ஒரு காலத்தில் கிறிஸ்துமஸ் காலம் வந்துவிட்டாலே கிரீட்டிங் கார்டுகளுக்கு அமோக வரவேற்பு இருக்கும் .
எல்லா புத்தக கடை ஸ்டேஷனரி கடை சர்ச் ஸ்டால்கள் என்று கிறிஸ்துமஸ் நியூ இயர் வாழ்த்து அட்டைககளுக்கு ஏகப்பட்ட மவுசு இருந்தது .
தபால் துறைக்கு ஏகப்பட்ட பிசினெஸ் .
ஒரு விஷயம் வாழ்த்து அட்டைகளை விட தபால் செலவு அதிகமாக கொஞ்சம் கொஞ்சமாக கிரீட்டிங் கார்டு அனுப்புவது குறைய துவங்கியது .
ஆண்ட்ராய்டு மொபைல் போன் வருகை கிறிஸ்துமஸ் கிரீட்டிங் கார்டு மோகத்தை குறைத்தது .
ஒரு வாழ்த்து அட்டையை டவுன்லோட் செய்து அதில் அவரவர் வாழ்த்துக்களை டைப் செய்து நண்பர்களுக்கு அனுப்ப அது படு ஈசியாக போய்விட்டது .
நேரம் விரையம் பண செலவு மிச்சம் என்று கிரீட்டிங் கார்டுகள் அனுப்புவது குறைய ஆரம்பிக்க வந்து சேர்ந்தது கொரோனா ...முற்றிலுமாக ஸ்தம்பித்து போனது .
ஒரு காலத்தில் கிரீட்டிங் கார்டுகளின் விலை அதிகரிக்க தங்களுக்கு வந்த கடந்த வருட கார்டுகளை பல் கத்தரிக்கோல் கொண்டு ஓரங்களை வெட்டி மீண்டும் புதியதாக அனுப்பிவந்தனர் சில மூத்த குடியினர் .
கால போக்கில் இந்த ரீசைக்கிள் வழியும் மறைந்து போக கிறிஸ்துமஸ் கிரீட்டிங் கார்ட் என்பது மறந்து போய்விட்டது .
பல இல்லங்களில் பழைய கிரீட்டிங் கார்டுகள் கிறிஸ்துமஸ் ட்ரீ யின் அடியில் எட்டிப்பார்த்து கொண்டிருக்கும் !.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் ஜோடனைகளின் ஒரு பகுதி இந்த கிறிஸ்துமஸ் கிரீட்டிங் கார்டுகளை தொங்கவிடுவது , வரவேற்பு அறையில் ஷோவாக வைப்பது உண்மையில் அழகான மறக்க முடியாத ஒன்று .
நாமெல்லாம் மறந்த கிறிஸ்துமஸ் கிரீட்டிங் கார்டுகள் ஊட்டியில் உள்ள வைப்ஸ் கிபிட் கிரீட்டிங் ஷாப்பில் மீண்டும் உதயமாகியுள்ளது .
பல வருடங்களுக்கு பின் கிரீட்டிங் கார்டுகளை பார்க்கும்பொழுது மெய்சிலிர்க்க வைத்துவிட்டது .
வெகுநாளைக்கு பின் கிறிஸ்துமஸ் கிரீட்டிங் கார்டுகளை பார்த்து நம்முள் ஒரு பழைய கிறிஸ்துமஸ் மூட் வந்து விட்டது .
நாம் வைப்ஸ் கிரீட்டிங் ஷாப் உரிமையாளர் பிரவீனை சந்தித்து பேசினோம் ,
" கிறிஸ்துமஸ் கிரீட்டிங் கார்ட் இன்டர்நெட் வருகையால் குறைந்து போனது .பின்னர் கோவிட் வர முழுமையாக மறைந்து போய்விட்டது .
இனி கிரீட்டிங் கார்ட் என்பதே இருக்காது என்று இருந்தபோது இந்த வருடம் நம் ஷாப்புக்கு வந்தது புதிய கிறிஸ்துமஸ் கிரீட்டிங் கார்ட்ஸ் .
எல்லாமே அற்புதமாக இருக்கிறது. நாங்கள் 1994 ஆம் வருடம் முதல் கிறிஸ்துமஸ் கிரீட்டிங்ஸ் எங்க ஷாப்பில் இருந்தது பின்னர் ஒரு பெரிய இடைவெளி அதற்கு பின் இந்த வருடம் எக்ஸ்க்ளூசிவ் கிரீட்டிங் கார்ட் வந்துள்ளது அந்த கால பாரம்பரிய கிறிஸ்துமஸ் காலங்களை நினைவுகூருகிறது .
நியூ இயருக்கு நோ கிரீட்டிங் கார்ட்ஸ் .
புது வகை கார்டுகள் வந்துள்ளன ஒரு பெரிய கார்டுக்குள் அடுக்கடுக்காய் கார்டுகள் "என்று கூறி ஒரு டெமோ செய்து காட்டினார் .
மீண்டும் கிரீட்டிங் கார்டுகள் நம் இல்லங்களின் கதவுகளை தட்டுமா ?!.பார்க்கலாம் .
Leave a comment
Upload