தொடர்கள்
ஆன்மீகம்
குருவே சரணம்  - 060 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20231101070203718.jpg

ஸ்ரீ மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம தம்பி ஸ்ரீ சிவன் சாரின் அனுகிரஹங்களும், அவருடன் பயணித்தவர்கள்,அவரை தரிசித்தவர்கள் அனுபவங்களை நாம் இந்த வாரம் முதல் தொடர்ந்து பார்ப்போம். நாம் தரிசிக்கும் ஒவ்வொரு அனுபவமும் நம்மை ஸ்ரீ சிவன் சாரிடம் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பை ஏற்படுத்தும்.

சிவன் சாரின் தரிசனம் வாரம் தோறும் கிடைக்க பெற்று வருகிறோம். சிவன் சாரின் அனுபவ உரைகளை தேடும்போது நமக்கு கிடைத்த ஸ்ரீ மஹா பெரியவாளின் அனுபவ பகிர்வை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

ஸ்ரீ பெரியவா இல்லம் , மாடம்பாக்கம்

சென்னையில் தாம்பரம் அருகில் உள்ள மாடம்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியவா இல்லத்தில் பாடசாலை அமைத்து பக்தி பரப்பும் ஸ்ரீ பிரகாஷ் மாமாவின் அனுபவங்கள்.

தமிழகத்தில் பல இடங்களில் இதுபோன்ற பல பெரியவா க்ரஹம் அமைவது பக்தர்கள் அவர் மீது கொண்டுள்ள பக்தியையும், அன்பையும் காட்டுகிறது.

மேலும் அடுத்த தலைமுறையினருக்கு ஆன்மீகத்தை போதிக்க பெருமளவில் உதவுகிறது. ஸ்ரீ பெரியவாளின் அனுக்கிரஹம் அனைவருக்கும், கிடைக்க வழி செய்கிறது.