இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு பாம்பு வருடம்.
ஹாங்காங்கில் கோலாகலமாக பேரணியுடன் கொண்டாடப்பட்டது.
இதில் குறிப்பிடும்படியாக இந்தியாவின் சார்பில் மலையாள அகாடமி பங்கு கொண்டு பேரணியில் கதகளி, செண்டை மேளம், மலையாள உடைகள் என்று கலக்கி விட்டனர். தலைவர் கோபிநாத், அவருடைய செயற்குழு, 2016ல் தமிழ் பண்பாட்டுக் கழகம் செய்ததைப் போலவே, கொஞ்சம் அதற்கும் மேலேயே ஏற்பாடு செய்து அசத்தியிருக்கிறார்கள்.
பேரணியில், தென்னிந்திய நடனங்கள், திருவாதிர களி, மோகினியாட்டம் போன்றவை ஹாங்காங் வீதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது பரவசம்.
காவடி ஆட்டமும் நடந்தேறியது.
இன்னொரு முக்கியமான ஐட்டம் கதகளி. மலையாளத்திற்கே உரிய பாரம்பரிய நடனம்.
தைய்யம் ஆட்டமும் இடம் பெற்றது.
முப்பதிற்கும் அதிகமான மலையாள சங்க ஆட்கள் கலந்து கொண்டு செண்டை மேளத்துடன் ஆடியது பார்வையாளர்களை அதிசயக்க வைத்தது.
வீடியோ இங்கே....
நன்றி வணக்கம் ஹாங்காங். தேவி/சதீஷ்.
Leave a comment
Upload