தொடர்கள்
அழகு
சோலார் ஆட்டோ - மாலா ஶ்ரீ

20241113225432970.jpeg

ஈரோடு மாவட்டம் யுகஆதித்தன்.

இவர் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்.

2014ம் ஆண்டு பெண்ணாசையால், காதலால் ஏமாந்து போய் பழி தீர்க்க கூலிப்படையை வைத்து காதலியை கொல்ல முயற்சித்திருக்கிறார்.

ஆனால் ஆள் மாறிப் போய் வேறொரு உறவினர் கொல்லப்பட இந்த வழக்கில் 2016ம் ஆண்டு முதல் ஆயுள் கைதி.

சிறையில் அவர் தனது வாழ்க்கையை பற்றி பயப்படாமல், அங்கு தனது திறமையின் மூலமாக புதுப்புது கண்டுபிடிப்புகளை உருவாக்கி, வெற்றி பெற்றுள்ளார். இதன் பரிசாக, கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள தொழில்கூடத்தில் யுகஆதித்தனுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அங்கு குறைந்த செலவில், சூரிய ஒளியில் இயங்கி, அதிக மைலேஜ் வழங்கும் வகையில் ஒரு சோலார் ஆட்டோவை கண்டுபிடித்து யுகஆதித்தன் சாதனை படைத்துள்ளார்.

யுகஆதித்தன் கண்டுபிடித்துள்ள சோலார் ஆட்டோவில் தாராளமாக 7 பேர் அமர்ந்து செல்லலாம். இதன் மேற்பகுதியில் 6 அடி நீளம், 4 அடி அகலத்தில் சோலார் பேனல் (சூரிய ஒளி தகடு) பொருத்தப்பட்டு உள்ளது. இதன்மூலம் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை சேமிக்க, ஆட்டோவிலேயே 1500 வாட்ஸ் திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆட்டோவை சூரிய ஒளியில் சுமார் ஒரு மணி நேரம் நிற்கவைத்து சார்ஜ் செய்தாலே, 70 முதல் 80 கிமீ தூரம் வரை தடையின்றி பயணிக்கலாம்.

இந்த ஆட்டோ அதிகபட்சம் 40 கிமீ வேகம் வரை செல்ல முடியும். இந்த ஆட்டோ தயாரிப்புக்கான செலவு மிகவும் குறைவுதான். சாதாரண ஆட்டோ வாங்க ₹2 லட்சத்துக்கும் அதிகமான பணம் தேவை என்றிருக்கையில், இந்த சோலார் ஆட்டோ ₹1.25 லட்சத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக யுகஆதித்தனுக்கு சிறைத்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.