தொடர்கள்
ஆன்மீகம்
அயோத்தியும் ஸ்ரீ ரங்கமும் ஒன்று தான்!-ஆர்.ராஜேஷ் கன்னா

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கும் அயோத்தி ராமருக்கும் என்ன தொடர்பு??

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் விகடகவி க்குஅளித்த பிரத்தியேக பேட்டி

சூரிய வம்ச குலத்தனத்தில் தோன்றிய தசரத சக்ரவர்த்தியின் குமாரர் இராமபிரான் தாய் சொல்லை தட்டாமல் 14 வருடங்கள் வனவாசம் தன் மனைவி சீதா பிராட்டி ,தம்பி லட்சுமணன் உடன் காட்டிற்கு சென்றார். மாயமான் வடிவில் சீதா பிராட்டியை கவர்ந்து சென்றார் இலங்கேஸ்வரன் ராவணன்.

தன் துணைவியை மீட்க இராம பிரான் அயோத்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்கிறார்.

அங்கே போர் புரியும் இராவணணை எளிதில் வீழ்த்த முடியாமல் இராம பிரான் போரிட்டு கொண்டு இருக்கிறார். இருந்தாலும் இராவணன் தன் அண்ணாக இருந்தாலும் சீதா பிராட்டியை இராமனிடம் இருந்து கவர்ந்து கடத்தி வந்தது தர்மத்துக்கு உகந்தது இல்லை…உடனே சீதா பிராட்டியை அவரது கணவருடன் அனுப்பி வையுங்கள் என்று அறிவுரை கூறினார். ஆனால் இலங்கேஸ்வரன் ராவணன் தனது உடன் பிறப்பான விபிஷனன் தன்னுடன் இருந்து கொண்டே இராம பிரானுக்கு ஆதரவாக பேசுவதை கண்டு கோபம் அடைந்தார்.

இராம பிரானிடம் நேரில் சென்று தன் அண்ணன் இலங்கேஸ்வரன் செய்வது அநீதி, தர்மத்திற்கு அப்பாற்பட்டது . என் அண்ணன் வயிற்றில் இருக்கும் திரவத்தினை வெளியேற செய்து போர்புரிந்தால் என் அண்ணன் இலங்கேஸ்வரன் போரில் தோல்வியை சந்திப்பார் என்று அவரது உயிரின் ரகசியத்தினை விபிசனன் இராம பிரானுக்கு சொல்லி இராமனிடம் சரணாகதி அடைந்தார். இராம பிரான் விபிசனனை தன்னுடன் வைத்து கொண்டு இலங்கேஸ்வரன் ராவணனை போரில் வெற்றி கண்டார்.

போரில் வெற்றி அடைந்து சீதையை மீட்டு அயோத்தி சென்ற ராமனுடன் விபிசனையும் அழைத்து சென்றார் இராம பிரான்.

சீதையை கடத்தி சென்று அசோகவனத்தில் வைத்து தன் கீழ் இருக்கும் அரசர்களையும் , அமைச்சர்களையும் அழைத்து ஒரு மீட்டிங் போட்டார் இலங்கேஸ்வரன் ராவணன். அப்போது ராவணணை பார்த்து அவரது அடிவருடிகள் உங்க அழகுக்கு சீதா உண்டானவாள்..உங்க வீரத்தை மிஞ்ச இராமனுக்கு கிடையாது என்று சொல்லி விட்டு சென்றனர்.

அன்றிரவு தனியாக ராவணணை சந்தித்த விபிசனன் உங்க ஆதரவு பெற்றவர்கள் உங்களை வாழ்த்தி சென்றது தவறானது. அவர்கள் சொன்ன “ப்ரியம்” என்ற வார்த்தை தவறானது, சட்டத்திற்கு புறம்பானது. சீதையை முதலில் அவரது கணவர் இராமனிடம் கொண்டு விட்டு வாருங்கள்…இப்படி தாங்கள் செய்தால் நாடும் , நாமும் சுபிட்சமாக இருக்கும் , தவறினால் நாம் அழிந்து விடுவோம் என்று “ஹிதம்” ஆரம்பத்திலேயே தன் அண்ணன் இலங்கேஸ்வரன் ராவணன் என்று கூட பாராமல் முதலில் எச்சரித்தவர் விபிசனன் தான் என்று இராமபிரான் அறிந்ததால்,தன்னுடன் இருந்த விபிசனுருக்கு ரங்க விமானத்தினை பரிசாக இராமபிரான் கொடுத்தனுப்பினார்.

20240016134640137.jpg

விபிசனர் இந்த ரங்க விமானத்தினை எடுத்து கொண்டு அயோத்தியிலிருந்து இலங்கை நோக்கி வான் வழியாக சென்ற போது மாலை நேரம் ஆகிவிட்டதால் காவேரி கரையில் இந்த ரங்க விமானத்தை இறக்கி வைத்து மாலை நேர பூஜைகள் செய்ய ஆற்றில் நீராடி விட்டு விபிசனர் திரும்பி வந்தார். ரங்க விமானத்தினை தூக்கி செல்ல முயன்ற போது முடியவில்லை .

அப்போது அசீரிரி குரலாக இறைவன் பேசியது…நான் காவேரி நதிக்கரையில் படுத்த கோலத்தில் தெற்கு திசையில் இருக்கும் இலங்கையை பார்த்த வண்ணம் பக்தர்களுக்கு அருள் பாலிப்பேன்.அதனால் விபிசனா…ரங்க விமானம் இங்கேயே இருக்கட்டும்… நீ இனி இதுப்பற்றி கவலைப்படாமல் இலங்கை செல் என்று சொன்னது.

இராமப்பிரானை சரணாகதி அடைந்த விபிசனுக்கு அன்பு பரிசாக இந்த ஆராதனாமூர்த்தி ரங்க விமானத்தினை அளித்தது தான் ஐதிகம்.

இந்த ரங்க விமானத்தில் ரங்கநாதர் பள்ளி கொண்டு இருந்தாலும் அது இராம பிரான் தான். சுயம்பு கோயில் ஸ்ரீரங்கம். எல்லா ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட முதல் திவ்ய தேச கோயில் ஸ்ரீரங்கம்.இராமபிரான் இருக்கும் அயோத்தியாவில் ஓடும் சரயூ நதியும் ஸ்ரீரங்க காவேரி தீர்த்தமும் இரண்டும் ஒன்றேதான். ஸ்ரீ ரங்கத்தில் இருந்து வடக்கு நோக்கி

“ஸ்ரீ ராம ராம ராமேதி

ரமே ராமே மனோ ரமே

சஹஸ்ர நாம தத்துல்யம்

ராம நாம வரானனே

என்ற மந்திரத்தை என் ஊரை , என் பெயரை உச்சரித்தால் ஏழு ஜென்ம பாவங்களும் போய்விடும்,மறுஜென்மம் கிடையாது என்றார் இராம பிரான்,

இராமன் பிறந்து வாழ்ந்த அயோத்தியா, கிருஷ்ணர் வாழ்ந்த மதுரா ஒரு தடவையாவது நாம் போய் சேவிக்கணும் .

தசரத சக்கரவர்த்தி தன் சாம்ராஜ்ஜியத்தினை தர்ம வழியில் நடத்தியவர் , அவருடைய மகன் இராமபிரான் சட்டத்திற்கு உட்பட்டு தர்மவழியில் அரசாட்சி செய்து காட்டியவர்.

20240016135259165.jpg

அதே போன்று படகோட்டி குகன் தன்னுடன் பிறந்த மூன்று தம்பி மார்களுக்கு இணையாக மதிப்பளித்து உள்அன்போடு “நால்வருடன் ஐவரானோம்”என்று நட்புக்கு இலக்கணம் வகுத்தவர் இராம பிரான்.

இராமபிரான் அளித்த ரங்க விமானம் தான் இன்றும் ஸ்ரீரங்க கோயிலாக உள்ளது.

20240016135814780.jpeg

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ ரங்கம் கோயில் வெள்ளத்தில் மண்மேடாகியது. அப்போது ஆட்சி செய்த மன்னர் ஸ்ரீரங்க நாதர் கோயிலை தேடி வரும் போது தென்னை மரத்தில் அமர்ந்திருந்த பச்சைக்கிளி ரங்கநாதருக்கு செய்யும் பூஜை மந்திரங்களை சொல்லியது. இதனை கேட்ட மன்னன் ரங்கநாதர் கோயிலை ஆராய்ச்சி செய்து தோண்டி எடுத்து கோயிலை புனரமைத்த வரலாறும் உண்டு . இன்றும் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் பச்சைகிளி பெருமை சேர்க்கும் விதமாக கிளி மண்டபம் உள்ளது.

20240016135847477.jpeg

தாய் சொல்லை தட்டாமல் அரச பதவி ஏற்கும் நேரத்தில் துறவறம் பூண்டவர், சரணாகதி என்ற தத்துவத்தினை விபிசனன் முலம் வெளிப்படுத்தியவர், குகன் நட்புக்கு தன் தம்பிகளுக்கு ஈடாக “நால்வருடன் ஐவரானோம்”என்று பெருமை படுத்தியவர் இராம பிரான்.

2024001613591328.jpeg

கீழ் உள்ள பாசுரங்களை படித்தாலே இராமபிரான் வேறு..ரங்கநாதர் வேறல்ல…அயோத்தியும் ஸ்ரீ ரங்கமும் ஒன்று தான் என்று புலப்படும்.

பெரியாழ்வார்

312

முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு * உன்

அடியேற்கருளென்று அவன்பின்தொடர்ந்த *

படியில்குணத்துப் பரதநம்பிக்கு * அன்று

அடிநிலையீந்தானைப்பாடிப்பற அயோத்தியர்கோமானைப்பாடிப்பற.

314

தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து * தண்டகம்

நூற்றவள் சொல்கொண்டுபோகி * நுடங்கிடைச்

சூர்ப்பணகாவைச்செவியொடுமூக்கு * அவள்

ஆர்க்கஅரிந்தானைப்பாடிப்பற அயோத்திக்கரசனைப்பாடிப்பற.

316

காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்கு *

ஓராதான்பொன்முடி ஒன்பதோடொன்றையும் *

நேரா அவன்தம்பிக்கே நீளரசீந்த *

ஆராவமுதனைப்பாடிப்பற அயோத்தியர்வேந்தனைப்பாடிப்பற.

321

வாரணிந்தமுலைமடவாய்! வைதேவீ! விண்ணப்பம் *

தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ! கேட்டருளாய் *

கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில் *

சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம்.

325

மைத்தகுமாமலர்க்குழலாய்! வைதேவீ! விண்ணப்பம் *

ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட *

அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான் *

இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைம்மோதிரமே.

399

வடதிசைமதுரைசாளக்கிராமம்

வைகுந்தம்துவரைஅயோத்தி *

இடமுடைவதரியிடவகையுடைய

எம்புருடோ த்தமனிருக்கை *

தடவரையதிரத்தரணிவிண்டிடியத்

தலைப்பற்றிக்கரைமரஞ்சாடி *

கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக்

கண்டமென்னும்கடிநகரே. (2).

தொண்டரடிப்பொடி ஆழ்வார் (1 பாசுரம்)

920

மேட்டிளமேதிகள்தளைவிடுமாயர்கள்

வேய்ங்குழலோசையும்விடைமணிக்குரலும் *

ஈட்டியவிசைதிசைபரந்தனவயலுள்

இருந்தினசுரும்பினம், இலங்கையர்குலத்தை *

வாட்டியவரிசிலைவானவரேறே!

மாமுனிவேள்வியைக்காத்து * அவபிரதம்

ஆட்டியவடுதிறல்அயோத்தியெம்மரசே!

அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே.

20240020095301997.png