தொடர்கள்
ஆன்மீகம்
தினம் தினம் திவ்ய அனுபவம் - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240729130027318.jpg

தமிழ் மொழியை பல்லாயிரம் காலமாக வாழ்விக்க பல விஷயங்கள் உதவியுள்ளது. அதில் முக்கியமானது ஆழ்வார்கள் அருளிய ஸ்ரீ திவ்ய பிரபந்தம். கவசம் கனெக்ட் யூடுப் சேனலில் தினமும் ஒரு பாசுரம் என அடுத்து 4000 நாட்களுக்கு நம்மை தமிழுயிலும், பக்தியிலும், ஆன்மீகத்திலும் ஈடுபடுத்த டாக்டர் வெங்கடேஷ் வழங்கும் அந்த தினந்தோறும் பிரபந்தம் காணொளிகளை தொகுத்து உங்களுக்கு வழங்குவதில் விகடகவி மகிழ்ச்சி கொள்கிறது.

திருப்பாணாழ்வார் அருளிய

அமலனாதிபிரான் 2 தனியன்கள்

ஆபாத சூட மநுபூய ஹரிம் ஷயானம் *

மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா *

அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம் *

யோ நிஷ்சிகாய மநவை முநிவாஹனம் தம் *

- பெரிய நம்பிகள் அருளியது

காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி*

தேட்டரும் உதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்*

வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து*

பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே*

- திருமலைநம்பிகள் அருளியது

- திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.

திருப்பாணாழ்வார் அருளிய

அமலனாதிபிரான் பாசுரம் 1

அமலனாதிபிரான் முதல் பாசுரம்

அமலன் ஆதிபிரான்

அடியார்க்கென்னை ஆட்படுத்த விமலன்,

விண்ணவர் கோன்

விரையார் பொழில் வேங்கடவன்,

நிமலன் நின்மலன் நீதி வானவன்

நீள் மதிள் அரங்கத்தம்மான்,

திருக்கமல பாதம் வந்து

என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.

- திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.

திருப்பாணாழ்வார் அருளிய

அமலனாதிபிரான் பாசுரம் 2

பெருமாளின் திருவடிகள் கண்களில் நிறைந்தன...

இடுப்பில் அணிந்திருக்கும் மஞ்சு பட்டு பீதாம்பரம்

உள்ளத்தில் நிறைகிறது

அமலனாதிபிரான் இரண்டாம் பாசுரம்

உவந்த உள்ளத்தனாய்

உலகம் அளந்தண்டம் உற,

நிவர்ந்த நீள் முடியன்

அன்று நேர்ந்த நிசாசரரைக்,

கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்

கடியார் பொழில் அரங்கத்தம்மான்

அரைச்சிவந்த ஆடையின் மேல்

சென்றதாம் என சிந்தனையே.

- திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.

திருப்பாணாழ்வார் அருளிய

அமலனாதிபிரான் மூன்றாம் பாசுரம்

மந்தி பாய்

வட வேங்கட மாமலை,

வானவர்கள் சந்தி செய்ய நின்றான்

அரங்கத்தரவின் அணையான்,

அந்தி போல் நிறத்தாடையும்

அதன் மேல் அயனைப் படைத்ததோர் எழில்

உந்தி மேலதன்றோ

அடியேன் உள்ளத்தின் உயிரே.

- திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.

சதுர மா மதிள் சூழ்

இலங்கைக்கிறைவன் தலைபத்துதிர ஓட்டி,

ஓர் வெங்கணை உய்த்தவன்

ஓத வண்ணன்

மதுர மா வண்டு பாட

மா மயிலாடரங்கத்தம்மான்,

திரு வயிற்றுதர பந்தம்

என் உள்ளத்து நின்றுலாகின்றதே.

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்

- திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.

திருப்பாணாழ்வார் அருளிய

அமலனாதிபிரான் ஐந்தாம் பாசுரம்

பாரம் ஆய

பழவினை பற்றறுத்து,

என்னைத் தன் வாரம்ஆக்கி வைத்தான்

வைத்ததன்றி என்னுள் புகுந்தான்,

கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன்

அரங்கத்தம்மான்,

திரு ஆர மார்பதன்றோ

அடியேனை ஆட்கொண்டதே.

- திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்

பிரளய காலத்தில் மொத்த உலகத்தையும் உண்டவனான ஸ்ரீ ரங்கநாதருடைய கழுத்தின் அழகை வாழ்த்தி பாடுகிறார் திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் ஆறாம் பாசுரம்

துண்ட வெண்பிறையன் துயர் தீர்த்தவன்

அஞ்சிறைய வண்டுவாழ் பொழில் சூழ்

அரங்க நகர் மேய அப்பன்

அண்டர் அண்ட பகிரண்டத்து

ஒருமாநிலம் எழுமால் வரை,

முற்றும் உண்ட கண்டம் கண்டீர்

அடியேனை உய்யக்கொண்டதே. -

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்