சமீபத்திய வாட்சப் ஃபார்வேடு.... இதில் எத்தனை பேருக்கு உடன்பாடு தெரியாது... ஆனால் சிந்திக்க வேண்டிய விஷயம்.
*******
இந்த தேசம் எங்கு செல்கிறது என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. மிக மோசமான நிலையில் நாம் இருக்கிறோம்.
கார் ஷோரூமுக்கு போனால் மிக நீண்ட வரிசைகள் காத்திருக்கின்றன. புது வண்டி வருவதற்கு ஆறுமாதம் காத்திருக்க வேண்டுமாம்.
உணவு விடுதிகள் வாயில் ஏராளமான கூட்டம். ஒரு காலியான இருக்கை கூட கிடைப்பதில்லை.
டாஸ்மாக்கிலும், உயர் ரகம் மது பான கடைகளிலும் மட்டும் அல்ல கோழி வாங்கும் கூட்டமும் கொஞ்சமும் குறைவில்லை.
ஷாப்பிங் மால்களில் கார் நிறுத்த இடம் கிடையாது. கூட்டம். கூட்டம். கூட்டம். அப்படியொரு கூட்டம்.
புது வகை மொபைல் போன் வந்தால் போட்டா போட்டி. லட்ச ரூபாய்க்கு மேல் விற்கும் ஆப்பிள் போன்கள் வந்ததும் விற்றுத் தீர்கிறது.
ஆன்லைன் ஷாப்பிங் காலத்தில் எந்தக் கடையிலும் கால் வைக்க இடமில்லை. அத்தனை கூட்டம்.
அட ஆன்லலைனும் நன்றாகவே கல்லா கட்டுகிறது.
ஆனால் மக்கள் மட்டும் அரசு தங்கள் முதுகை உடைக்கிறது விலை ஏற்றத்தால். வரி விதிப்பால் கொதிக்கிறது.
பெட்ரோல் விலை ஏறினால் பி.பி. ஏறுகிறது.
எந்த நேரமும் விளக்கெரிய விடுகிறோம். அணைப்பதேயில்லை. ஃபேன் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஏசியும் ஓடுகிறது. டிவியை அணைப்பதேயில்லை. அலறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் மின்சார உயர்வு என்றால் அரசைத் திட்டி தீர்க்கிறோம்.
நம் வீட்டுக் குழந்தைகள் ஏசியில் 18 டிகிரி வைத்துக் கொண்டு போர்வை போர்த்துக் கொண்டு தூங்கும் போது பில்லைப் பற்றி நமக்கு நினைவு வருவதில்லை.
கீசரை 24 மணி நேரமும் போட்டு விட்டு பில் பல்லிளித்தால் மட்டும் கோபம் வருகிறது.
காஸ் அடுப்பை கச்சிதமாக உபயோகிக்காமல் ஆனால் காஸ் விலை ஏற்றம் மட்டும் எரிச்சல் தருகிறது.
சிவப்பு விளக்கில் கூட காரை அணைப்பதில்லை. ஆனால் பெட்ரோல் விலையேற்றம் கடுப்படிக்கிறது.
2 கி.மீ தூரத்திற்கு நடந்து போகாமல் ஸ்கூட்டரில் போய் பழகி விட்டோம். என்ன செய்ய ?
வார இறுதிகளில் டிரைவ் போகிறோம். இலக்கில்லாமல். ஆனால் பெட்ரோல் விலை கோபப்படுத்துகிறது.
பத்தாயிரம் கொடுத்து புது சட்டை வாங்குவோம். தெருமுக்கு காய்கறி வியாபாரியிடம் பேரம் பேசுவோம்.
எனக்கு சம்பளம் கூட வேண்டுமென்று அரசை வலியுறுத்துவோம். ஆனால் வேலைக்கார நூறு ரூபாய் அதிகம் கேட்டால் அநியாயம் என்று தோன்றும்.
நாம் பெற்ற பிள்ளைகள் நம் பேச்சைக் கேட்கவில்லையென்றால் தொலைகிறது ஆனால் பிரதம மந்திரி நம் பேச்சை மட்டும் கேட்க வேண்டும். பல மொழிகளில அவரைத் திட்டலாம். தப்பில்லை.
சுதந்திர இந்தியாவில் தனிப்பட்ட பிரஜை நான்.
நாடு 130 கோடி மக்களுக்குமாக திட்டங்கள் தீட்டி உழைக்கிறது. ஆனால் எனக்கு என் குடும்பம் மட்டும் தான் இலக்கு. அரசை மக்களுக்காக இயக்கும் அரசு என்றாலும் அதை மாற்ற யத்தனிப்போம்.
ஆனால் என்னை மட்டும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.
என்னால் / நம்மால் இந்த நாட்டுக்கு நல்லது நடக்க எந்த விதமான மாற்றத்தை நான் ஏற்க முயற்சித்தேன் ??
சிந்திப்போம். கொஞ்சம் கடமையோடு செயல்படுவோம்.
********
ஓரளவு இதிலும் நியாயம் இருப்பது போலவே தோன்றுகிறது.
இதற்கும் பொங்கினால் நமக்கு எனர்ஜி தான் வேஸ்ட். எதாவது மாற்றிக் கொள்ள முடியுமா யோசிப்போம்.
Leave a comment
Upload