எதேச்சியாக சென்னை தொலைக்காட்சியில் செய்திப் பிரிவில் தலைமை ஆசிரியராக இருந்தவரை சந்திக்க நேர்ந்தது. அந்த காலத்தில் அவர் சுறுசுறுப்பான ஒரு செய்தி ஆசிரியர். அப்போது அவர் இளைஞர் சென்னை தொலைக்காட்சியின் செய்தி அப்போது பிரபலம். செய்தியும் பரவலாக பேசும் பொருளாக இருந்தது.
அரசியல் சார்பில்லாமல் அந்த காலத்தில் தொலைக்காட்சியும் வானொலியும் நடுநிலையாகத்தான்இருந்தது. குறிப்பாக செய்தி மிகைப்படுத்தப்படாமல் ஒளி, ஒலி பரப்பப்பட்டது .தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் வித்தியாசமாக நிகழ்ச்சியை சுறுசுறுப்பாக்கி வெற்றி பெற்றவர் வாய்ப்பு இழந்தவர் இருவரிடம் கருத்து கேட்டு தேர்தல் முடிவு செய்திகளை நமது வீட்டு வரவேற்பு அறையில் சுட சுட வெளியிட்டதில் தூர்தர்ஷன் பங்கு பெறும் பங்கு.
இப்போது தனியார் தொலைக்காட்சிகள் அதைக் காப்பியடித்து தான் தேர்தல் முடிவு தேர்தல் அலப்பறைகளை செய்கிறது. இது தனியார் தொலைக்காட்சிகளில் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் முன்னோடி தூர்தர்ஷன் என்பதுதான் உண்மை.
அவரிடம் பேச்சு கொடுத்து அந்த கால மலரும் நினைவுகளை நான் அவரிடம் பகிர்ந்து கொண்டேன். மலரும் நினைவுகள் என்ற பெயரில் கூட சினிமாவில் இருந்து ஒதுங்கிய பிரபலங்களை பேட்டி கண்டு எல்லோரும் ஆர்வத்துடன் பார்க்க வைத்தது கூட தூர்தர்ஷன் தான். அந்த செய்தி ஆசிரியர் அந்த காலத்தில் நாம் செய்தி என்று முக்கியத்துவம் தந்தோம். கூடவே எது மக்களுக்கு தேவை எது தேவையில்லை என்பதை தீர்மானமாக முடிவு செய்து அதை மட்டும் தந்தோம். ஒரு முறை இதே போல் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது தூர்தர்ஷனின் டிரைவர்கள் எல்லோரும் வெள்ள பாதிப்பில் சிக்கிக் கொண்டு அலுவலகத்துக்கே வர முடியாத ஒரு நிலைமை.
அப்போது நான் பல்லவன்போக்குவரத்து பி ஆர் ஓ வை தொடர்பு கொண்டு நிலைமையை சொல்லி வெள்ளச்செய்திகளை படம் எடுக்க எங்களுக்கு ஒரு பல்லவன் பஸ் தேவை என்று சொன்ன போதுஅவர் இது பற்றி தனது நிர்வாக இயக்குனரிடம் பேசி பல்லவன் பஸ் தூர்தர்ஷன் வந்தது.ஓட்டுனரும் உற்சாகமாக ஒத்துழைத்தார். வெள்ளச் செய்திகளை மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக உடனுக்குடன் ஒளிபரப்பினோம். கூடவே பல்லவனுக்குநன்றி என்றும் செய்தியில் குறிப்பிட்டோம். என்றவரிடம் இப்போதைய தொலைக்காட்சி பத்திரிகை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டேன். எல்லா தொலைக்காட்சியும் நடுநிலை என்கிறது.
ஆனால் செய்திகளை பார்த்தால் அப்படி தெரியவில்லை செய்திகளில்பாரபட்சம் பளிச் என்று தெரிகிறது. தனியார் தொலைக்காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு கட்சி சார்ந்தது அல்லது தொலைக்காட்சியின் உரிமையாளர் ஏதோ ஒரு அரசியல் கட்சியின் அனுதாபியாக இருப்பார். அப்படி இருக்கும்போது அங்கு நடுநிலை எதிர் பார்க்க முடியாது. அதே சமயம் நிருபர்களும் செய்திகளை முந்தித் தருகிறோம் என்ற பெயரில் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகிறார்களே தவிர பொறுப்புணர்வுடன் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது என் பார்வை இதை வேறு ஒருவர் இல்லை என்று கூட வாதிடலாம்.
அதற்கு நான் பொறுப்பல்ல. ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன் சென்ற ஜூன் மாதம் ஒரு நல்ல நாளில் எல்லா தமிழ் ஆங்கில நாளிதழ்களிலும் அதானி சென்னையில் முதல்வரை சந்தித்தார் அவர் குடும்ப உறுப்பினர்களும் அங்கு இருந்தார்கள் என்ற செய்தியை வெளியிட்டது. ஆனால் அப்போது அந்த செய்தியை முதல்வர் மறுக்கவில்லை. திடீரென்று அமெரிக்காவில் ஒரு வழக்கில் அதானி விவகாரம் சூடு பிடித்ததும் பாட்டாளி மக்கள் கட்சி முதல்வரை அதானி ஏன் சந்தித்தார் என்று விளக்க வேண்டும் என்று கேட்டது. அதற்கும் முதல்வர் தரப்பு உடனே பதில் சொல்லவில்லை. இரண்டு மூன்று தினங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி ஒரு அறிக்கை வெளியிடுகிறார்.
அதன் பிறகு சட்டசபையில் நான் பார்க்கவில்லை என்று முதல்வர் சொல்கிறார். அதானி என்பவர் ஒரு பயங்கரவாதியோஅல்லது சர்வதேச குற்றவாளி அல்ல. ஒரு பிரபல தொழிலதிபர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அவரும் ஒரு காரணம். அதானி வீட்டு திருமணத்துக்கு உதயநிதி ஸ்டாலின்கூட போய் இருக்கிறார். எனக்கென்னவோ இந்த சந்திப்பு உண்மையில் நடந்திருக்கிறது என்று தான் நினைக்கிறேன். ஆமாம் சந்தித்தேன் என்ன தவறு என்று கேட்டால் அத்துடன் இந்த பிரச்சனை முடிந்தது சந்திக்க வில்லை என்று சொல்வதால்தான் அவர்களை கிண்டலடித்து மீம்ஸ் வெளியிடுகிறார்கள்.
அன்புமணி ராமதாஸ் சித்த ரஞ்சன் சாலையில் ஒரு டீ கடையில் டீ குடிக்க அதானி வந்து டீ குடித்துவிட்டு போய்விட்டார் என்று கிண்டல் அடிக்கிறார் என்றார்.
கூடவே நிருபர்கள் தங்கள் சுய கௌரவத்தை என்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது இழக்கக்கூடாது. உதயநிதி ஸ்டாலினை பேட்டிக்காக மைக்கை நீட்டும் போது அவர் புறக்கணித்துவிட்டு கார் ஏறுகிறார். பேட்டி தருவது அவர் விருப்பத்தை பொறுத்தது அதன்பிறகும் அவரது காரை விரட்டிக் கொண்டு நிருபர்கள் போனது அவர்களின் சுய கௌரவத்துக்கு இழுக்காக நான் பார்க்கிறேன் .இதேபோல் அண்ணாமலை பேட்டியின் போது ஒரு தொலைக்காட்சி அந்த பேட்டியை நேரலையில் ஒளிபரப்பி கொண்டிருந்தது.
அப்போது இந்த சம்பந்தப்பட்ட நிருபருக்கு ஏதோ எடக்கு மடக்காக கிண்டல் அடிக்கிறார் போல் கேள்வி கேட்க சொல்லி whatsapp-ல் அவருக்கு அவரது செய்தியை ஆசிரியர் தகவல் அனுப்புகிறார் இதை அண்ணாமலையும் கவனித்தார். உடனே உங்கள் ஆசிரியர் அங்கே இருந்து ஏதோ சொல்வதற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று அவரை அங்கேயே எக்ஸ்போஸ் செய்கிறார்.
இது அந்த நிருபர் அவமானமாக உணர வேண்டும். ஆனால் பிழைப்பு ஊதியம் வாழ்க்கை இதெல்லாம் அவருக்கு நினைவுக்கு வந்து ஒன்றுமே நடக்காதது போல் அவர் கடந்து போகிறார். இது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன் பத்திரிக்கை தர்மம் என்ற வார்த்தை இப்போது அருங்காட்சியகத்துக்கு போய்விட்டது என்று சொன்னார்.
அந்த செய்தி ஆசிரியர் அவர் அனுபவம் பேசியது அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்.
Leave a comment
Upload