பங்களாதேஷ் என்று ஒரு நாடு உருவாக இந்திராகாந்தி தானே காரணம்.
பாகிஸ்தான் இருந்து வங்க மக்களை மீட்டு அவர்களுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவர் இந்திராகாந்தி.
வங்கதேசம் முஜிப் ரஹ்மான் கனவு அந்தக் கனவை நனவாக்கியவர் இந்திராகாந்தி.
பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசத்தை தனியாக பிரித்து பங்களாதேஷ் என்ற என்ற நாடு தனியாகப் பிரிந்த பிறகு 1972-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் தேதி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஓ.வி.அழகேசன் பேசியது தான் இது.
இயற்கையாகவே வடிவமைக்கப்பட்ட சிட்டக்காங் துறைமுகம். பணப் பயிர்களான தேயிலை, சணல், வெற்றிலை, கரும்பு விளையும் பகுதி வங்கதேசம். பாகிஸ்தானின் செல்வச் செழுமைக்கு காரணமாக இருந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசு வங்கதேச மக்களை வஞ்சித்தது. அதன் விளைவு தான் பங்களாதேஷ்.
பங்களாதேஷ் பிரிந்த பிறகு பாகிஸ்தானின் செல்வ வளம் சொல்லிக் கொள்ளும்படி இல்லாமல் இருந்தது. இப்போதும் அதே நிலைமை தான்.
வங்கதேசத்தின் தந்தை முஜிபூர் ரஹ்மான் சிலை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் பிரதமரே தலைமறைவாகி இந்தியாவுக்குள் தப்பித்து வந்து அடைக்கலம் ஆகி இருக்கிறார். இன்றைய பங்களாதேஷின் நிலைமை இது.
1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்து வங்கதேசம் உருவானது. அந்தப் போரில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
இந்த இட ஒதுக்கீடு அதிகம் என்று சொல்லி வங்கதேச மாணவர்கள் கடந்த ஜூன் மாதம் போராட்டம் தொடங்கினார்கள். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 200க்கும் அதிகமானோர் பலியானார்கள்.
இது தொடர்பான வழக்கை ஜூலை 21-ஆம் தேதி வங்கதேசம் உச்சநீதிமன்றம் விசாரித்தது.
சுதந்திர போராட்ட வீரர்களுக்கான இட ஒதுக்கீடை ஐந்து சதவீதமாக குறைத்தது, மாணவர்கள் அமைதியானார்கள். மாணவர்கள் போராட்டத்தை தூண்டியதாக ஆறு பேரை கைது செய்த போலீஸ் ரகசிய இடத்தில் கடுமையாக அவர்களை விசாரித்தது.
விசாரணையின் போது அவர்கள் கடுமையாக தாக்கபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.
பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.
தலைநகர் டாக்கா உள்பட வங்கதேசத்தில் பல காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டன.
சிராஜ் கஞ்ச் காவல் நிலையத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த 14 காவலர்களை படுகொலை செய்தார்கள். இரண்டு முன்னணி நாளிதழ் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. வன்முறையின் உச்சம் பங்களாதேஷில் தலைவிரித்து ஆடியது.
போராட்டக்காரர்களின் அடுத்த குறி பிரதமர் ஷேக் ஹசீனா என்பதாகத்தான் இருந்தது. ராணுவம் அவரை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அனுப்பியது.
தற்சமயம் பங்களாதேஷில் கிட்டத்தட்ட ராணுவ ஆட்சிதான்.
ராணுவம் தனது கட்டுப்பாட்டில் ஆட்சியை வைத்துக்கொண்டு பொம்மை நிர்வாகிகளை அறிவித்திருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் தான் வங்கதேசத்தில் தேர்தல் நடந்தது ஷேக் ஹசினாவின் அவாமிலிக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்தது.
முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சியானது தேர்தலை புறக்கணித்தன. மொத்தம் 16 கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. ஹசீனா வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.
ஒரு மாதத்துக்கு முன் பிரதமர் ஆனவர் தொடர்ந்து 15 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர். தனது பதவியை விட்டு விலகி இன்னொரு நாட்டில் தஞ்சம் அடைவேண்டிய சூழல் எதனால் ஏற்பட்டது.
தனது ஆட்சிக்கு எதிராக கருத்து சொன்னவர்களை போராட்டம் நடத்தியவர்களை அந்நிய நாட்டின் கைக்கூலிகள் என்று கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு சொல்லை ஜூலை 14- ஆம் தேதி அன்று தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தும்போது ஷேக் ஹசினா பயன்படுத்தினார்.
தேசத்துரோகி என்பதை ஒரு கெட்ட வார்த்தையாக சொல்லி ஷேக் ஹசினா பேசியது தான் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம். சொந்த நாட்டு மக்களை தேச துரோகி என்று சொல்வதா என்று மாணவர்களும், இளைஞர்களும் கொந்தளித்தார்கள்.
உச்ச நீதிமன்றம் 30 விழுக்காடு இட ஒதுக்கீடை ஐந்து சதவீதம் என்று குறைத்ததை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டார்கள்.
ஷேக் ஹசினாவின் இந்த ஒரு வார்த்தை தான் இந்த அளவுக்கு நிலைமை மோசமாக காரணம்.
பிரதமர் கண்டவுடன் சுட உத்தரவு போட போராட்டம் இன்னும் தீவிரமாகி ஷேக் அசினாவின் மாளிகை பாராளுமன்றம் என்று எல்லாவற்றையும் கைப்பற்றி சூறையாடினார்கள் போராட்டக்காரர்கள்.
பங்களாதேஷ் என்று தனி நாடு வாங்கித்தந்த முஜிபுர் ரஹ்மானும் தனது சொந்த நாட்டு மக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
இந்தியாவை சுற்றியுள்ள பங்களாதேஷ், இலங்கை, நேபால், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அரசியல் சூழ்நிலை அதன் செயல்பாடு எல்லாமே இந்தியாவுக்கு தற்சமயம் அச்சுறுத்தலாக தான் இருக்கிறது என்பதையும் இந்தியா கவனித்து வருகிறது.
ஷேக் ஹசினாவை நீண்ட காலம் இந்தியாவில் வைத்துக் கொள்ள இந்திய அரசு விரும்பவில்லை.
அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பங்களாதேஷ் மக்களையும், மேற்கு வங்க எல்லையில் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இந்தப் போராட்டத்தில் வங்கதேசத்தில் போராட்டக்காரர்களால் இந்து கோயில்கள் இந்துக்களின் உடமைகள் சூறையாடப்பட்டுள்ளது.
இந்துக்களும் கொல்லப்படுவது தொடர் நடவடிக்கையாக இருக்கிறது. பாகிஸ்தானில் இந்துக்களுக்கு நடந்தது தான் தற்சமயம் பங்களாதேஷிலும் நடக்கிறது.
கோவிட் சமயத்தில் கூட குறைவில்லாமல் அன்ன தானம் செய்த இஸ்கான் கோவிலுக்குள் சென்று தாக்கி இரண்டு சாமியார்களைக் கொன்று கோவிலையும் இடித்திருக்கிறது வன்முறை கும்பல்.
இது இப்படி இருக்க,
ஹசீனாவுக்கு எந்த முஸ்லிம் நாடும் அடைக்கலம் தர முன் வரவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
தொடர்ந்து வங்க தேசத்தை கவலையோடு கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்....
Leave a comment
Upload