(பாலிமர் டிவி புண்ணியத்தில் உண்மை நிலவரம். மற்ற சேனல்களில் எல்லாம் சென்னையில் வெயில் அடிக்கிறது. தண்ணீரே தேங்கவில்லை)
மழை புயல் என்றால் சென்னையில் முதலில் பாதிக்கப்படும் இடம் வேளச்சேரி தான். இந்த முறையும் வழக்கப்படி வேளச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சில இடங்களில் தேங்கிய மழை நீர் மழை நின்றதும் தானாக வடிந்து விடும். ஆனால், வேளச்சேரி அப்படி இல்லை மழை நின்றாலும் இரண்டு மூன்று நாட்களுக்கு வேளச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். அதேபோல் புயல் மழை என்றால் வேளச்சேரியில் மின் இணைப்பு உடனே துண்டிக்கப்படும். அதன் பிறகு மீண்டும் மின் இணைப்பு உயிர் பெறுவது என்பது உடனே எல்லாம் வாய்ப்பல்ல சில நாட்கள் ஆகும் என்கிறார்கள். அந்த பகுதி வாசிகள் இது எங்களுக்கு பழக்கப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் புயல் பற்றிய அறிவிப்பு வந்ததும் நாங்கள் கீழ்த்தளத்தில் இருப்பவர்களை உஷார் செய்து விடுவோம். முக்கியமான உடைமைகளை பத்திரமாக மேல் தளத்தில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் தந்து விட சொல்வோம். டிவி, பிரிட்ஜ் போன்றவற்றை எவ்வளவு உயரமாக வைக்க முடியுமோ அவ்வளவு உயரமான இடத்தில் வைக்க சொல்லி அறிவுறுத்துவோம். தண்ணீர் உள்ளே வர ஆரம்பித்ததும் அவர்களை பாதுகாப்பாக மேல் தளத்தில் கொண்டு சேர்த்து பாதுகாப்போம் என்கிறார்கள். வேளச்சேரி அனுபவஸ்த்தார்கள் .
இந்த முறை விஜயநகர் உள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் இங்கு எந்த நடவடிக்கையும் இருக்காது சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு உடன் கிளம்பி விட்டார்கள் அல்லது பாதுகாப்பான பகுதியில் உள்ள நண்பர்கள் வீட்டில் போய் தங்குகிறார்கள். வேளச்சேரி பகுதியில் மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை காரணம் மழை தண்ணீர் தான். எனவே ஆட்டோக்களை நம்பி தான் அந்தப் பகுதி மக்கள் இருக்க வேண்டும். ஆட்டோகாரர்கள் இதுதான் சமயம் என்று அவர்களை வெளியே பாதுகாப்பாக கொண்டு போவதற்கு வாயில் வந்த தொகையை கட்டணமாக கேட்கிறார்கள். வேளச்சேரி வாசிகளும் வேறு வழியின்றி இங்கிருந்து போனால் போதும் என்று ஆட்டோக்காரன் கேட்ட பணத்தை தந்து வேளச்சேரி விட்டு தப்பித்து செல்கிறார்கள். எப்படியும் வேளச்சேரி சகஜ நிலைமைக்கு திரும்ப ஒரு வாரம் பத்து நாட்கள் ஆகும். அதிகாரிகளே ஒரு வாரமாகும் நான்கு நாட்கள் ஆகும் என்று சொல்கிறார்கள். எனவே இங்கே இருந்து கொண்டு எங்களால் அவஸ்தைப்பட முடியாது என்று வேளச்சேரியை விட்டு மக்கள் இந்த முறை வெளியேற தொடங்கி விட்டார்கள்.
ஏற்கனவே மழை வெள்ளத்தில் வேளச்சேரி மக்கள் அவதிக்குள்ளாகும் போது வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசன் மௌலானா இப்படி மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று ஒரு you tube சேனலில் அவரை பேட்டி கண்டபோது இவ்வளவு பெரிய மழை வரும் போது இயற்கை பேரிடரில் இதெல்லாம் சாதாரண விஷயம் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வேளச்சேரி ஏரி உயரத்தை அதிகரிக்கும் போது ஊருக்குள் தண்ணீர் வரத்தான் செய்யும். ஆறுகளில் தண்ணீர் அதிக அளவு இருப்பதால் உள்வாங்கவில்லை.
இதனால் வேளச்சேரி பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடல் ஆனது தண்ணீரை உள்வாங்க இல்லையென்றால் நாம் என்ன செய்வது இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாது என்று சொல்லி இருக்கிறார்.
இது தவிர வேளச்சேரி மக்களிடம் கொஞ்சம் வாய் துடுக்காக பேச தொகுதி எம்எல்ஏ எதிர்த்து மக்கள் சத்தம் போட்டு கிட்டத்தட்ட தள்ளு முள்ளு அளவு போகவே தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.
எம்எல்ஏவின் இந்த திமிர் பேச்சை வேளச்சேரி திமுகவினர் ரசிக்கவில்லை. இவரின் திமிர் பேச்சால் நமது கட்சிக்கு தானே கெட்ட பெயர் என்று தலைமையிடம் புகார் சொல்லி இருக்கிறார்கள்.
Leave a comment
Upload