கடவுள் தேசம் கேரளா வயநாடு நிலச்சரிவு சோகம் மறக்க முடியாத ஒரு வரலாற்று பதிவு. வயநாடு ஒரு காலத்தில் சுற்றுலாப் பயணிகள் சொர்க்கமாக இருந்தது. அந்த சொர்க்கம் தான் இப்போது சுடுகாடாக மாறி இருக்கிறது.
இந்தியாவில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் மொத்தம் 30 அதில் பத்து மாவட்டங்கள் கேரளாவில் உள்ளன. நிலச்சரிவு பட்டியலில் வயநாடு 13-வது இடத்தில் இருக்கிறது. புவியியல் ரீதியான சிக்கலான பகுதி என்று வயநாடு ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு உள் கட்டமைப்பு வசதிகளை சுற்றுலாப் பயணிகளுக்காக மேற்கொள்ளும் போது அரசு இதை கருத்தில் கொள்ள வேண்டும். ஆனால், அப்படி செய்தது போல் தெரியவில்லை. இனிமேல் அதை உணர்ந்து செயல்படுவது நல்லது. இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் குறிப்பாக நீலகிரியில் கோடைகாலத்தில் கடும் வெப்பமாக இருந்தது. கோடைகாலத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வெப்பத்தை தணிக்க நீலகிரி வருவது வழக்கம். ஆனால், அதே வெப்பத்தை நீலகிரியிலும் இந்த முறை அனுபவித்தார்கள். இப்போது தொடர் மழை நிலச்சரிவு என்று சொல்கிறார்கள். ஆனால், மாநில அரசு இது பற்றி பெரிதாக கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. வயநாடுக்குப் பிறகும் நாம் பாடம் கற்கவில்லை என்றால் வரலாறு நம்மை மன்னிக்காது தமிழக அரசு புரிஞ்சு செயல்படுவது நல்லது. காலநிலை மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்று ஆகிவிட்டது. இதற்கு நாம் தான் காரணம் அதன் விளைவுகளும் நம்மையே சேரும் என்பதை இந்த அரசு நினைவில் கொள்ள வேண்டும்.
Leave a comment
Upload