தொடர்கள்
அனுபவம்
நடந்தது-ஜாசன்

20241120180606605.jpg

வழக்கப்படி ரயிலில் பயணிக்கும் போது என்னுடன் நீண்ட நாள் பயணம் செய்யும் சகப் பயணி ஒருவரை சந்திக்க இருந்தது,

பரஸ்பரம் நலம் விசாரித்த பிறகு அவரது மகள் திருமணம் எந்த அளவு இருக்கிறது என்று விசாரித்தேன். அப்போது அவர் சொன்ன தகவல் எல்லாமே ஆச்சரியமாக அதிசயமாக அதேசமயம் கவலைப்படுவதாக இருந்தது.

அவரது மகளை நன்கு படிக்க வைத்தார். ஐ டி கம்பெனியில் ஒரு லட்சத்துக்கு அதிகமாக சம்பாதிக்கிறார் தற்சமயம் அவரது மகளுக்கு 28 வயது கடந்து விட்டது. எனக்கு திருமணம் வேண்டாம் திருமண வாழ்க்கையில் நாட்டம் இல்லை என்கிறார் என்றார்.

நான் சொன்னேன் உன் மகள் வேறு ஏதாவது காதல் என்று ஏதாவது இருக்கப் போகிறது என்று நான் கேட்டபோது அதையும் நான் கேட்டு விட்டேன் அதெல்லாம் இல்லை நான் காதலித்தால் உங்களிடம் சொல்வேன் எனக்கு பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்வேன்.

இந்த விஷயத்தில் உங்கள் அனுமதி என்பது எனக்கு இரண்டாம் பட்சம் தான். எனக்கு திருமண வாழ்க்கை பிடிக்கவில்லை என்னை வற்புறுத்தாதீர்கள். உங்களுக்கு நான் இருப்பது சங்கடமாக இருந்தால் தனியே போய் விடுகிறேன் என்கிறார் என்றார்.

என் உறவினர்கள் வீட்டு திருமணத்துக்கு போகும்போதெல்லாம் உங்கள் மகளுக்கு எப்போது திருமணம் எப்போது எங்களுக்கு கல்யாண சாப்பாடு போட போகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

அப்போதெல்லாம் என் மனம் வலிக்கிறது. இது என்னை பெற்ற மகளுக்கு தெரியவில்லை என்று கிட்டத்தட்ட அழவே தொடங்கி விட்டார் அவர்.

நான் அவர் ஆறுதல் சொல்வதாக நினைத்து திருமணத் தடை நீக்கும் சில கோயில்கள் பெயரை சொல்லி அங்கு போய் வேண்டிக் கொள் என்று சொன்னபோது அங்கெல்லாமும் போய்விட்டேன்.

ஜோசியரிடம் கேட்டேன்...

என் பெண் பிடிவாதமாக இருக்கிறாள் என்று சொன்னார். கூடவே அவர் சொன்ன விஷயம் ஒருவேளை எங்கள் குடும்ப வாழ்க்கையைப் பார்த்து திருமணம் அவளுக்கு அலுத்து விட்டதோ என்று கூட யோசித்துப் பார்த்தேன் .கடவுள் அனுக்கிரகத்தால் என் மனைவிக்கும் எனக்கும் இதுவரை எந்த சண்டையும் வந்ததில்லை.

அவளும் என்னை புரிந்து கொள்வாள் நானும் அவள் மனம் கோணாமல் இதுவரை நடந்து கொண்டிருக்கிறேன். எங்கள் கவலை எல்லாம் இப்போது என் மகள் பற்றி தான் என்று சொல்லி வருத்தப்பட்டார் அவர்

இந்த விஷயம் பற்றி என்னுடைய நீண்ட நாள் நண்பர் ஒருவரிடம் பேசிய போது சார் திருமணம் வேண்டாம் என்ற கலாச்சாரம் இப்போது மெல்ல வரத் தொடங்கி இருக்கிறது.

பெண்களைப் பொறுத்தவரை பணம் அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறது. கை நிறைய சம்பாதிக்கும் பல பெண்கள் திருமணம் வேண்டாம் என்று இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

இது எங்கே கொண்டு போய் விடும் என்று தெரியவில்லை என்று சொன்னார். பணம் படுத்தும் தான் போல் தெரிகிறது.