தொடர்கள்
தொடர்கள்
ப்ராக்டிகல் சீரீஸ் – 21 ஆடி என்னும் ஃபீலிங்….   மாலா ரமேஷ்

20220623174604472.jpg

ஆடி மாசம் பொறந்துடுச்சு….பலருக்கும் குஷிதான்…..கிராமத்துலேந்து சிட்டி வரயிலயும்எல்லா எடமும் களை கட்டும்….

ஆடி மாசம் பிறக்குறதுல ஆரம்பிச்சு, மாசம் பூரா நிறைய முக்கியமான விஷயங்கள் இருக்கும்… “ ஆடி அழைக்கும்…தை தொடைக்கும்” னு ஊர்பக்கத்துல சொல்லுவாங்க….ஆடிமாசத்துலேந்து வரிசையா நிறய பண்டிகைங்களும் திருவிழாக்களும் வந்து தை மாசம்பொங்கலோட முடியும் அதுக்குப் பிறகு இந்த அளவுக்கு நிறைய விசேஷங்கள் இருக்காது…அதான் அப்படி ஒரு பேச்சு….

டிவியப் போட்டா ஆடி சேல் விளம்பரமாப் போட்டுத் தாக்குவாங்க….இப்ப இன்டெர்னெட்லயும் இந்த விளம்பரங்கள் வருது..முன்னலாம் துணிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோகப்பொருள் மாதிரி இடங்கள்ள ஆடி சேல் விளம்பரம் பெரிசா இருக்கும்….இப்பஇது அதுன்னெல்லாம் இல்லங்க….ரியல் எஸ்டேட்., பாத்திரக்கடைலேருந்துபரோட்டாக்கடை வரைக்கும் எல்லாத்துலயும் ஒண்ணு ஆடித்தள்ளுபடி அப்படி இல்லன்னா, ஏதாவது எக்ஸ்ட்ரா ஐயிட்டம் சேத்துக்குடுக்கிறது….இப்படி ஏதாவது வராம இருக்கிறதேஇல்ல….

துணி மணி வாங்கறது வருஷத்துல ஒரு தடவை ரெண்டு தடவ இருக்கும்போது மக்கள் இந்தத்தள்ளுபடிக்காகக் காத்திருந்து வாங்குவாங்க….இப்பல்லாம் ஆன்லைன்ல எப்பவுமேதள்ளுபடின்னு போடறதால, இந்த தள்ளுபடியால லாபநஷ்டம் இருக்குதான்றதெல்லாம் ஒருபக்கம்….அதெல்லாம் தாண்டி, ஆடி சேல்ன்றது ஒரு உணர்வு….அதுக்காகவே கூட்டமானஅந்த கடைகள்ள போயி வாங்கறது புடிக்கும்னு சொல்லி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு , இந்த கொரோனா வேற அப்பப்ப…”ம்…நாம் இன்னும் போகலப்பூ…. உங்கூருலதான்இருக்கேன்….” அப்டினு பயம்காட்டுது…

கிராமத்துக் கோயில்ல இருந்து நகரத்துக் கோயில் வரைக்கும் எல்லாத்துலயும் கூழ் ஊத்தறது, பொங்கல் வைக்கிறதுன்னு அமர்க்களப்படும்…தானத்துல சிறந்தது அன்னதானம்….நிறையஇடங்கள்ள அன்னதானம் நடக்கும்….

ஆடிவெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு முக்கியம்னா ஆடிகிருத்திகை முருகப்பெருமானுக்குச்சிறப்பான நாள்….

ஆடி அமாவாசை ரொம்ப முக்கியமானது… அவங்கவங்க மூதாதையருக்கு திதி குடுக்கிறத ரொம்ப அக்கறையோட செய்யறதால, இந்த மாதிரியான பழக்கவழக்கங்கள அடுத்ததலைமுறைய சேர்ந்தவங்களும் நடைமுறையில பாத்துத்தெரிஞ்சிக்கமுடியும்….

ஆத்துல தண்ணி ஓடுதோ இல்லையோ​ஆடிப்பெருக்குன்றது ஒரு உணர்வு. கொஞ்சம் கொஞ்சமா மரபுகள் மாறிட்டும் மறந்துட்டும் வர்ர காலமா இருந்தாலும், அதைஃபாலோ செஞ்சு அடுத்த தலைமுறைக்குக் கடத்தும்போதுதான் எது என்னன்றது தெரியும்இல்லையாப்பூ….?

புதுமணத்தம்பதிகளுக்குதான் ஆடி ஒரு சவாலா இருக்கும்....ஒரு கேப்புக்குப் பிறகு, பையன்திரும்பவும் தன்னுடைய இடத்துல தனியாவும் பொண்ணு பழையபடி அம்மா வீட்டுலயும்இருக்கிறது அவங்களோட நன்மைக்குன்னு சொல்லி வச்சிருக்கிறதால , அதை இப்பவும் சிலபேர் கடைபிடிக்கிறாங்க..

மொத்தத்துல ஆடி மாசம்ன்றது …வெறும் மாசம் மட்டும் இல்ல…நம்ம மக்களோடஃபீலிங்….அதை முழுசா அனுபவிப்போம்….அடுத்த வாரம் பார்க்கலாம்….