சவூதி அரேபியாவின் 2-வது மிகப்பெரிய நகரமான ஹெக்ராவில், கடந்த சில மாதங்களுக்கு முன் பூமிக்குள் புதைந்து போன 69 மம்மிக்களின் படிமங்களை தொல்லியல் நிபுணர்கள் கண்டறிந்தனர். பொதுவாக, இங்குள்ள பாலைவனங்களில் பழங்கால எச்சங்களிலிருந்து இதுபோன்ற மம்மி படிமங்கள் கண்டுபிடிக்கப்படுவது இயல்புதான். எனினும், மற்ற மம்மி படிமங்களைவிட இது வேறுபட்டிருக்கிறது. அதாவது, இந்த மம்மி படிமங்களின் உயிரியல் எச்சங்கள் இதுவரை அழியாமல் இருந்து வந்திருப்பது தெரியவந்தது.
முன்பெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் அழியாமல் கிடைப்பது மிக அபூர்வம். எனவே, தற்போது கிடைத்துள்ள உயிரியல் எச்சங்களை கொண்டு, அக்காலத்தில் மனிதர்கள் எப்படி இருந்தனர் என்பதை கண்டுபிடிக்க தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். இம்முயற்சியின் விளைவாக, தற்போது இரண்டாயிரம் ஆண்டு முந்தைய ஒரு பெண்ணின் முகம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இப்பெண் 'நபாட்டேயர்கள்' வம்சத்தை சேர்ந்தவராவார். இவர்களின் ராஜ்யம், ஒரு காலத்தில் அரபு நாடுகள் முழுவதும் பரவியிருந்தது.
இவர்களின் தலைநகரம்தான் பெட்ரா. இது, தற்போதை ஜோர்டானின் ஒரு பகுதியாக உள்ளது. அரபு பாலைவனத்தில் நாடோடிகளாகச் சுற்றித் திரிந்த நபாட்டேயர்கள் பாலைவனத்தை முழுமையாக புரிந்து, கி.மு 90 முதல் கி.பி 106 வரை ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் தங்களுக்கு என நிலையான தெய்வத்தை கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு காலகட்டங்களிலும் தங்களது தெய்வங்களை மாற்றி வந்துள்ளனர். மற்ற பழங்குடியினரை போல் இவர்களுப் வீரர்களாக உருவாகினர். இதனால்தான் இவர்களால் இதர பகுதிகளையும் ஆட்சி செய்ய முடிந்திருக்கிறது.
இதுகுறித்து பைபிளில் ஆபிரகாமின் மகனான இஸ்மவேலின் வழித்தோன்றல்களான ஹீப்ரு, நபாட்டேயர்கள் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தாலும், இவர்களின் ஆட்சி குறித்து நீண்ட வரலாற்று நூல்களை விட்டுச் செல்லவில்லை. எனினும் சில கல்வெட்டுகளில் தங்களது ஆட்சிமுறை குறித்து எழுதி வைத்துள்ளனர். இவர்களின் காலத்தில் நாணய முறை அமலில் இருந்திருக்கிறது.
இந்நிலையில், சவூதி அரேபியாவில் கிடைத்த உயிரியல் எச்சங்களை கொண்டு, மனித முகங்களை உருவாக்கும் இங்கிலாந்து ஆய்வு நிறுவனத்தின் முயற்சிக்கு, சவூதி அரேபியாவின் AlUla ராயல் கமிஷன் நிதியுதவி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, இருதரப்பினரும் இணைந்து முதன்முறையாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண்ணின் முகத்தை கடந்த சில நாட்களுக்கு முன் வடிவமைத்து வெளியிட்டு உள்ளனர்.
இதுகுறித்து இங்கிலாந்து தொல்லியல் ஆய்வு நிபுணர்கள் கூறுகையில், "இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டமைத்த மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்ற ஆய்வு மிக சுவாரஸ்யமான நிகழ்வு. முன்பு எழுந்த கேள்வியைத் தொடர்ந்து, இப்போது அதை சாத்தியப்படுத்தி இருக்கிறோம். நபாட்டேயர்கள் உருவாக்கிய நினைவு சின்னங்கள் தற்போது கம்பீரமாக நிலைத்திருக்கிறது.
அதேபோல், தற்போது அவர்களின் உருவங்களை மீட்டுருவாக்கம் செய்திருப்பது எங்களுக்கு பெருமைதான். நபாட்டேயர்கள் பற்றி நாங்கள் நிறைய விஷயங்கள் அறிந்திருந்தாலும், அவர்களை முழுமையாக புரிந்துகொள்ள எங்களுக்கு கூடுதல் தகவல்கள் தேவைப்பட்டது. இந்த தேவைகளின் ஒரு பகுதிதான் இந்த பெண் உருவங்களினா மீட்டுருவாக்கம்!" என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இன்னும் ஆயிரம் வருடங்கள் கழித்து நமது ஹீரோ ஹீரோயினிகளை பற்றிய அகழ்வாராய்ச்சிகளில் என்ன கண்டுபிடிப்பார்களோ... தமிழ்நாடு என்ற மாநிலம் இருந்தது இந்த மக்கள் மதுவுக்கு அடிமையாகி சினிமா மோகம் கொண்டு... திரிந்தவர்கள் என்று கூட வருங்கால அகழ்வாராய்ச்சி சொல்லலாம்........
காலம் எத்தனை மகத்தானது. எவ்வளவு கொடூரமானது என்று அகழ்வாராய்ச்சி செய்திகளைப் படித்தால் உணரலாம்......
Leave a comment
Upload