சூது கவ்வும் படத்துல வர்ர பாட்டுதாம்ப்பூ....செம்மயா தாளம் போட்டுட்டு பாடினா சூப்பராஇருக்கும்னு தோணுதில்ல…….
காசு… பணம்,…துட்டு… மணி….மணி….
இருங்க…பாடிட்டே என்ன விஷயம்ன்னு பாத்துடலாம்…
இப்ப இருக்கிற ஒரு பெரிய வசதி என்னன்னா….எங்கேயாவது தெரியாத இடத்துக்குபோகணும்னா, வெளியூர்காரங்களா இருந்தாக்கூட, போக வேண்டிய ரூட்டு தெரியாட்டியும்பரவால்ல… சரியான அட்ரஸ் மட்டும் இருந்தா போதும்….ஆட்டோவோ கேபோ புக் செஞ்சுபோயிடலாம்….அவங்களுக்கும் வழி தெரியலன்னா…இருக்கவே இருக்குது கூகிள் குரு… அந்த கூகிள் மேப்பைப் போட்டா போதும்… ஆனா, சமயத்துல எங்கேயாவது முட்டு சந்தைக்காட்டும்… சில டைம் ட்ராஃபிக் இல்லாத ரூட்டுன்னு சுத்து வழியக் காட்டும்…அதுக்கு கம்பனிபொறுப்பில்ல….
முக்காவாசி ஊபர், ஓலா மாதிரி ஆப்லதான் எல்லாரும் வண்டி புக் பண்றாங்க……இதுலஎன்ன ஒரு பிரச்னைனா… புக் செஞ்சவங்க போன் செஞ்சாலோ இல்ல… ட்ரைவர் புக்செஞ்சவங்களுக்கு போன் செஞ்சாலோ….மொதோ கேள்வி…..கேஷா அப்டீன்றதுதான்…..அதாவது குடுக்கவேண்டிய துட்டை….காசாவே…அதாம்பூ….கரன்சிநோட்டா குடுப்பீங்களான்னு….ஆமான்னு சொன்னா …, “ஓகே வரேன்னு” சொல்லுவாங்க….
வந்த பிறகோ …இல்ல போன்லயோ கூட அதுக்கு மேல இருவது ரூபா சேத்து குடுங்கன்னுஇப்ப பரவலா கேக்கறாங்க….அதுக்குக் காரணம், ஆப்ல பயணிகளுக்கு டிஸ்கௌண்ட்குடுக்கிறதால, அவங்களுக்கு பாதிப்பு ஏற்படுதுன்றதுதான்….நீங்க கேஷ் பேமென்ட்இல்லன்னு சொன்னா, வரமுடியாது… ட்ரிப்பை கேன்சல் பண்ணிக்கங்கன்னு கூலாசொல்லிடுவாங்க….
இது ஒரு பக்கம் இருக்க,
சில நேரம், நீங்க ஆட்டோ புக் பண்ணுபோதே 10 நிமிஷத்துக்கு மேல வெயிட்டிங் டைம்காட்டினாலும், “ சரி, பரவாயில்ல” ன்னு காத்திருப்போம்…, கடைசி நிமிஷத்துல, ட்ரைவர்ட்ரிப்ப கேன்சல் செஞ்சு அதிர்ச்சி குடுக்கிறதும் நடக்கும்..….இது போல சில நேரம் ரெண்டுமூணு வண்டி புக் ஆகி, கேன்சலாகி கிட்டத்தட்ட வீட்டை விட்டுக்கிளம்பி அரை மணிநேரத்துக்கு மேலயும் போக வேண்டிய இடத்துக்கு வண்டி ஏறாமலே இருக்கிற சோகமும்நடக்கும்….அதனால, இது போல ஆட்டோவையோ கேபையோ நம்பி இருக்கிறவங்க, “இதோ…வண்டி புக் பண்ணி போயிடலாம்”னு மட்டும் அசட்டையா இருந்துடக்கூடாது….
இது லேட்டா கிளம்பறதுக்காக சொல்லல….சரியான நேரத்துக்கே கிளம்பினாலும், இதுபோலப் பிரச்சினைகள் வந்துச்சுன்னா…. சரியா கிளம்பியும் லேட்டா போகற மாதிரிஆயிடும்….
இதுல காசு பணம் துட்டு பாட்டுக்கு என்ன வேலைன்னு கேக்கறீங்களா…? வாங்க….பாக்கலாம்….
தோழி ஒருத்தி ராத்திரி எட்டேமுக்கா மணிக்கு நகரத்தோட பரபரப்பு அதிகம் இருக்கக்கூடியமையப் பகுதிலேந்து ஆட்டோ புக் பண்ண ரொம்ப நேரம் முயற்சி செஞ்சும் ஒரு ஆட்டோ கூடபுக் ஆகல….
சில நேரம் அது ஆச்சரியமாக்கூட இருக்கும்….ரோட்டுல ஆட்டோ நிறய போகும்…ஆனா, ஒண்ணு கூட புக் ஆகாது….5 நிமிஷத்துல வரக்கூடிய மாதிரி தள்ளி இருக்கிற ஆட்டோ புக்ஆகும்…இதை சில பேர் அனுபவத்துல பாத்திருக்கலாம்….
இந்த ஃப்ரெண்ட் ரொம்ப நேரம் ட்ரை பண்ணியும் ஒண்ணுமே புக் ஆகல… வழக்கம்போல புக்ஆச்சுன்னா, கூட சேத்து துட்டு கேட்டாலும் குடுத்துடலாம்னுதான் இருந்திருக்கா… ஆனா, ஒண்ணுமே கிடைக்கல…
சரி, ஆப் மூலமா இல்லாம நேரடியா முயற்சி செய்யலாம்னு, ரோட்டுல போன ஆட்டோவநிறுத்தி, போக வேண்டிய இடத்தை சொன்னதும், ட்ரைவர் அவளுக்கு ஹார்ட் அட்டாக் வர்ரமாதிரி ஒரு அமௌண்டைச் சொல்ல, அவ அப்படியே தலை சுத்தி போய் மயக்கம் வராதகுறையா, அவளுக்குக் காமிச்ச புக்கிங் ரேட்டை போன்ல காட்டி இருக்கா…. ஆனா, அவருஅசரல……ஆப்ல நூத்திஎழுவது ரூபா காட்ட, அவரு “முன்னூத்தம்பது ரூபான்னா ஓகே…இல்லன்னா இல்ல” ன்னு கறாரா சொல்லவும், இவ மனசு வராம அவர் கிட்ட வேணான்னுசொல்லி இருக்கா…அப்ப, அவருக்குப் பின்னாடி வந்த இன்னொரு ஆட்டோ இவளப் பாத்துநிக்க, அந்த ஆட்டோ ட்ரைவர்கிட்ட இவ பரிதாபமா, “ஆப்ல நூத்திஎழுவது காட்டுது…..நான்இருநூறு தரேன் அவளோதான் முடியும்”னு சொல்லி இருக்கா….அந்த ட்ரைவர் இருநூத்தம்பதுகேக்க, இவ இருநூறுதான்னு சொல்ல, கடைசியா ஓகேன்னு சொல்லி அந்த ஆட்டோலஏறிட்டா….
இப்பத்தான் ட்விஸ்ட்….அந்த ஆட்டோ ஒரு கிலோமீட்டர் கூடப் போகல….ஒரு சிக்னல்லசிவப்பு விழுந்த நேரத்தில, பக்கத்துல இருந்த இன்னோரு ஆட்டோ ட்ரைவர், இவரு கிட்டபேச, “ நேத்து ராத்ரிதான் இத மாத்தினேன் அதை மாத்தினேன்”னு அவரு கிட்ட இந்தட்ரைவர் சொல்லும்போது, இவளுக்கு வயித்துல புளி கரைச்சிருக்குது….அதுக்குக் காரணம், ஆட்டோவோட பார்ட்டு சரியில்லாம மாத்தினதா சொன்னது மட்டுமில்லைப்பூ….பேசும்போதுகுழறினதும்….அந்த ட்ரைவர் குடிச்சிருக்கிறதும் அப்பதான் அவளுக்கு ஒறச்சிருக்குது…..
இதுக்குள்ள மெயின் ஏரியா தாண்டிட்டதால, வெளிச்சமும் கொறஞ்சிருக்க, “என்ன நம்பிவீட்ல பசங்கல்லாம் இருக்காங்க…ஒண்ணும் பிரச்னை இல்லையே…”ன்னு கேக்க…”அதெல்லாம் ஒண்ணுமில்ல…போயிடலாம்…” ன்னு ட்ரைவர் சொன்னபோதே சிக்னல்பச்சைக்கலரக் காட்ட , அந்த நாலு முனை ஜங்க்ஷன்ல , பக்கத்து ஆட்டோ நேர் எதிர்பக்கரோட்டில போயிருக்குது…….இவ ஆட்டோ வலது பக்கம் திரும்பாம, அதுவும் நேராவே போக, இவ குழம்பினாலும், சரி, அப்படியும் வழி இருப்பதால போறாருன்னு நினச்சிருக்கா...ஆனா, திருப்பியும் போயி அந்த பக்கத்து ஆட்டோவை நெருங்கியதும், இந்த ட்ரைவர், வண்டிலகேஸ் தீந்துடுச்சு மச்சான்….அமுங்குது….” என்றதும், அவர், “அதெல்லாம் ஒண்ணும்ஆகாது…போ..போ…” ன்னு சொல்ல, இவளுக்கு என்ன செய்யறதுன்னு புரியாத நிலமை. அந்த இடத்தில வேற ஆட்டோக்களும் இல்லை….சொன்னா மாதிரியே ஆட்டோநின்னுடுச்சு…
உடனே, “ அந்த ட்ரைவரிடம், என்னை மெயின் ரோட் வரைக்கும் விட்டுடுங்க…ப்ளீஸ்…என்றபடி, அந்த ஆட்டோவின் உள்ளிருந்தவர்களிடம், “கொஞ்சம் அட்ஜஸ்ட்பண்ணிக்கங்க….நான் அந்த ரோட்ல போய் இறங்கிடறேன்…” ன்னு சொல்லிட்டே, தான்உட்கார்ந்திருந்த ஆட்டோவிலருந்து இறங்கிட்டா.
“ஏத்தும்போது எவ்ளோ கேஸ் இருக்குது….? நம்ம சொல்ற இடத்துக்கு போற வரைக்கும்தாங்குமா தாங்காதான்னு யோசிக்காம எப்படி இந்த மாதிரி ஆளுங்கள ஏத்திக்கலாம்…? என்று இவ சத்தமாப் புலம்ப, அந்த பக்கத்து ஆட்டோ ட்ரைவர் திரும்பிப்பாத்துட்டு பதில்எதுவும் சொல்லல.(பின்னாடி நிறைய சொல்லிருக்காரு)
ட்ரைவருங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சவங்கன்றதால, அந்த ட்ரைவர்இவளை ஏத்திக்கிட்டு , அந்த குடிகார ட்ரைவரோட ஆட்டோவை டோ செஞ்சபடிபோயிருக்காரு.
என்னோட ஃப்ரெண்ட் விதிய நொந்தபடி, அந்த ஆட்டோ ட்ரைவருக்கும், அதிலிருந்தஇரண்டு பயணிகளுக்கும் தேங்க்ஸ் சொன்னபடி வர, அவங்க இறங்கினதுக்குப் பிறகு, இவளை அவளோட வீட்டில விடறதுக்கு முன்னூறு ரூபாய்க்கு ஒத்துக்கிட்டு அந்தஆட்டோவையும் டோ செஞ்சபடி பயணம் தொடர மெயின் ரோட் வந்ததும் என் தோழிகடுப்பாயி, இப்படி முழு தூரமும் டோ செஞ்சிட்டே போனா நான் நாளைக்குத்தான்போகணும்…,சீக்கிரம் போலாம்னு ஆட்டோ புக் பண்ணி இப்படி எக்கச்சக்கமாமாட்டிக்கிட்டேன்” ன்னு சொன்னதும், உள் ரோட்டுலருந்து மெயின் ரோடு வரையும்கொண்டுவந்து விட்டதால, “சரி, நீ இனிமே…பாத்துக்க….” ன்னு அந்த ட்ரைவர் குடிகாரஆட்டோ ட்ரைவரைக் கழட்டிவிட்டுட்டு இவளை அழைத்துக்கொண்டு வேகம் எடுத்தார்.
“ஏம்மா…நீங்க எங்க ஏறினீங்க…? எவ்ளோ பேசினீங்க…?” ன்னதும் இவ சோகக்கதையைச்சொல்ல,
“அதெல்லாம் சரிமா, முதல்ல வந்தவரு முன்னூத்தம்பது கேட்டாரு… இவன், நீங்க சொன்னஇருநூறு ரூபாய்க்கு வரேன்னு சொன்னதும்…காசை மட்டும் யோசிச்சிட்டு ஏறிட்டீங்க…அப்டிதானே….?” ன்னு கேட்டிருக்காரு…
இவ புரியாம முழிக்க,
“அவன் குடிச்சிருக்கான்…நீங்க அதைப் பாக்கல….சரி, ஆட்டோ கண்ணாடில உள்ளே நாலுமொழம் பூவத் தொங்கவிட்டிருக்கானே…அதப் பாத்தீங்களா….? அது எதுக்கு….?” என்றதும்அவள் இன்னும் குழம்பிப்போக,
“அது, அவன் குடிச்ச ஸ்மெல் தெரியாம இருக்கத்தான்….இப்பல்லாம்…மாஸ்க்கொரோனாக்கு மட்டுமில்ல… குடிச்சத தெரியாம மறைக்கவும் சில பேர் டெக்னிக்…அதனால, காச மட்டும் பாக்காம, ஆளப்பாத்துட்டும் ஏறுங்க….” ன்னு நவீன கிருஷ்ணரா மாறிகீதோபதேசம் செய்ய, என்ஃப்ரெண்ட் கீழே விழாத குறைதான்….
“நல்லவங்கள எப்பவும் கடவுள் காப்பாத்துவாருமா…..உங்களுக்கு இதெல்லாம் தெரியாமஏறிட்டீங்க….அடுத்த தடவைலேந்து ஜாக்கிரதையா ஏறுங்க…என்ன செய்யறது…? ஆட்டோட்ரைவர்ல, சில பேர் இந்த மாறி இருக்கிறதாலதான், எல்லாருக்கும் கெட்ட பேரு….”ன்னுசொல்லிட்டு போயிருக்காரு….
உண்மைதான்…. சில நேரங்கள்ள, பணத்தைவிடவும் பாதுகாப்புதான் முக்கியம்…என்ஃப்ரெண்ட் நல்ல நேரம்….பிரச்சினை எதுவும் இல்லாம வீடு வந்துசேந்துட்டா….இல்லன்னா….?
எல்லாருமே…குறிப்பா பெண்கள் தனியா பயணம் செய்யும்போது காவல் உதவி ஆப்பைமொபைல்ல கட்டாயமா வச்சிருக்கணும்,. அவளும் வச்சிருந்தாதான்…..முக்கியமா, இது மாதிரிநேரத்துல, கவனிச்சு ஏறணும்… அசம்பாவிதம் நடக்கணுன்ற அவசியம் இல்லை. அதுக்கான சூழல் உருவாயிடுமோன்னு நினச்சாலே சங்கடமாத்தான் இருக்கும்…
சில இடங்கள்ள காசு பாக்கக்கூடாது….அப்படியும் இல்லன்னா….எந்நேரமானாலும், பஸ்ஸுதான் பெஸ்ட்….ஒரே ஒரு பிரச்சினை…பஸ் ஸ்டாப்லேருந்து இருட்டுல வீட்டுக்கு நடந்து போற தூரம் அதிகமா இருந்தா, அந்த நிர்ப்பந்தத்தை தவிர்க்கிறதுக்காகத்தான் வீட்டுக்கு போய் இறங்கிடலாமேன்னு ஆட்டோவுக்கோ கேபுக்கோ புக்கிங் செய்யறது…
ட்ரைவர்கள் கேக்கற கேஷ் பேமெண்ட்ல ஆரம்பிச்சு ஆட்டோ காசுக்கு யோசிச்சு சிக்கல்லமாட்டினதுக்குதான்….…காசு பணம் துட்டு சாங்கு…
அடுத்த வாரம் பாக்கலாம்….
Leave a comment
Upload