தொடர்கள்
தொடர்கள்
ஜெர்மன் டயரி - இந்த வாரம் பவாரியன் ஆல்ப்ஸ். - கார்த்திக் ராம்

20220622154727196.jpeg

வணக்கமுங்க!

தெற்கு ஜெர்மனியின் பவாரியன் ஆல்ப்ஸ் (Bavarian Alps) என்று சொல்லக்கூடிய ஒரு மலை பகுதியில் இருக்கிறதுதான் கார்மிஸ் பார்டென்கிர்க்ஹென் (Garmisch-Partenkirchen) என்கிற ஊர். மலைக்கு அந்தப்புரம் ஆஸ்திரியா, இந்தபுரம் ஜெர்மனி. அதென்ன ஆல்ப்ஸ், அப்படின்னு ஒரு கேள்வி வரும். ஆல்ப்ஸ் அப்படினா ஒரு உயரமான மலை பகுதின்னு அர்த்தம், அவ்ளோதான். இந்த பவாரியன் ஆல்ப்ஸ்ங்கறது பல நாடுகள்ல பரவியிருக்குற சுமார் இரண்டு லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு மலை தொடரை சேர்ந்தது. மேற்கே பிரான்சில் ஆரமிச்சு கிழக்கே சுலோவேனியா வரைக்கும் போகுதுன்னா பாருங்களேன். ஒவ்வொரு சதுர மீட்டர்லயும் கண்கொள்ளா அழகு நெறஞ்சிருக்கும். அதுல கார்மிஸ் பார்டென்கிர்க்ஹென் இன்னும் அழகு. ரயில்வே ஸ்டேஷன் உள்ள வரும் போதே உங்கள பிரமிக்க வைக்கும். இப்ப முடிஞ்ச G7 மாநாடு கூட இங்க பக்கத்துல தான் நடந்துச்சு.

20220622154805543.jpeg

சரி, படம் போட்டதெல்லாம் போதும் கருத்து எங்கன்னு கேக்கறீங்க, புரியுது. இந்த ஊர்ல பார்ட்னாக்ஹ் க்லாம் (Partnachklamm) அப்படின்னு இரண்டு மலை விரிசல்க்கு நடுவில ஓடற ஒரு பெரிய ஓடை ஒன்னு இருக்கு. அந்த அழக பாக்க தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வராங்க. இன்னும் கருத்து வரலையே அப்படிங்கிறீங்களா, கொஞ்சம் பொறுமை. இந்த ஓடைய பாக்க ஆள் ஒண்ணுக்கு ஆறு யூரோ (தோராயமா 500 ரூபாய்) வசூலிக்கிறாங்க.

20220622154843571.jpeg

நீங்க வாய பொளக்கிறது எனக்கு இங்க இருந்தே தெரியுது. ஆனா அவங்க அந்த காச வச்சி, அந்த பகுதியை ரொம்ப அருமையா பராமரிச்சி வச்சிருக்காங்க. நான் என்ன சொல்றேன்னா, நம்ம ஊர்ல இருக்கிற ஒகேனக்கலுக்கு வெறும் ஆறு ரூவா ஒரு ஆளுக்கு வாங்கினா, கூட்டம் கம்மியாகும் ஆறும் சுத்தமா இருக்கும். அந்த காசை வச்சி பீர் பாட்டிலையும் சிப்ஸ் பாக்கெட்டையும் சுத்தம் பண்ணலாம். என்ன சொல்றிங்க? போடா வென்னைனு நீங்க மைண்ட்ல திட்றது எனக்கு கேட்குது.

20220622154939384.jpeg

சரி, இப்ப படங்களை பாத்து என்ஜாய் பண்ணுங்க, மீண்டும் அடுத்த வாரம் இன்னொரு சுவாரசியமான செய்தியோடு. அது வரை, பாதுகாப்பா ஆரோக்கியமா இருங்க.