1960- 70களில் ஐந்து வயது முடிந்த பிறகு தான் தொடக்கப் பள்ளியில் குழந்தையும் முதலாம் வகுப்பில் சேர்ப்பார்கள். சேர்க்கை தினமன்று பள்ளிக்கூடத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்கள் மிட்டாய் தந்து சந்தோஷப்படுவார்கள். இதற்காக பள்ளி மாணவர்கள் இன்று யாராவது புதிதாக சேர்க்கிறார்களா என்று ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு அக்கறையுடன் பாடத்தைச் சொல்லித் தருவார்கள் கூடவே கண்டிக்கவும் தவறமாட்டார்கள் தயங்கமாட்டார்கள்.
கூட்டுக் குடும்பம் என்ற வலை அறுந்து தனிக்குடித்தனம் கட்டாயம் என்ற காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போக வேண்டிய பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இந்த சந்தர்ப்பத்தை பணம் பண்ண தொடங்கப்பட்டது தான் நர்சரி பள்ளிகள். ப்ரீ கே ஜி, எல் கே ஜி என்று மூன்று வயதிலிருந்து விளையாட்டாக ஆரம்பித்து பாட அனுபவத்தை பள்ளி அனுபவத்தை குழந்தைகளுக்கு இந்த நர்சரி பள்ளிகள் அறிமுகப்படுத்துகிறது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைக்கு எப்போது 3 வயதாகும் என்று காத்திருப்பார்கள்.குழந்தையை நர்சரி பள்ளியில் தள்ளிவிட பிஞ்சு வயதில் கல்வி அறிமுகம் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிவதால் எதிர்காலத்தில் கற்றல் சுலபமாகும் என்று நர்சரி வியாபாரிகள் சொன்னாலும் மூன்று வயது என்பது கல்விக்கான வயது அல்ல என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.
அதேசமயம் நர்சரிப் பள்ளி அனுபவம் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதிரி உதவியும் செய்கிறது இதனால் ஆரம்பப்பள்ளியில் இடைநிற்றல் எண்ணிக்கை குறைகிறது என்கிறார்கள் கல்வி இலாகாவினர்
அதேசமயம் கொரோனோ நோய்தொற்று தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதித்தது இரண்டு வருடம் பள்ளி சரிவர இயங்கவில்லை. இணையவழிக் கல்வி என்பது அவர்களுக்கு ஒரு மாதிரியான ஆச்சரியம் வேடிக்கை அவர்களின் புரிதல் இப்படித்தான் இருந்தது. பெரும்பாலும் இந்த இணைய வழிக் கல்வியை ஆசிரியர் சொல்லித் தரும்போது குழந்தையின் தாயார் தான் ஒருவித அக்கறை மற்றும் மெனக்கெடல் உடன் உன்னிப்பாக கவனித்தார் குறிப்பெடுத்துக் கொண்டார் இதையெல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தந்த போது குழந்தைகள் அவ்வளவு அக்கறையுடன் கவனித்து என்று சொல்ல முடியாது .இப்போது அந்த குழந்தைகள் மூன்றாம் வகுப்பு படிக்கிறது பள்ளிகள் சனிக்கிழமை கூட இயங்குகிறது காரணம் அந்த மாணவர்களுக்கு ஏ பி சி டி என்றால் என்னவென்று தெரியவில்லை அ ஆ இ ஈ இதெல்லாம் எழுதவோ சொல்லவோ தெரியவில்லை இந்த ஆரம்பப் பாடத்தை ஒருபுறம் நடத்தி அவர்களுக்குப் புரிய வைத்து கூடவே மூன்றாம் வகுப்பு பாடத்தையும் அவர்களுக்கு சொல்லிக் தர முயற்சி செய்கிறார்கள். உண்மையில் அந்த ஆசிரியரின் பாடு ரொம்பவும் கஷ்டம் தான்.
கிராமப்புற மாணவர்கள் நிலைமை இன்னும் மோசம் அங்கு தொழில்நுட்ப வசதி சரியில்லாத காரணத்தினால் இணையவழிக் கல்வி பெரிதாக கிராமத்தில் சாதித்தது என்று சொல்ல முடியாது கற்பித்தல் என்பது அவர்களுக்கு இல்லாமலே போய்விட்டது. அவர்களை இப்போது வழிக்குக் கொண்டுவர கற்பித்தல் பற்றி புரிதலுடன் சொல்லிக்கொடுக்க ஆசிரியர்கள் ரொம்பவும் சிரமப் படுகிறார்கள்.இவையெல்லாமே மாணவர் மற்றும் ஆசிரியர்களுக்கு புது அனுபவம் இதைக் கல்வி இலாகா எப்படி அணுகுகிறது என்று தெரியவில்லை.
இப்போது இல்லம் தேடி கல்வி என்ற ஒரு புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதை ஆசிரியர்கள் அவ்வளவாக விரும்பவில்லை அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் கற்பித்தல் என்பது பள்ளிகளில் தான் சாலச்சிறந்தது என்பது அவர்களின் அனுபவ கருத்து. இதற்கு சற்று யோசிக்க வேண்டிய ஒரு விஷயம்தான் தவிர மாணவர்கள் இரண்டு வருடம் பொழுதை கழித்து விட்டு மீண்டும் அவர்களை கல்வியில் ஈடுபாடு கொள்ள இழுத்து வருவது என்பது ஒரு கடுமையான முயற்சி இதனால் தான் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை கூடாது சனிக்கிழமை கூட பள்ளி இயங்க வேண்டும். என்றெல்லாம் கல்வித் துறை திட்டம் தீட்டுகிறது. கற்றலின் மூலம் தான் அவர்கள் கல்வியறிவை உயிர்ப்பிக்க முடியும் இதை எல்லா ஆசிரியர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அது அவர்களின் கடமையும் கூட அதற்கும் சேர்த்து தான் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இதை ஆசிரியர்கள் சேவையாக நினைத்து செய்ய வேண்டும்.
Leave a comment
Upload