இயற்கை ஆர்வலர்களுக்கும், கடல் ஆமை ஆர்வலர்களுக்கும் ஜனவரி பிறந்தாலே குஷிதான்.ஏனெனில், ஜனவரி முதல் நாளிலிருந்து கடல்/பங்குனி ஆமைகள் (Olive Ridley Sea turtles) சென்னைகடற்கரைகளில் முட்டையிட வரும் காலமாகும்.
வழக்கம் போல் இந்த வருடம் ஆரம்பித்த முட்டை இடும் பருவம் முதல் பதினைந்து நாட்களில் சுமாராக சென்றுகொண்டிருந்தது.
அதன் பிறகு வந்த நாட்களில் ஆர்வலர்களுக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. மரீனா கடற்கரை முதல்கோவளம் கடற்கரை வரையுள்ள பகுதிகளில் தினமும் கொத்து கொத்தாக ஐம்பது, நூறு என்ற கணக்கில் செத்தகடல் ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்க துவங்கின.
பழவேற்காடு பகுதியிலும் இதே மாதிரி இறந்த ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்க துவங்கியதும், மாநிலவனத்துறை விழித்துக் கொண்டது.
கரை ஒதுங்கிய உடல்களில் necropsy என்கிற பிரேத பரிசோதனை செய்ய முயன்ற போது இறந்த உடல்களில்பாகங்கள் மிகவும் அழுகிய நிலையில் இருப்பதை கண்டனர் வனத்துறையினர். வேறு வழின்றி பரிசோதனைசெய்யாமலே அவற்றை புதைத்தனர்.
இது வரை வந்த தகவல்களின் படி ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில் சென்னைகடற்பகுதிகளில் கரை ஒதுங்கின. ஏன் இந்த அளவில் கடல் ஆமைகள் இறந்தன என்பதற்கான சரியானகாரணங்கள் இதுவரை கண்டுபிடிக்க படவில்லை.
வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது ஒவ்வொரு வருடமும் இறந்த கடல் ஆமைகள் உடல்கள் கரைஒதுங்குவது பொதுவான நிகழ்ச்சிதான். ஆனால் இந்த முறை பருவம் ஆரம்பித்து முதல் இருபத்தைந்துநாட்களுக்குள்லேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து ஒதுங்கியது அனைவருக்குமே ஒருஅதிர்ச்சி தகவல்தான்.
முக்கிய காரணமாக வனத்துறையும், கடல் ஆமை ஆர்வலர்களும் கை காட்டுவது ஆழ் கடல்விசைப்படகுகள்தான். இந்த விசைப்படகுகள் தடைசெய்யப்பட்ட சுருக்கு மடிவலைகள் (purse seine net), மற்றும்கடமா வலைகளை (squid net) மீன் பிடிக்க பயன்படுத்தியதே இத்தனை கடல் ஆமைகள் இறப்புக்கு காரணம்என்கின்றனர் அவர்கள்.
சென்னை காசிமேட்டில் படகு வைத்துள்ள பாலாஜி கூறுகையில் இந்த தடை செய்யப்பட்ட வலைகளைகடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர்களும் அந்த பகுதியில் உள்ள பிற மீனவர்களும் அதிக அளவில்பயன்படுத்துகின்றனர். அவர்கள் சென்னை கடல் பகுதி வழியாக ஆந்திர பிரதேச மாநில கடல் பகுதிக்குசெல்லும் பொழுது சென்னை கடற்பகுதிகளில் முட்டையிட வரும் கடல் ஆமைகள் இந்த வலைகளில்மாட்டிக்கொண்டு நீரில் மூழ்கி இறந்து கரை ஒதுங்குகின்றன. இதில் பெரிய வருத்தம் என்னவென்றால் இந்தபடகுகள் கரையிலிருந்து 9 .2 கிலோமீட்டர் தூரத்தை தாண்டிதான் வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கவேண்டும். ஆனால் இந்த ஆணையை யாரும் மதிப்பதில்லை. பல படகுகள் இந்த எல்லைக்குள்லேயே தங்கள்வலைகளை வீசி மீன் பிடிக்கின்றனர் என்கிறார் பாலாஜி.
கடல் ஆமை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில் கடலில் நீந்தி செல்லும் ஆமைகள் நாற்பத்து ஐந்துநிமிடங்களுக்கு ஒரு முறை நீரின் மேற்பரப்பில் வந்து மூச்சு விட்டு விட்டு மீண்டும் நீருக்குள் சென்று விடும்.ஆனால் முட்டையிட வரும் ஆமைகள் இந்த வலைகளில் சிக்கிக்கொண்டால் மூச்சு விட வெளியே வரமுடியாமல்இறந்து போகும்.
மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்களை கூடைகளில் மாற்றும் போது வலைகளில் இறந்து கிடைக்கும்ஆமைகளை அப்படியே கடலில் வீசி விடுவார்கள். அந்த இறந்த ஆமை உடல்களே கரை ஒதுங்குகின்றன,என்கிறார்கள் அவர்கள்.
திடீரென இத்தனை இறந்த கடல் ஆமைகளின் உடல்கள் சென்னை கடற்கரை பகுதிகளில் ஒதுங்கியதும்மாநில தலைமை செயலர் ந முருகானந்தம் கடந்த வாரம் தலைமை செயலகத்தில் அனைத்துத்துறை கூட்டம்ஒன்றை நடத்தினார்.
இதில் வனத்துறை, மீன்வளத்துறை, கடலோர காவல் படை (Indian Coast கோர்டு) அதிகாரிகள், தமிழககடலோர காவல்படை அதிகாரிகள், மற்றும் ஆமையின ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் படகுகள், மற்றும் கரையிலிருந்து 9.2 கிலோமீட்டருக்குள் மீன் பிடிக்கும் படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்ய்யப்பட்டது.வனத்துறை, மீன்வளத்துறை, கடலோர காவல் படை, தமிழக கடலோர காவல் படை, மற்றும் ஆமையினஆராய்ச்சியாளர்கள் அடங்கிய ஒரு சிறப்பு கூட்டு குழு உருவாக்க்கப்பட்டு, அந்த குழு வாரம் ஒரு முறைகடலினுள் ரோந்து சென்று அரசிற்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் வனத்துறையின் கீழ் இயங்கும் மேம்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம் Advanced Institute for Wildlife Conservation ஆமை இறப்புகளின் காரணத்தை கண்டறிந்து அதுகுறித்து தமிழ்நாடு கால்நடைமருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து தொடர் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து வனத்துறையும், மீன்வளத்துறையும் இனைந்து கடந்த வாரம் இருபத்திநான்குஆழ்கடல் விசை படகுகளை பிடித்தனர். கடற்கரையிலிருந்து 9.2 கிலோமீட்டர் தூரத்திற்குள் மீன் பிடித்தகுற்றதிற்காக இந்த படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சென்னை வன காப்பாளர் மனிஷ் மீனாதெரிவித்தார்.
இத்தனை நடவடிக்கைகள் எடுத்தும், இறந்த கடல் ஆமைகளின் உடல்கள் கரை ஒதுங்குவது சென்னையில்குறையவில்லவை என்பதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.
Leave a comment
Upload