்த ஏலியன்களுக்கு 10 ஆயிரம் வருடத்திற்கு மேல் பிடிக்கும். சான்சே இல்லை!
4. நீங்கள் படிக்க விரும்பி இன்னும் படிக்காத புத்தகம் எது?
முழுசாக மகாபாரதம் ஒரிஜினல்!
5. இன்றைய சூழலுக்கு ஏற்ற ஒரு மதன் கேரக்டரை உருவாக்குவீர்களா? உருவாக்கினால் என்ன பெயர் வைப்பீர்கள்?
உருவாக்கும்போது திடீரென்று தோன்றும்! (நைசாக என்னை நீங்கள் உள்ளே இழுக்க பார்க்காதீர்கள்!)
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
Leave a comment
Upload