தொடர்கள்
வலையங்கம்
இது மிகவும் ஆபத்தானது

20230822173946860.jpg

வன்னியர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் புதிதாக ஒரு பிரச்சனையை எழுப்பி இருக்கிறார். தனது சமூக வலைதள பக்கத்தில் எம் பி சி ஜாதி சான்றிதழ் வேண்டுமா ரூபாய் 5000 இருந்தால் போதுமானது. தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள ஜாதிகளின் பெயரில் போலியான ஜாதி சான்றிதழ் பெறுவது இப்போது அதிகரித்து விட்டது. தரகர்களிடம் ரூபாய் ஐயாயிரம் தந்தால் நீங்கள் கேட்ட ஜாதி சான்றிதழ் வாங்கித் தந்து விடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் சொல்வது உண்மையாக இருந்தால் மோசமான விளைவுகளை தான் ஏற்படுத்தும். இட ஒதுக்கீட்டுக்கான காரணத்தை இந்த போலிச் சான்றிதழ்கள் நீர்த்துப் போக செய்துவிடும். ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு இதுவரை இந்த அரசு எதுவும் பதில் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது. டாக்டர் ராமதாஸ் சொல்லும் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் இந்த அரசு அதை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே போலிச் சான்றிதழ் பெற்ற பயனாளிகளை கண்டுபிடித்து அந்த சான்றிதழ்களை ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் இட ஒதுக்கீடுக்கான காரண காரியம் உண்மையாகும். இட ஒதுக்கீடு பற்றி பெருமை பேசும் இந்த அரசு இது குறித்து எதுவும் சொல்லாதது மிகவும் ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இட ஒதுக்கீடு மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கல்வி வேலைவாய்ப்பில் பலன் அடைகின்றனர். அதில் போலிகள் ஊடுருவல் என்பது மிகவும் ஆபத்தானது எனவே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.