தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 11 - ரேணு மீரா

20240005110849259.jpg

தகுதி எனஒன்று நன்றே பகுதியான்

பாரற்பட்டு ஒழுகப் பெறின். “

111 ஆவது குறளில் யாவரிடத்தும் எவ்வகையிலும் நீதி முறையை விடாமல் பின் பற்றி நடக்க முடியுமென்னும், நடுவுநிலைமை என்ற ஒன்று சிறந்த அறமாகும். இந்த வள்ளுவரின் வாக்கின்படி, தன் குழந்தைகள் தவறு செய்தாலும் நடுநிலை தீர்ப்பு கொடுத்து நியாயத்தை நிலை நிறுத்துவேன் என்று பெருமை பேசும் பெற்றோர்களுக்கு என் வேண்டுகோள்.

சமீபத்தில் என்னை சந்தித்த ஒரு பெண். தன் 12 வயது மகன், அவன் பள்ளியில் ஒரு பொருளை சக மாணவனிடம் விற்று பணம் பெற்று இருக்கிறான், அவனிடம் அந்தக்காசு எப்படி வந்தது என்று கேட்டவுடன், அந்த உடன்படிக்கும் மாணவனின் பெயரைச் சொல்லிஅவன் கொடுத்தான்என்று சொல்லி இருக்கிறான்.

அவன் ஏன் உனக்கு பணம் கொடுத்தான்? “ என்றபோது, சற்று அமைதி காத்து விட்டு பின்னர்அவன் ஒரு பொருளை கேட்டான், அதை நான் கொடுத்தேன் அதற்கு அவன் விலை கொடுத்தான் என்றான்”.

உடனே அந்தப் பெண் தன் மகனை கண்டித்ததுடன் அந்த இன்னொரு பையனையும் அவனது தாயையும் சந்தித்து, இதை பற்றி கூறி, அவனிடம் ஏது இத்தனை பணம்? என்றும், இப்படி கேட்டவுடன் அந்த பையனின் தாயும் அவனை கண்டித்ததுடன்நாங்கள் பணம் கொடுக்கவில்லை இவனிடம் இந்த பணம் எப்படி வந்தது என்று தெரியவில்லைஎன்று அனைவரின் முன்னிலையில் கண்டித்துள்ளார்.

இதன்பின் இரு மாணவர்களின் வீட்டிலும் அவர் அவர் பெற்றோர் அவர்களை கண்டித்து விட்டதாகவும், இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்றும் அந்த குழந்தைகளின் முன் பெரியவர்கள் ஒப்புதல் கொடுத்து இருந்ததையும் இந்த விஷயத்தை பேசிய சரி செய்து விட்டோம் என்றும் பெருமையாக என்னிடம் சொன்னார் அந்த பெண்.

இப்போது அந்த சிறுவர்கள் இருவரின் நிலையில் இருந்து இந்த விஷயத்தை நாம் பார்ப்போம் அதற்கு முன் அவன் எதை விற்றான்? ஏன் விற்றான்? இன்னொருவன் ஏன் வாங்கினான்? இந்த விவரங்களை பார்ப்போம்.

20240108215723580.jpg

அந்த பையன் விற்றது Pokemon cards. இதில் என்ன விசேஷம்? போக்கிமான் கார்ட்ஸ் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். Pokemon TCG என்பது Japan ல் 1996 ஆம் வருடம் பிரபலமானது, இந்த கம்பெனி முதலில் video ஆகவும் தொலைக்காட்சி சீரியல்கள் ஆகவும் குழந்தைகளை கவர்ந்து வந்தது, பின்பு இதன் அமைப்பை கார்ட்ஸ்களாக அதாவது (சீட்டு கட்டுகளாக) குழந்தைகளிடையே பிரபலமானது. இதை முதலில் குறைந்த விலை கொடுத்து வாங்குவதும் அதன் கட்டில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தின் உருவம் கொண்ட கார்டை சேகரிப்பதும், சில கட்டில் அது இல்லாமல் போனால் மீண்டும் மீண்டும் விலை கொடுத்து, பிறகு விலை கூட கொடுத்தால்தான் தான் எதிர்பார்க்கும் அந்த வித்தியாசமான கார்டுகள் கிடைக்கும் என்று எண்ணி இதில் பணத்தை விரயம் செய்யும் பள்ளி மாணவர்கள் அதிகம். ஒரு காலகட்டத்தில் பெரியவர்களுக்கு தெரியாமல் பணத்தை எடுத்து இதை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்று நினைத்து தவறுகளை புதிதாக கற்றுக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.

உலக மார்க்கெட்டில் இதற்கு பெரிய வரவேற்பு உண்டு. 1998 இல் United States இல் இந்த கார்ட்சை பிளாஸ்டிக்கில் போட்டு இதன் தரத்தை உயர்த்தி பிரபலம் அடைய செய்த பின் இதன் மீதான மோகம் குழந்தைகளின் மத்தியில் உலக அளவிலான மார்க்கெட்டில் வரவேற்பை பெற்றது.

இப்படி வாங்கி சேர்த்து வைத்த கார்டுகளில் வித்தியாசமானதை தனியாக சேமித்த பின் மித மிஞ்சிய ஒரே போன்ற காடுகளை விற்று விடலாம் என்று எண்ணி விலை பேசி விட்டிருக்கிறான் அந்த மாணவன்.

இதை எப்படி கையாளலாம்?

பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளை மேலோட்டமாக பார்த்துவிட்டு தண்டிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அவர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதில் அவர்களுக்கு குற்ற உணர்ச்சி முதலில் தலை தூக்குகிறது, அதாவது நாம் குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தவில்லையே என்பது அதுஇதன் தொடர்ச்சியாக அது பயமாக மாறிவிடுகிறது, தன் குழந்தை தவறான வழியில் போய்விடுவானோ என்பது அது…… இந்த இரண்டு உணர்வுகளும் சேர்ந்து கோபம் எனும் ஒரு தீர்வை எடுத்து திசை திருப்பி குழந்தைகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி வைத்து விடுகிறது. இந்த இடத்தில் குழந்தைகள் அவர் தம் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் தாழ்வு மனப்பான்மை, பயம், தயக்கம், போன்றவை அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

முதலில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தவுடன் அவர்கள் விற்றது எது? என்று பார்த்து அது அவர்கள் மனதை கவர்வதன் காரணம் என்ன? என்றும் பொறுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அந்தPokemon பற்றிய விவரங்களை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உலக அளவில் குழந்தைகளை வாடிக்கையாளர்களாக கொண்டு சம்பாதிக்கும் அவர் பெரிய நிறுவனத்தை பற்றி அந்த குழந்தைகளிடம் விவரித்து பேச வேண்டும். அந்த கார்டு பற்றிய இதர தகவல்களை அவர்கள் தெரிந்து கொள்ள பெற்றோர்கள் உதவுவது அவசியம். பிறகு விற்பதோ வாங்குவதோ தவறு இல்லை அதை எந்த வயதில் செய்ய வேண்டும் என்ற விவரத்தை அவர்களிடம் பொறுமையாக எடுத்து கூற வேண்டும். அதற்கான திறமைகளை எப்படி வளர்த்துக் கொள்வது வியாபாரம் என்றால் என்ன உங்கள் மனதை கவர்ந்த வியாபாரிகள் யார்? யார்? உலக அளவில் வியாபாரத்தில் சிறந்து விளங்கும் நபர் யார்? இதுபோன்ற விஷயங்களை விவரித்து பேசுவதன் மூலம் இத்தகைய ஆழ்ந்த சிந்தனை அவர்களுக்குள் உதிப்பதுடன் நீங்களும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இத்தகைய, உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இடையே ஒரு வித நெருக்கத்தை ஏற்படுத்தும். பொறுமை காத்து இந்த யுக்தியை கையாண்டால் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்கும்.

தவறுகள் செய்வது குழந்தைகள் இயல்பு, அவர்கள் கற்றுக் கொள்ளும் தருவாயில் இது சகஜம். அவர்களுக்கு எது சரி என்பதை அழுத்தம் கொடுத்து கற்பிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. செய்வதை திரும்பச் செய்வோம்.

- தொடர்ந்து பேசுவோம்