கனரா வங்கி ஏடிஎம்...முதியவர் ஒருவர் பணம் எடுத்துக் கொண்டு இருக்க,
அடுத்து நின்ற ரகுவிற்கு “நீங்கள் என்ன வேலை செய்யறீர்கள் ? உங்கள் வருமானம் ?, வங்கி கணக்கு பற்றியெல்லாம் மருத்துவர் குருமூர்த்தி கேட்டது நினைவிற்கு வந்தது.
எலக்ட்ரீஷியன் சார், சுமாரான வருமானம், வங்கி இருப்பு, எல்லாம் சொன்னான் ரகு. சாயந்திரம் ஆபரேஷன் இருக்கும், பணத்தை கட்டி விடுங்கள் என்றார் டாக்டர்.
மொத்தம் எவ்வளவு ஆகும் டாக்டர் ? எப்படியும் குறைந்தது இருபதாயிரம் ஆகும் என்றார்.
சார் என்கிட்டே ஒரு ஐயாயிரம் இருக்கு, அதை ஏடிஎம்ல் எடுத்து கட்டி விடுகிறேன் மீதியை டிஸ்சார்ஜ் ஆவதற்குள் கட்டி விடுகிறேன் என பணிவாக சொன்னவனை பார்த்த டாக்டர்,
தம்பி பத்தாது, என்றவர், சரி பராவாயில்லை ரூபாய் ஐயாயிரத்தை இப்போதே கட்டிவிடு என்றதால் ஏடிஎம் வாசலில் நிற்கின்றான்.
சிறுக சிறுக டெலிவரிக்காகவே எட்டு மாதமாக சேமித்தது, நார்மல் டெலிவரிதான் ஆகனும் என இருந்தனர் ரகுவும், அவன் மனைவியும், திடீரென நீர் குறைந்து ,வலி எடுக்க, குரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சை பண்ண வேண்டிய சூழல்.
ஏடிஎம் லிருந்து வெளிவந்த வயதில் முதிய நபர் பணத்தை எண்ணியபடி வெளியே வந்து தனது கைபையில் வைத்ததைக் கவனித்த ரகு எப்படியும் இருபதாயிரம் இருக்கும் என மனத்திற்குள் எண்ணினான். படி இறங்கியவர், தடுமாறி கீழே விழந்துவிட இவன் ஓடிச்சென்று ஐயா, ஐயா, என எழுப்ப முயன்று தோற்றான்,
அவர் நினைவின்றி கிடக்க, சுற்றும் பார்த்தவன, ஆள் அரவமில்லை, அவரின் கைப்பையை மட்டும் கையில் எடுத்த ரகு தன் வண்டியை எடுத்துக் கொண்டு ஏடிஎம் ல் பணம் எடுக்காமல் புறப்பட்டான், மருத்துவமனையில், சிகிச்சைக்கான பணம் ஐயாயிரத்தை டாக்டர் குருமூர்த்தியிடம் கொடுக்க, அவர் வாங்க மறுத்து விட்டார்.
ரகு, நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்,அதை உங்களுக்கு பிறக்கும் குழந்தையின் பெயரில் நிரந்தர வைப்பு நிதியாக சேமியுங்கள், என்று கூறினார். இனி வரும் காலங்களில் எல்லா தடுப்பூசிகளும், இங்கே விலையில்லாமல் செய்து கொள்ளலாம் என்று டாக்டர் கூறவும் ரகுவிற்கு ஒன்றும் புரியவில்லை. ரொம்ப நன்றி சார், என விழித்தவனிடம்.
நீங்கள் மயங்கிய நிலையிலே அழைத்து வந்தீர்களே ஒரு பெரியவர் அவர் வேறு யாரும் அல்ல, என் தந்தைதான் என்ற டாக்டர் ஓய்வூதியப் பணத்தை எடுக்க வந்தவர், மயங்கி விழ நீங்கள் பத்திரமாக இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள் என்று தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டவர்,
இந்ததொகை என் அப்பாவின் உயிரை விட பெரியதல்ல என்றவர். அவரின் தொகை ரூபாய் இருபதாயிரம் தொலைந்து இருந்தால் அவர் உயிர் கூட நீங்கியிருக்கும் அதை நீங்கள் நேர்மையாக ஒப்படைத்தது மிகவும் பாரட்டத்தக்கது என்றார். .
அவரது பணப்பையோடு வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பிய ரகு, ஆட்டோ ஒன்றை அழைத்துக்கொண்டு ஏடிஎம்வாசல் வந்த போது ஓரிருவர் இருந்தனர், அவர்களை விலக்கி அவர் சட்டைப் பையில் பார்த்தான் டாக்டர் குருமூர்த்தி, குருமருத்துவமனை என விசிட்டிங் கார்டு இருக்கவும், அந்த மருத்துவமனையின் பேஷணடாக இருக்கக் கூடும் என நினைத்து ஆட்டோவில் ஏற்றி அமர வைத்து விட்டு பின் தொடர்ந்து, அதே மருத்துவமனையில் சேர்த்து பணம் உள்ள கைப்பையை பத்திரமாக டீயூட்டி டாக்டரிடம் கொடுத்து விட்டு, மீண்டும் ஏடிஎம் சென்று பணம் எடுத்துக்கொண்டு கட்டுவதற்கு டாக்டரிடம் வந்தான் ரகு.
என்னப்பா, ஆப்ரேசன் நல்லபடியாக முடிந்ததா ? என டாக்டரின் அப்பா, டாக்டரிடம் கேட்டார், இல்லை மாலை ஆறு மணிக்கு என்றார். என் நடிப்பு எப்படி? என கேட்டார் டாக்டர் அப்பா, நீங்கள் என்ன அப்பா, இருபதாயிரத்திற்கு நடியுங்கள் என்றால் நீங்கள் லட்ச ரூபாய்க்கு நடிக்கறீர்கள் என குருமூர்த்தி கேட்க, அதற்கு பெரியவர் நீ மட்டும் என்ன ? உதவி செய்யனும் என்று நினைத்தால் செய்திட வேண்டியதுதானே, அதற்கு ஏன் இத்தனை அலைக்கழிப்பு சோதனை, என இருவரும் பேசிக்கொண்டார்கள்.
இயலாதவருக்கு உதவி செய்வது நல்லதுதான்,
ஆனால் அதுவும் நேர்மையானவனுக்குத்தான் செய்யனும் என்று நீங்கள் தானே அப்பா சொல்வீர்கள், ஆதலால், அவனின் நேர்மைக்கும், பிறர் பொருள் மீது பற்று உள்ளவனா ? என ஒரு சோதனைக்காகத்தான் அங்கே உங்களை போகச்சொன்னேன்
நிச்சயமாக இல்லைடா, மாதாமாதம் சில டெலிவரி கேஸ்களை
உன் மருத்துவமனையில், நீ விலையில்லாமல் செய்வது எனக்கும் பெருமைதானே, அதிலே எனக்கும் சந்தோஷம்தான் என முதுகில் தட்டிக்கொடுத்தார் தன் மகனை.
"அடுத்த வாட்டி வேற யோசி. ஒவ்வொரு முறையும் ஏடிஎம் வாசல்ல மயங்கி விழ முடியாது !"
Leave a comment
Upload