தொடர்கள்
பொது
கடல் நீரை குடிக்கப் போகும் சென்னை !! ப ஒப்பிலி

20230823104509136.jpeg

சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பன்னிரண்டு ஏரியாக்கள் இந்த வருடகடைசியில் சென்னை குடிநீர் வாரியத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கப் பெறுவார்கள். இவர்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி கிராமத்தில் கடல்நீரை சுத்திகரித்து குடி நீராக்கும் நிலையம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் சோதனைஓட்டம் இந்த மாத கடைசியில் ஆரம்பிக்க உள்ளது குடிநீர் வாரியம். இந்த சுத்திகரிப்பு மையம்செயல்பாட்டிற்கு வந்தால் பன்னிரண்டு லட்சம் மக்கள் நல்ல குடிநீர் கிடைக்க பெறுவார்கள்.

குடிநீர் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் இந்த சுத்திகரிப்பு நிலையம் நாள்ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரித்து நன் நீராக மாற்றிவிடும். பிறகு அந்த நீர்குழாய்கள் மூலம் சோளிங்கநல்லூரில் உள்ள ஒரு நிலத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்க தொட்டியில்சென்று விழும். அங்கிருந்து உள்ளகரம் - புழுதிவாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர், ஆலந்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, மற்றும் பல்லாவரம் பகுதிகளில் வசிக்கும் ஒன்பதுலட்சம் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்கப்படும் என்கிறார் அந்த அதிகாரி.

இந்த குடி நீர் விநியோகத்திற்கான 48.104 கிலோமீட்டருக்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்கள் மூலம் நெம்மேலி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சோழிங்கநல்லூரில் உள்ளகீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு இந்த தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இந்தபன்னிரண்டு பகுதிகளுக்கும் குடி நீர் விநியோகம் செய்யப்படும். இந்த சுத்திகரிப்பு நிலையத்தில்இருந்து கடல் நீரை எடுப்பதற்கு கரையிலிருந்து கிட்டத்தட்ட 1,085 மீட்டருக்கு கடலுக்கு அடியில்குழாய்கள் பதித்து உள்ளது சென்னை குடி நீர் வாரியம்.

20230823104638487.jpeg

அடுத்த கட்டமாக கீழ் நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து நீரேற்று நிலையம் மூலம் குடிநீர்விநியோகம் செய்யப்படும். நீர் தேக்க தொட்டி மற்றும் நீரேற்று நிலைய கட்டுமான பணிகள் கடந்தமே மாதத்தில் முடிக்கப்பட்டு விட்டது. அதே போல சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும்பாலானகட்டுமான பணிகள் முடிவு பெற்றுவிட்டன. "கிட்டத்தட்ட 90% வேலைகள் சுத்திகரிப்பு மையத்தில்முடிந்து விட்டன. எனவேதான் இந்த மாத கடைசியில் சுத்திகரிப்பு நிலையத்தில் சோதனை ஓட்டம்செய்து பார்ப்பதற்கு குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது என்றார் அந்த அதிகாரி.

இந்த சுத்திகரிப்பு நிலையம் ரூபாய் 1,516.82 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. குடிநீர் வாரிய மற்றொரு அதிகாரி கூறுகையில் கரையிலிருந்து 1,075 மீட்டர் வரை கடலுக்கு அடியில்குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்து விட்டது. இன்னும் ஒரு பத்து மீட்டர் மட்டுமே குழாய்கள்பதிக்க வேண்டும். ஆனால் கடல் மண் குவிந்து வருவதால் அதை எடுப்பதற்கு அதிக நேரம்தேவைப்படுகிறது. ஆனால் இந்த வேலையை இம்மாத இறுதிக்குள் முடித்து விட முழு மூச்சாகசெயல் பட்டுக் கொண்டிருக்கிறது, என்றார் அந்த அதிகாரி.

சென்னை குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 2005ஆம் ஆண்டில் முதல் முறையாக மீஞ்சூரில்ஒரு கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இந்த நிலையம் ஒருநாளைக்கு 100 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திறன் கொண்டதாகும். அதே போலஇரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் நெம்மேலியில் 2013ஆம் ஆண்டு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. இந்த இரண்டு சுத்திகரிப்புநிலையங்களில் இருந்தும் நாளொன்றிற்கு மொத்தம் 200 மில்லியன் லிட்டர் கடல் நீர் குடி நீராகசுத்திகரிக்கப்பட்டு வட சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளில் குடி நீர் விநியோகம்செய்யப்படுகிறது.

சுத்தகரிக்கப்பட்ட கடல் நீரின் சுவை எப்படி இருக்கும் ??? நிச்சயம் உப்புக் கரிக்காது.

உத்தரவாதமாக !!!