“கிடைச்ச வேலையையும், இந்த அரசாங்கம் பிடிங்கிடுச்சே? கிட்ட தட்ட ஆறு வருஷம் ஆகப்போகுது ஒரு முடிவும் தெரியலையே “என்று தன் வருத்ததைச் சொல்லிகொண்டே, தன் கணவனுக்குக் கட்டி வைத்த டிபன் பாக்ஸை கொடுத்த வாறே புலம்பி கொண்டிருந்தாள் சிவகாமி.
“அம்மா பாரதி ரெடியா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் கார்த்திக்.
“வா தம்பி .குளிச்சிட்டு இருக்கா அஞ்சு நிமிடத்தில் ரெடி ஆயிடுவா”.
“இந்தா காபி சாப்பிடு”.
வாங்க கார்த்திக் அண்ணா!” பாத்ரூமிலிருந்து வெளியே வந்த பாரதி வரவேற்றாள்.
“என்ன கார்த்திக் பாரதி கேஸ் ஆறு வருஷமா இழுத்துகிட்டு இருக்கு. எப்ப முடியும்? எப்ப அவளுக்கு நல்லது செய்யறது?.நல்ல காலம் பொறக்குமா?
“இரண்டு பேருககும் ஒரே நாளில் டைப்பிஸ்ட் வேலைக்கு ஆர்டர் வந்துச்சு . நீ சேர்ந்துட்ட”.
“ஆனா அவ அந்த வேலைக்குத் தகுதி இல்லைன்னு அரசு நீக்கம் செஞ்சப்ப, நீ தான் இதைச் சும்மா விடக்கூடாது நிச்சயம் நாமே ஜெயிப்போம்ன்னு .சொல்லி ஆறு வருஷமா ரொம்பச் சப்போர்ட்டா இருந்து எல்லாத்தையும்செஞ்சுக்கிட்டு இருக்கே”
.“உன் உழைப்பு வீணாகப் போகக் கூடாது.”
சிவஞானம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“சரி நான் கிளம்பறேன் பாரதி. இரண்டு பேரும் ஜாக்கிரதையா போயிட்டு வாங்க.”
சிவஞானம் மில்லுக்கு வேலைக்குக் கிளம்பும் முன் சொல்லிவிட்டுப் போனார்.
“பாருங்கமமா! இன்னிக்கு உயர்நீதி மன்றத்தில் நமக்குச் சாதகமான தீர்ப்பு தான் வரப்போகுது. என் உள் மனசு சொல்லுது.”
“பாரதி ரெடியா கிளம்பலாமா? .எல்லா டாகுமெண்ட்டையும் எடுத்துகிட்டியா?”.
“சரியா பத்து மணிக்கு அங்கே இருக்கணும். எந்த நேரத்திலும் நம்ம கேஸ் எடுப்பாங்க”
“இங்கிருந்து போகவே ஒரு மணி நேரம் ஆகும்”.
சிவகாமி பூஜை ரூம் போய்ச் சாமி கும்பிட்டு பாரதிக்கு விபூதி இட்டு விட்டாள் .
“அம்மா போயிட்டு வரேன்”..
கார்த்திக் பாரதி இருவரும் ஸ்கூட்டி மூலம் உயர்நீதி மன்றம் கிளம்பினார்கள்.
சிவகாமி தன் பூஜை அறைக்குப் போனாள்.எல்லா தெய்வங்களையும் மீண்டும் ஒரு முறை வேண்டினாள்.
வறுமையான குடும்பத்தில் பிறந்த ஒரே பெண். டிகிரி முடித்து எம்.எல்.ஐ.எஸ் (மாஸ்டர் ஆப் லப்ரரி அண்ட் இன்பர்மேஷன் ஸயன்ஸ்) என்கிற முதுநிலை பட்டத்தையும் வாங்கிய போது, அடுத்ததாகக் கல்யாணம் தான் என்கிற பேச்சை எடுத்த போது. மறுத்தாள்.பாரதி.
“இத பாரும்மா! நான் கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிறேன்”.
“ஆனா இரண்டு வருடம் வேலை பாத்துட்டு வருகிற மாப்பிள்ளை என்னைத் தொடர்ந்து வேலை பார்க்க அனுமதி கொடுப்பதோடு மட்டுமல்லாமல் ஓங்களையும் என்னோடு வைச்சுக்கச் சம்மதிக்கறவனைத் தான் கட்டிப்பேன்”.
“ சர்வீஸ் கமிஷன் பரிட்சை எழுதி இருக்கோம். டைப் பிங்க் வேறே கூடுதல் தகுதி இருக்கு.பாஸ் ன்னு ரிசல்ட் வந்துருக்கு . இன்னும் ஒரு மாதத்தில் வேலை கிடைச் சுடும்
அவள் எதிர்பார்த்த மாதிரியே மறு மாதமே வேலைக்கான உத்திரவு பாரதிக்கு மட்டுமல்லாமல் கார்த்திக்கும் வந்த போது மகிழ்ச்சியில் திளைத்த்து பாரதி குடும்பம்.
ஆனால் மறு நாளே அவள் அப்பாண்ட்மெனட் ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டது.என்கிற தகவல் வந்தது.
ஆனால் பாரதிக்கு வேலை பறிப் போனதும் அவளை விடக் கார்த்திக் தான் மிகவும் வருத்தம் அடைந்தான்.
கார்த்திக் குடும்பமும் பாரதி குடும்பமும் பக்கத்து பக்கத்து தெரு. இருவருடைய அப்பாக்களும் பஞ்சு மில்லில் வேலை. நீண்ட கால நட்பு இரண்டு குடும்பத்துக்கும் உண்டு.
அம்மா ஒரு முறை தனக்கு முன்பு ஒரு பையன் பிறந்து அஞ்சு வயசுக்கு பிறகு நிமோனியா ஜூரத்தில் இறந்து விட்டதாகச் சொன்னது முதல் கார்த்திக்கை அண்ணா என்று கூப்பிட்டு வந்தாள்.
ஏன் தன்னை வேலையை விட்டு நீக்கம் செய்தீர்கள்? என்ற கேள்விக்கு அவ்வளவு எளிதாகச் சர்வீஸ் கமிஷன் மூலம் பதில் வரவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பிய பிறகு தான் பதில் கிடைத்தது.
ஒங்கள மாதிரி ஒரே மார்க் வாங்கி உள்ள கேண்டிடேட்களை
பரிசீலனை செய்யும் போது மற்றவர்கள் 10+2+3+2 முறையில் உள்ளார்கள்.
ஒங்க படிப்பு மற்றவர்கள் மாதிரி 10+2+3+2 முறையில் இல்லாமல்
10+2+3+1என்கிற முறையில் இருந்ததினால் உங்கள் வேலை நிராகரிக்கப் படுகிறது. என்கிற பதில் வந்தது.
“இதென்ன புதுசா இருக்கு! ஒரு டைபிஸ்டு வேலைக்குப் பிளஸ் 2போதும். இருந்தாலும் அந்த அப்ளிகேஷனில் டிகிரியுடன் அத்துடன் நான் ஒரு வருட முதுநிலை பட்ட படிப்பை குறிப்பிட்டு இருக்கும் போது. எப்படிப் போட்ட ஆர்டரை கேன்சல் செய்யமுடியும்? என்றுவருத்தபட்டாள்.
“நீ கவலைப்படாதே பாரதி”
எப்படியும் திரும்ப இந்த அரசு வேலை ஒனக்குத் திரும்பக் கிடைக்கும் என ஆறுதல் கூறிஉயர்நீதி மன்றத்தில் வழக்குப் பதிவு செய்து ,நிறைய வாய்தாக்கள் வாங்கி, இதோ இன்றைக்குத் தீர்ப்பு சொல்ல போகிற நாள்.
இந்த ஆறு வருடமும் பாரதிக்காகக் கார்த்திக் கோர்ட் கேஸ் என்று அலைந்து உதவிகரமாக இருந்தான் .
பாரதிக்கு அந்த வேலை போனது வருத்தம் என்றாலும் மனதில் உறுதி வேண்டும் என்கிற பாரதி பாடல்படி இந்த ஆறு வருட இடைவெளியில், காலை மாலை பள்ளிக் குழந்தைகளுக்கு ட்யூஷன் மதியம் தையல் வேலை கூடவே இன்னொரு முதுநிலை பட்டபடிப்பு என்று சுறுசுறுப்பாகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாள்.
தன் அப்பா வருமானம் குடும்பச் செலவுக்குச் சரியாக இருக்கும் போது ,மேல சொன்ன வேலைகள் மூலம் சம்பாதித்த பணம் இந்த வழக்கு விசாரணைக்கு உதவியாக இருந்தது.
கார்த்திக் சொன்ன படியே கோர்ட் அடைந்ததும் ஆரம்பத்திலேயே பாரதி வழக்கு விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பு வக்கீல் விளக்கங்கள் மற்றும் டிபென்ஸ் வக்கீல் வாதங்களைக் கேட்டுக் கொண்ட பின் தன்னுடைய தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார்.நீதிபதி.
இந்தச் சர்வீஸ் கமிஷன் தேர்வில் பாஸ் செய்தவர் இந்தப் பாரதி. இவர் பெற்று இருந்த மதிப்பெண்கள் போல் மற்றவர்களும் பெற்று இருந்ததால், அவர்களுள் யார் மெரிட் மற்றும்கூடுதல் குவாலிபிகேஷன் என்று கணக்கிடும் போது 10+2+3+2 என்கிற அடிப்படையில் உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள்.
ஆனால் இவர் 10+2+3+1 அடிப்படையில் கல்வி தகுதி பெற்று உள்ளார்.
அதாவது இரண்டு வருட முதுநிலை படிப்புக்குப் பதில் ஒரு வருட படிப்பு மட்டுமே உள்ளது. எனவே இவர் பணி நிராகரிக்கப் படுகிறது. என்று அரசு தரப்பு வாதம்.கூறுகிறது
ஒரு டைபிஸ்ட் வேலைக்கு 10+2மட்டுமே போதும்.இருந்தாலும் பாரதி அவர்கள் கூடுதலாக டிகிரி மற்றும் ஒரு வருட மாஸ்டர் ஆப் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சைன்ஸ் என்கிறமுதுநிலை படிப்பு முடித்துள்ளார். இவரைப் பணி நீக்கம் செய்தது சரியில்லை. என்பது டிபன்ஸ் வக்கீல் வாதம்.
இரண்டு வாதங்களையும் நன்கு ஆராய்ந்த பிறகு இந்த மன்றம் ஒரு முடிவு எடுத்துள்ளது.
அடிப்படை பட்டப்படிப்பைப் பெறாமல் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர் பட்டமே செல்லாது என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் மீண்டும் வலியுறுத்தியிகிறது.
ஆனால் பாரதி அவர்களின் 10+2+3+1 என்கிற முறையில் படிப்பு உள்ளது
படிப்பு என்பது எண்ணிக்கை அடிப்படையில் அல்ல. நிறையப் பேர்கள் ஒரே மார்க் பெற்று இருந்தாலும், இரண்டு வருட முது நிலை படிப்பு மட்டுமே செலக்சன்க்கு எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.
Pedantic பெடான்டிக் முறையில் சர்வீஸ் கமிஷன் செயல் பட்டு உள்ளது அதாவது சிறிய பிழைகளைத் திருத்துவதன் மூலமோ, சிறிய விவரங்களைப் பற்றி அதிக அக்கறை காட்டுவதன் மூலமோ அல்லது சில குறுகிய அல்லது சலிப்பான விஷயங்களில் அவர்களின் சொந்த நிபுணத்துவத்தை வலியுறுத்துவதன் மூலமோ மற்றவர்களை எரிச்சலூட்டும் வகையில் ஒருவரை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு அவமானகரமான வார்த்தையாகும்.
அதைத் தான் இந்தக் கமிஷன் செய்து இருக்கிறது. ஆறு வருடமாக மனுதாரருக்கு மன உளைச்சலை கொடுத்துஇருக்கிறது
எண்கள் என்பது விளக்க நோக்கங்கள் மற்றும் சட்டத்தையே மீற முடியாது.
அவர் குறிப்பிட்டு உள்ள அந்தக் கோர்ஸ் ஒரு வருட படிப்பு உள்ள கோர்ஸ்.எனவே அவர் இரண்டு வருட ம் கோர்ஸ் பூர்த்திச் செய்யபடவில்லை அதனால் அவர் வேலைக்கு அமர்த்தபடவில்லை என்கிற வாதத்தை இந்த நீதி மன்றம் கண்டிக்கிறது.
ஒரு டைபிஸ்ட் வேலைக்குப் பிளஸ் 2 போதும்.
எனவே இந்தச் சர்வீஸ் கமிஷன் வரும் ஜனவரி 2025 க்குள்அவரை மீண்டும் வேலைக்கு அமர்த்தி எல்லாச் சலுகைகளையும் கொடுக்க உத்திரவு இடப்படுகிறது.
நீதி என்றைக்கும் ஜெயிக்கும் என்ற சந்தோச துள்ளலில் கார்த்திக் பாரதி வெளியே வந்தார்கள்..
Leave a comment
Upload