தொடர்கள்
ஆன்மீகம்
குருவருளும் திருவருளும் - 02 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20241020102400673.jpeg

கடந்த பல வருடங்களாக நாம் ஸ்ரீ மஹாபெரியவா மற்றும் பல குருமார்களின் அனுகிரஹத்தை, அவர்களின் அனுபவத்தை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இனிவரும் காலங்களில் இன்னும் பல அனுபவங்களை பல கோவில்களின் வரலாற்றை, அங்கு வாழ்ந்த மஹான்களை பற்றியும் பார்ப்போம்.

ஆதம்பாக்கம் - சங்கர மடம்.

சனாதனம் தழைத்து ஓங்க நம் முன்னோர்கள், குருமார்கள் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அவற்றில் பல முக்கிய இடங்கள் நம் கண்ணுக்கே தெரியாமல் நம் அருகிலேயே இருக்க கூடும். அது போன்ற ஒரு இடம் தான் ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள சங்கர கேந்திரம். ஸ்ரீ மகா பெரியவாளின் அனுகிரஹத்துடன் அவரது மேற்பார்வையில் உருவானது தான் இந்த பாடசாலையும், சங்கர மடமும்.

உருவான விதம் குறித்து அதனை அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் பெற்ற திரு ராமமூர்த்தி அவர்களின் அனுபவத்தை கேட்டு அனுக்கிரஹம் பெறுவோம் .