தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 070 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240109152943104.jpeg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சாரிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சாரின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

மருத்துவர் ஷங்கர் , மும்பை

உலகமே கொண்டாடிக் கொண்டிருக்கிறது அயோத்தியில் உருவாகிக்கொண்டிருக்கும் ஸ்ரீ ராமரின் பிரமாண்ட கோயிலின் பிராண பிரதிஷ்டை வைபவத்தை. இன்று நாம் எல்லோரும் குதூகலமாக ராமனை கொண்டாடுவதற்கு பல நூறு ஆண்டுகாலமாக நமது ஏக்கமும், தவிப்பும் அதற்கான .முயற்சியும் தான்.

20240109153029442.jpeg

ஸ்ரீ மகா பெரியவா முதல், புது பெரியவா மற்றும் பெரியவா என அனைவரின் பங்கும் உள்ளது.

அதனை விவரிக்கிறது மருத்துவர் சங்கரின் இந்த உரை