தொடர்கள்
அரசியல்
ஜனநாயக துயரம். - மூத்த பத்திரிகையாளர் ஜாசன்

20220623084809973.jpeg

பாராளுமன்ற கூட்டத்தொடரில் இப்போதெல்லாம் ஆக்கபூர்வமான விவாதங்கள் எதுவும் இல்லை தொடர்ந்து அமளி காரணமாக இரண்டு அவைகளும் முடங்கிப் போவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்த மாதத்துடன் ராஜ்யசபா தலைவர் பதவிக்காலம் முடிவடையும். வெங்கைய நாயுடு இந்த ஐந்து வருடத்தில் 57% மாநிலங்களவை கூட்டம் எந்த விவாதமும் இன்றி முடக்கப்பட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார். 245 உறுப்பினர்கள் 30 கட்சி மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட இவர்களை ஒரே புள்ளியில் இணைப்பது என்பது சவாலான பணி என்று குறிப்பிட்டிருக்கிறார் அது உண்மையும் கூட.

பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கப்பட்டதும் எதிர்க்கட்சிகள் சமையல் எரிவாயு விலை உயர்வு அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றை அவசரமாக விவாதிக்க சபாநாயகருக்கு கோரிக்கை வைத்து நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் மக்களவை சபாநாயகர் ஒத்திவைப்பு தீர்மானத்தை ஏற்கவில்லை இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சபைக்கு உள்ளேயும் வெளியேயும் செய்த அமளி காரணமாக நான்கு நாட்களாக அவை முடங்கிப் போனது.

20220623084835769.jpeg

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளருக்கு பேட்டி தந்த பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் திறந்த மனதுடன் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் விவாதம் நடத்தலாம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்து சிந்தித்து விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கூடவே நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த பேட்டிக்கு பதிலாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 80 ரூபாய் சரிவு எரிவாயு விலை ஆயிரத்துக்கு மேல் ஜூன் மாதம் மட்டும் ஒரு கோடியே 30 லட்சம் பேர் வேலை இழப்பு பொது மக்களின் பிரச்சினைக்கு நாங்கள் குரல் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது. அரசு இதற்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும்.பிரதமர் விவாதங்களையும் கேள்விகளும் தவிர்ப்பது பாராளுமன்ற நடைமுறைக்கு எதிரானது என்கிறார். ராகுல்காந்தி எத்தனையோ வார்த்தைகளை அன் பார்லிமென்ட் என்று அறிவித்து எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க பிரதமரால் முடியாது. அவர்கள் எங்கள் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் ராகுல்காந்தி.

சபாநாயகர் வாருங்கள் விவாதத்தில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பாராளுமன்றம் இயங்குவது தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் சமீபத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதித்ததை கண்டித்து பாராளுமன்றத்தை முடக்க பார்க்கிறது. அதற்கு பாரதிய ஜனதா சொல்லும் பதில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள். அந்த கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்தார்கள் காரணம் அவர்கள் மாநிலத்துக்கு அந்த வரி வருமானம் தேவைப்படுகிறது என்று சுட்டிக் காட்டியிருக்கிறது. எது எப்படியோ ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்தி மக்களுக்குப் பயனுள்ள விஷயங்களை இரண்டு அவைகளும் விவாதித்து நல்லது செய்யும் என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு அறவே இல்லை என்பது மட்டும் உண்மை இது ஒரு மாதிரியான இரண்டு அவை உறுப்பினர்களும் கட்சிப் பாகுபாடின்றி உணர்ந்தால் நல்லது.