தொடர்கள்
சினிமா
சதாபிஷேக நாயகன் டெல்லி கணேஷ் 1 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

20240709235651617.jpeg

டெல்லி கணேஷுக்கு 80. எத்தனை முறை சொல்லி பார்த்தாலும் நம்ப முடியவில்லை. நாற்பது வயதை தொட்டவர் போலவே உற்சாகத்துடன் இருக்கிறார். இப்போது தான் சிந்து பைரவியில் பார்த்தது போல் இருக்கிறது. சமீபத்தில் தான் நாயகன் வந்தது போல் இருக்கிறது. அவ்வை ஷண்முகி கூட நேரத்து பார்த்தது போல் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் டெல்லி கணேஷ்.

சமீபத்தில் தான் 80 வயதை கடந்து மிக எளிய முறையில் தமிழகத்தின் அத்தனை முக்கியஸ்தர்களும் கலந்து கொண்ட சதாபிஷேக விழா நடைபெற்றது. அவரை விகடகவி சார்பாக சந்தித்து ஆசிர்வாதம் பெற்றோம். நாம் சென்ற முதல் நாள் தான் பாஜக தலைவர் அண்ணாமலை அவர் இல்லம் வந்து சென்றதால் இன்னும் அந்த உற்சாகத்திலேயே இருந்தார். அண்ணாமலை இவர் சந்தித்ததிலிருந்து வந்து சென்றது வரை மிகுந்த நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

Video Courtesy : Thrid Eye

இவ்வளவு பெரியவர் இந்த காலத்து சினிமா குறித்தும் வருங்கால திரை துறையினருக்கும் என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டோம். பொறுப்பான அதே சமயம் மன வேதனையுடன் அவர் பகிர்ந்துகொண்ட காணொளி இதோ