தொடர்கள்
சோகம்
ஊட்டியில் புலிக் குட்டிகள் பசியால் மரணம் ! நெஞ்சை உருக்கும் நேரடி ரிப்போர்ட். - ஸ்வேதா அப்புதாஸ் .

அடர்ந்த வனத்தால் சூழப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையும் கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் நீலகிரி மாவட்டம்.

20230821121643991.jpg

தமிழ்நாடு , கேரளா மற்றும் கர்நாடக வனங்கள் சங்கமிக்கும் அற்புதமான இயற்கை சூழந்த பகுதி .

20230821113403476.jpg

முதுமலை புலிகள் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் பாதுகாக்க பட்ட சரணாலயம் யானை , புலி , சிறுத்தை , கரடி , செந்நாய் கூட்டம் , மான்கள் , குரங்குகள் , அரிய பறவைகள் , வெண் கழுத்து கழுகு பாதுகாக்கப்படும் ஒரு காடு.

20230821113448934.jpg

கடந்த மாதம் முழுவதும் ஊட்டியை சுற்றியுள்ள இந்த அற்புத வனங்களை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளின் தொடர் இறப்பு.

20230821114034331.jpg

கடந்த மாதம் முதுமலை புலிகள் சரணாலயத்தினுள் மட்டும் மூன்று பெரிய புலிகள் மர்மமான முறையில் இறந்து போய் அவைகளின் உடல் இதுவரை கிடைக்கவில்லை என்றும் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் காடு, இந்த அதிர்ச்சி சம்பவத்தை தன் வசம் மூடி மறைத்து விட்டது என்றும் கூறுகின்றனர் .

20230821114128285.jpg

ஊட்டி அவலாஞ்சி வன பகுதியில் உள்ள எமரால்டு வனத்தில் டேம் ஓரத்தில் இரண்டு பெரிய ஆண் புலிகள் இறந்து கிடந்ததை பார்த்த உள்ளூர் வாசிகள் வனத் துறைக்கு தகவல் கொடுக்க வனத் துறை ஆய்வு செய்யத் துவங்க, அதிர்ச்சி காத்திருந்தது .

முதலில் புலிகள் இரண்டும் சண்டையிட்டு இறந்திருக்கலாம் என்று யூகிக்கப்பட்டு, பின் புலிகளின் உடல் கூராய்வுக்குப் பின் இரண்டு புலிகளும் விஷம் உண்டு இறந்துள்ளது என்பது ஊர்ஜிதமானது .

20230821114234763.jpg

புலிகள் வேட்டையாடிய ஒரு மாட்டின் மேல் விஷத்தை தடவியதால் அந்த மாட்டின் இறைச்சியை சுவைத்த புலிகள் பரிதாபமாக இறந்து போனது என்ற தகவல் வன உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

20230821114332164.jpg

சேகர் என்பவரின் மாட்டை புலிகள் வேட்டையாடி கொன்று ரத்தத்தை. உரிஞ்சி விட்டு செல்ல மாட்டின் உரிமையாளர் அதன் உடலின் மேல் விஷத்தை தடவி புலிகளை கொன்று விட்டார் என்று அவரை கைது செய்ய, உள்ளூர் வாசிகள் எதிர்ப்பு தெரிவிக்க, கடைசியில் மாட்டின் மேல் விஷம் தடவியது ஊர்ஜிதமானது.

20230821114449335.jpg

அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் சின்ன குன்னுர் என்ற கிராமத்தின் வன பகுதியில் கடந்த வாரம் நான்கு புலிக்குட்டிகள் இறந்தது பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

20230821114524684.jpg

நான்கு பால் குடிக்கும் குட்டி புலிகள் இந்த பகுதியில் தவித்து கொண்டிருப்பதை பார்த்து வன துறைக்கு தகவல் கொடுக்க குட்டிகளை மீட்ட வன துறை கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் ரேவதி புலி குட்டிகளுக்கு சிகிச்சை அளிக்க நான்கு புலி குட்டிகளும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துள்ளன .

தாய் புலி குட்டிகளை விட்டு விட்டு எங்கு சென்றது என்று தெரிய வில்லை.இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

20230821114848196.jpg

இதற்கிடையில் 20 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் கேரளா பதிவு எண் கொண்ட ஒரு இனோவா கார் மற்றும் ஒரு ஜீப்பில் ஆறு பேர் கொண்ட நபர்கள் சந்தேகத்துக்கு இடமான படி வனப்பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தனர்.

2023082111494299.jpg

வனத்துறை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்கும் பின் முரணான தகவல்களை தந்தனர்.

வாகனங்கள் சோதனையின் போது வாகனங்களில் வேட்டைக்கு பயன்படும் ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

20230821115016285.jpg

இந்த ஆயுதங்களைக் கொண்டு வனப்பகுதியில் உள்ள புலி புள்ளி மான்கள் மற்றும் கடமான்களை வேட்டையாடுவது தெரியவந்தது.

மற்றும் இறந்து கிடக்கும் புலி சிறுத்தை மற்றும் வனவிலங்கு தோல்கள் நகங்கள் எலும்புகளை சேகரித்து கடத்துவதும் விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக கேரளா மலாபுரத்தை சேர்ந்த ஜம்ஷீர், ஜோயின், ஜியோ ஜான்,முகமது அனீஸ், ஜிப்பின் ஜான் ஆகிய ஐந்து பேரையும் வனத்துறையின் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

20230821121308922.jpg

இவர்களை வளைத்து பிடிக்கும் போது ஜாஸீர் என்ற மலப்புரத்தை சேர்ந்த ஒரு நபர் தப்பி ஓடியுள்ளார்.

20230821115211465.jpg

நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்கு வேட்டையாடும் கும்பல் ஐந்து பேர் கைது செய்யப்ட்டிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

கேரள வேட்டைக்காரர்களை நீலகிக்கு அழைத்து வந்து உதவி செய்த நபர்கள் குறித்தும் இவர்கள் எத்தனை ஆண்டுகள் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் வனவிலங்குகளை வேட்டையாடும் நவீன கருவிகள் எங்கு வாங்கப்பட்டது என்பது குறித்தும் வனத்துறை தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த ஒன்பது புலிகளின் மர்ம இறப்புக்கு காரணம் இந்த கும்பலா ? என்ற ரீதியிலும் விசாரணை தொடர்கிறது .

வன உயிரின ஆர்வலர் சிவதாசை தொடர்பு கொண்டு பேசினோம் ,

20230821115256387.jpg

இந்திய நாட்டின் தேசிய விலங்கு புலிகளின் தொடர் இறப்பு மிகவும் கவலை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது .

புலிகள் வயதாகி இறப்பது குறைவாக உள்ளது .விபத்து மற்றும் மர்மமான மரணம் தான் அதிகம் .

நீலகிரி மேல் நிலை வன பகுதியான குன்னூர் , கோத்தகிரி , எமரால்டு வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் , பார்சன்ஸ்வேலி , சின்ன குன்னுர் பகுதிகளில் புலிகள் நடமாட்டம் மனித வசிப்பிடத்தை டச் செய்து பின் இறப்பதும் உண்டு . மனித மிருக மோதல் தொடர்வது வேதனையான ஒன்று .

சிறுத்தை பாறைகளில் அமர்ந்து நாய் , கோழி என்று கவ்வி தின்று வாழ்ந்து விடுகிறது .அதே சமயம் புலி வேட்டையாடி பெரிய மிருகங்களை அடித்து உட்கொள்ளும் .

மேல்நிலை வன பகுதிகளில் பல்லுயிர் பெருக்கம் குறைவாக இருப்பதால் மான்கள் போன்ற விலங்குகள் குறைவதால் புலிகள் வனத்தை விட்டு மனிதர்கள் வாழும் பகுதியில் நுழைவதால் அழிவை சந்திப்பது வேதனையான ஒன்று .

காடுகளில் வளரும் தாவரங்கள் புல் வகைகள் மான்கள் யானைகள் வாழ உதவி புரிகிறது .அப்பொழுது தான் புலிகளின் அடர்த்தியும் அதிகரிக்கும் .

தற்போது பல்லுயிர் தாவரங்களை இழந்து காடுகள் இருப்பதால் பெரிய பாதிப்பு இழப்புகளை சந்திக்க நேரிடும் .

தாயை விட்டு குழந்தை புலி குட்டிகள் இறந்தது கண்ணீரை வரவழைத்த ஒன்று .

வன துறை பாதுகாப்பு சிகிச்சை போன்றவற்றை நவீன படுத்தி ஆய்வு செய்ய வேண்டும் .

20230821115656106.jpg

குட்டிகளை விட்டு விட்டு புலி தம்பதி எங்கும் செல்லாது அவை காணாமல் போய்யுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

பயோ டைவர்சிட்டி அதிகரிக்க வேண்டும் இனியும் புலிகள் இறப்பதை தவிர்க்க வேண்டும் " என்கிறார் சிவதாஸ் .

வன உயிரின புகைப்பட கலைஞர் பத்திரிகையாளர் மதிமாறன் கூறும் போது ,

20230821120005962.jpg

" மனித வனவிலங்கு மோதல் தான் புலிகளின் இறப்புக்கு காரணம் .மேலும் வன விலங்குகளுக்கு சுருக்கு வைப்பது .இறந்த மாட்டின் இறைச்சியில் விஷம் தடவுவதால் அந்த இறைச்சியை புலி உட்கொள்ளும்போது இறந்து விடுகிறது

2023082112004381.jpg.

ஒரு தாய் புலி எப்படி தன் குட்டிகளை விட்டு மாயமாகும் .புலி ஒரு பாசமுள்ள குடும்ப தலைவி என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .

தற்போது கேரளாவில் இருந்து வந்த வேட்டைக்கார கும்பலை பிடித்துள்ளது வன துறை .நீலகிரி உயிர் சூழல் பகுதி ஒரு உணவு சங்கிலி இங்கு வளரும் அறிய புல் வகையை உண்டு மான்கள் வளர மான்களை வேட்டையாடி உண்டு வாழ்வது புலிகள் .

20230821120524901.jpg

புல் செடி கொடி மூங்கில் வகை தாவரங்களை உண்டு வாழ்கிறது யானை போன்ற பெரிய வன உயிரினங்கள் .இந்தியாவின் தேசிய விலங்கான புலி அழிவதை ஒப்புக்கொள்ள முடியாது காப்பாற்ற வேண்டியது வன துறையின் கடமை " என்கிறார் .

1973 ஆம் வருடம் துவங்கின ' டைகர் ப்ராஜெக்ட்' ஐம்பது வருடம் கடந்த ஒன்று .

20230821120912247.jpg

ஜப்பான் நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து முதுமலை காட்டில் வளரும் அறிய வகை புல்லால் மான்கள் வளர, புலியும் அதிகரிக்கும், அந்த புல்லின் இதமான காற்று மிதந்து இயற்கையாக பறந்து ஜப்பான் சென்று அங்கு ஏற்பட்ட கொடூர அணு கதிர் பாதிப்பை குறைக்க உதுவுகிறது என்ற அளவில் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதற்காக உருவான திட்டம் தான் OISCA ப்ராஜெக்ட் தற்போது அது கிடப்பில் அந்த நிதிகள் எல்லாம் காற்றில் பறந்துள்ளது தனிக் கதை.

20230821120936137.jpg

எது எப்படியோ ஆபத்தில் உள்ள தேசிய விலங்கான புலியை காப்பாற்ற வேண்டிய கடமை நம் வன துறைக்கு மட்டும் தான் உண்டு என்பது உண்மை.

மனிதர்கள் வேட்டையாடி இந்த இனம் அழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவர்களது கடமை தான்.