ஊட்டி நகராட்சி உலகத்திலே மிக முக்கிய ஸ்பெஷல் நகராட்சி.
பிரிட்டிஷ் கோயம்பத்தூர் கலெக்டர் ஜான் சல்லிவன் கண்டுபிடித்த ஒரு மலை ஊர் தான் ஊட்டி இதை மிகவும் அழகாக உருவாக்கின பெருமை பிரிட்டிஷாரைத் தான் சேரும் .
முதல் நகர மன்றத்தை உருவாக்கினவர்களும் பிரிட்டிஷார் என்பது பெருமையான ஒன்று தான் . முக்கியமாக இந்த வருடம் ஜூன் 1 ஆம் தேதி ஊட்டி என்ற மலையை கண்டுபிடித்து 200 வருடங்கள் உருண்டோடிவிட்டன .
மே மாதம் மலர் கண்காட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் ஊட்டி 200 ஆம் ஆண்டை முறைப்படி துவக்கி வைத்து சென்றார் .
ஊட்டி 200 ஆம் வருடத்தின் ஆக்கபூர்வமான பெருமை ஊட்டி நகராட்சியை தான் சேரும் . 36 கவுன்சிலர் களை உள்ளடக்கிய சிறப்பு நகர மன்றம் தான் ஊட்டி .
முப்பத்திஆறு நகர்மன்ற உறுப்பினர்களில் மிகவும் சிறப்பு பெற்றவர் என்று சொன்னால் 7 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் விசாலாட்சி என்று சொன்னால் ஆச்சிரியமாக இருக்கும் .
விசாலாட்சி நகர மன்ற உறுப்பினராக தேர்வு செய்வதற்கு முன்பே ஒரு டாக்டர். கொசு ஒழிப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டு பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது நகர் மன்ற உறுப்பினர்களுக்கே தெரியாது .
கொசு ஒழிப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்ற விசாலாட்சியை அவரின் இல்லத்தில் சந்தித்தோம் . ரொம்பவே சிம்பிளாக நம்மிடம் பேசினார் .
" நான் கோவையை சேர்ந்தவள் ராமநாதபுரம் தான் எங்க வீடு நான் ஸ்கூல் படித்தது எங்க கிராமமான நஞ்சுண்டாபுரம் அரசு பள்ளியில் தான் பின்னர் கொங்கு நாடு கல்லூரியில் பி எஸ் சி , எம் எஸ் சி விலங்கியல் படித்த பின் எம் பில் படித்து முடித்தேன் .
அதற்கு பின் தான் பி எச் டி ஊட்டி அரசு கல்லூரியில் விலங்கியலில் கொசு ஒழிப்பு பற்றிய ஆராய்ச்சி செய்து அதில் முனைவர் பட்டத்தை பெற்றேன் . இதற்கு முழு உதவி காரணம் என்னுடைய கைடு பேராசிரியர் ஜெயபாலன் தான் .
நீலகிரி மலை முழுவதும் ஏராளமான மூலிகைகள் சூழ்ந்து காணப்படுகின்றன . இயற்கையாகவே வளரும் மூலிகை செடிகள் அபாரமான மருத்துவ குணங்களை கொண்டது என்பது பலருக்கு தெரிந்திருந்தாலும் ஆராய்ட்ச்சியில் இறங்கும் போது தான் ஆச்சிரியமான மருத்துவ குணங்கள் தென்படுகின்றன .
நான் கோவை மண்ணை சேர்ந்தவள் கொசு தொல்லை எப்படிப்பட்டது என்பதை நன்கு அறிந்தவள் . உங்களுக்கு தெரியும் கொசு உற்பத்தியாவது தேங்கி நிற்கும் சாக்கடை நீரில் தான் .
ஒரு காலத்தில் தலைப்பிரட்டை மற்றும் தவளைகள் அதிகமாக இருந்தன . தற்போது அவைகளை தேட வேண்டியுள்ளது . எங்காவது உங்களால் பார்க்க முடிகிறதா ? .இந்த ஜீவன்கள் தான் கொசு ஒழிப்பை மிக லாவகமாக செய்து வந்தது அவைகளுக்கு கொசு ஒரு நல்ல சுவையான உணவாக இருந்தது . தற்போது அவை காணவில்லை ஏன் தெரியுமா நாம் வீடுகளில் யூஸ் செய்யும் குளியல் சோப் , பாத்திரங்களை கழுவும் டிடெர்ஜென்ட் பவுடர் , சோப்பு , துணிகள் துவைக்க பயன் படுத்தும் டிடெர்ஜென்ட் வகைகள் கழிவில் சாக்கடைகளில் சென்று கலக்க கெமிக்கல் பாதிப்பால் இந்த தலைப்பிரட்டை மற்றும் தவளை கள் மடிந்து காணாமல் போய்விட்டதின் விளைவு கொசு சுதந்திரமாக தன் இன பெருக்கத்தை அதிகரிக்க துவங்கிவிட டெங்கு , மலேரியா போன்ற ஆபத்தான நோய்கள் நம்மை தாக்க துவங்கி விட்டன .
ஒரு விஷயம் பெண் கொசு தான் மனிதனை கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது காரணம் நம் ரத்தம் தான் அதன் முட்டை உற்பத்திக்கு ஏற்றது இன பெருக்கம் செய்ய எதுவாக இருக்கிறது .
மிகவும் தொல்லை கொடுக்கும் கொசுக்கள் மூன்று வகை அனோபலஸ் மலேரியாவை உண்டு பண்ணும் கொசு , ஏடிஸ் இது தான் ஆபத்தான டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசு மற்றது கியூலெக்ஸ் இதுவும் மிகவும் ஆபத்தானது தான் மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல் பறவைகளை தாக்கி அந்த பறவைகளை கடிக்கும் கொசுக்கள் மனிதனை பதம் பார்க்கும் போது ஏற்படும் காய்ச்சல் . கேரளாவில் கூட இது தாக்கியுள்ளது . மற்ற ஒன்று ஜப்பானிய மூளை யலாட்சி வெள்ளை ரத்த அணுக்களை அழிக்கும் இப்படி பயங்கரமான கொசுக்களை ஏன் விட்டுவைக்கவேண்டும் அதற்கான மூலிகை செடிகளில் இருந்து தயாரிக்கும் கொசு ஒழிப்பை உற்பத்தி செய்வது தான் நல்லது என்று என் முழு ஆராய்ச்சியை சமர்பித்துள்ளேன்" என்கிறார் விசாலாட்சி.
மேலும் விசாலாட்சி கூறும் போது , " நான் ஊட்டி சின்கோனா மூலிகை கார்டனில் தான் இந்த கொசு ஒழிப்பு மூலிகை செடியை கண்டு பிடித்து ஆராய்ச்சியில் இறங்கி என் ஆராய்ட்ச்சி கட்டுரையை சமர்பித்தேன் .
டிகிட்டாலிஸ் புர்புரியா மற்றும் பெர்பேரிஸ் டிங்க்டோரியா மூலிகை செடி இதழ்களில் இருந்து தான் இந்த கொசு ஒழிப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளேன் .இந்த செடிகளின் மூலம் திரவமாகவும் பொடிசெய்து அதை நீர் நிலைகளில் தூவுவது தெளிப்பது மற்றும் காய்ந்த இலைகளை எரித்து அந்த புகை மூலம் கொசுக்களை அழிக்கவும் செய்யலாம் இது மிக உபயோகமான மூலிகையாக செயல் படும் . இதனால் தலைபரட்டையோ தவளை அழிந்து போக வாய்ப்பு இல்லை . ஊட்டியில் நான் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது எங்கு தெரியுமா?
கோடப் மந்து கால்வாயில் தேங்கி கிடக்கும் சாக்கடை தண்ணீரில் தான் ஏக பட்ட கொசுக்கள் முட்டையிட்டு உற்பத்தியாகி கொண்டிருக்கிறது ஊட்டி ஒரு குளிர் பிரதேசம் இங்கு அதிக அளவு கொசுக்கள் ரீங்காரமிட்டு நம்மை பதம் பார்க்கின்றன . இங்கே இப்படி என்றால் கீழ் பிரதேசங்களில் சொல்லவே வேண்டாம் . என்கிறார் அதிர்ச்சியாக .
இப்பொழுது மார்க்கெட்டில் பல தரப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் கொசு ஒழிப்பு மருந்துகள் எல்லாம் கொசுக்களை ஒழிக்கும் குட் நைட் என்றால் நல்லாத்தான் தூக்கம் வரும் அதே சமயம் நம் சுவாசத்தை பாதிக்க செய்யும் அதிலும் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது அதில் பல கெமிக்கல் கலக்கப்பட்டிருக்கும் என்று கூறுகிறார்.
மூலிகை வகை கொசு வர்த்திகள் எந்த ஆபத்தும் இல்லாதது அதை தான் தயாரித்து மக்களுக்கு விநியோகிப்பது மிகவும் நல்லது அது எப்பொழுது நடக்கும் என்ற கேள்வியையும் விசலாட்சி தொடுத்தார் .
ஒரு பெரிய ஆராய்ச்சியை மேற்கொண்ட விசாலாட்சி அரசியலில் நுழைந்தது ஒரு விபத்து தானாம் . தன் கணவர் விஜி அரசியலில் இருப்பதால் நீலகிரி தி மு க வினர் இவரை ஊட்டி நகர மன்றத்தின் உறுப்பினராக போட்டியிட செய்து வெற்றி பெற்று இப்பொழுது சமூக பணியில் இறங்கினாலும் தனக்கு ஒரு ஆராய்ச்சி பேராசிரியராக வேண்டும் என்பதில் தான் அதிக ஆர்வமாம் .
சமீபத்தில் கோவையில் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் ஒரு கொசு ஒழிப்பு ஊதுபத் தீயை பார்த்தேன் சற்று ஆச்சிரியமாக இருந்தது அது சிட்ரோனிலா என்ற மூலிகை செடியில் இருந்து தயாரிக்க பட்டுள்ளது . இது போல தான் என் ஆராய்ட்ச்சியில் புதிய மூலிகை கொசு ஒழிப்பு சாதனங்களை உருவாக்க துடித்துக்கொண்டிருக்கிறேன் ' என்கிறார் .
என்னதான் நகர மன்ற உறுப்பினராக இருந்தாலும் ஒரு பெரிய ஆராய்வு பேராசிரியராக சாதிக்க வேண்டும் பல புதிய கண்டுபிடிப்புகளை விலங்கியல் துறையில் உருவாக்கும் மாணவர்களை அடையாளம் காண வேண்டும் என்கிறார் இந்த டாக்டர் கவுன்சிலர் விசலாட்சி .
Leave a comment
Upload