பாமகவை குடும்பக் கட்சியாக்க பார்க்கிறார்கள் அன்புமணி குற்றச்சாட்டு.
இத நீங்க சொல்றீங்களா ?
இன்று குற்றவாளிகள் தமிழ்நாட்டில் அச்சமின்றி செயல்படுகிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி.
அரசியல் கட்சியில் சேர்ந்திடறாங்கன்னு சொல்றீங்களா தலைவரே !!
மதுபான கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன் உயர் நீதிமன்றம் கேள்வி.
இது என்ன கேள்வி ? வருமானம் தான் !!
931 கோடி மதிப்புள்ள சொத்துக்களுடன் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு.
முதல்வர் பதவியில் சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல அதுக்குள்ள இவ்வளவு சேர்த்துட்டாரா ?
பிற மாநிலங்களை விஜய் பார்க்க வேண்டும் அமைச்சர் ரகுபதி.
அதாவது தமிழ்நாட்டை பார்க்காதீங்க சார் என்கிறார் அமைச்சர்.
மத்திய அரசு நிதி கொடுக்காததால் பொங்கல் பரிசுத்தொகை கொடுக்க இயலவில்லை அமைச்சர் தங்கம் தென்னரசு.
அதாவது இவங்க குடுக்குற உதவி தொகை எல்லாம் மத்திய அரசு தந்ததுதான் என்று இவரே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்.
உப்பு போட்டு பாப்கானுக்கு ஒரு வரி, உப்பில்லாத பாப்கானுக்கு வேறொரு வரியா பா.சிதம்பரம் கேள்வி ?
எல்லாம் நீங்க சொல்லி கொடுத்தது தான் !!
மோடியின் கபட நாடகத்தை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் செல்வப் பெருந்தகை.
ஆமா ராகுல் அளவுக்கு மோடிக்கு நடிக்க வராது !!
குற்றவாளியை எப்படி நடமாட விட்டீர்கள் ஆணையம் கேள்வி.
பெயில் தந்து தான் !!
அந்த சார் யார் ? என கேட்டால் அவர்களுக்கு கோபம் வருகிறது தமிழிசை சௌந்தர்ராஜன்.
மொத்தத்தில் இப்போது சார் என்பது ஒரு கெட்ட வார்த்தை மாதிரி ஆகிவிட்டது !!
நாட்டின் குறைந்த சொத்து மதிப்புடைய முதல்வர் பட்டியலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
ஆனால், அவருடைய உறவினர் சொத்து மதிப்பு வேற லெவல் !!
டெல்லி கோவிலில் பணியாற்றும் பூசாரிகளுக்கு மாதம் தோறும் 10 ஆயிரம் ரூபாய் கெஜ்ரிவால் அறிவிப்பு.
தேர்தல் வரப்போகுதாம் !!
அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது கே.பி.முனுசாமி.
அப்படியா சரி சரி சரி சரி !!
ஓட்டளிக்க ஆர்வம் காட்டாத வெளிநாடு வாழ் இந்தியர்கள்.
ஓட்டுக்கு பணமா டாலரா தரேன்னு சொல்லி பாருங்க !!
ஆகம விதிகளை மீறாதது திமுக அரசு சேகர்பாபு.
ஆமா அப்புறம் துர்கா அம்மா கோவிச்சுப்பாங்க !!
தேர்தல் அரசியலை தாண்டியது திமுக கம்யூனிஸ்ட் நட்பு ஸ்டாலின் உருக்கம்.
அப்ப அதிக தொகுதி கேட்க முடியாதா ?
மாணவிக்காக திருமா போராடுவாரா அமைச்சர் முருகன் கேள்வி.
ஒன்லி வெளிமாநிலம் மட்டுமே , தமிழ்நாடு நோ !!
Leave a comment
Upload