ஊட்டி என்றாலே குளு குளு காலநிலை .அழகிய பூங்காக்கள் மலைகள் என்றும் .
நீலகிரி டீ , பழங்கள் மற்றும் யூக்கலிப்டஸ் தைலம் பேர் போனது .
இவை எல்லாவற்றையும் விட
நீலகிரிக்கு வருபர்கள் தவறாமல் வாங்கி செல்வது ஊட்டி வர்க்கி பிஸ்கட் .
உலகத்திலே எங்குமே கிடைக்காத ஒரு தின் பண்டம் இந்த ஊட்டி வர்க்கி தான் .
ஊட்டி வர்க்கி இப்பொழுது உலக புகழ் பெற இருக்கிறது .
கடந்த மாதம் ஊட்டி வர்க்கிக்கு புவி சார் குறியீடு கிடைத்துள்ளது என்பது நீலகிரிக்கு கிடைத்த ஒரு பெரிய அங்கீகாரம் என்றால் மிகையாகாது .
GI induction Geographical induction என்பது புவி சார் குறியீடு அதாவது ஒரு தயாரிப்பு பொருளின் பூர்விக சான்றிதழ்.
origination certificate என்ற அங்கீகாரம் தான் .
ஊட்டி வர்க்கிக்கு புவி சார் குறியீடு கிடைக்க முழு முயற்சியை எடுத்து சாதித்தது நீலகிரி வணிக சங்க மாவட்ட தலைவரும் பிங்கர் போஸ்ட் ஹிந்துஸ்தான் பேக்கரி உரிமையாளருமான பாரூக் தான்.
பாரூக்கை அவரின் டிபார்ட்மென்டல் ஸ்டோரில் சந்தித்து பேசினோம் .
" எட்டு வருட ஓயாத முயற்ச்சியின் சாதனை தான் நம்ம ஊட்டி வர்க்கி பிஸ்கட்டுக்கு கிடைத்திருக்கும் புவி சார் குறியீடு .
ஒரு விஷயம் இந்த புவி சார் குறியீடு என்பது நமக்கே தெரியாமல் தான் இருந்தது .தினமலர் பத்திரிகையாளர் பிரதீபன் தான் "ஏன் ஊட்டி வர்க்கிக்கு புவி சார் குறியீடு வழங்க கூடாது" என்று அப்பொழுது எழுதியிருந்தார் .
அவரின் எழுத்து என் உள்ளத்தில் ஒரு உந்துதலை ஏற்படுத்தி இதற்கான முயற்சியில் இறங்கினேன் " என்கிறார் .
மேலும் அவர் கூறும்போது , "இதற்கான வேலை மிகவும் இசியானது இல்லை அதே சமயம் டெல்லியில் இருந்த GI அலுவலகத்தை சென்னைக்கு கொண்டுவந்தவர் நம் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் . அவரின் முயற்சியால் தான் நாம் சென்னைக்கு சென்று வருவது ஈசியாக இருந்தது .
வர்க்கி நம்ம ஊரில் எவ்வளவு பழமையானது அதன் முக்கியத்துவம் ஒரிஜினாலிட்டி என்று அனைத்து விஷயங்களையும் GI குழு முன் அவ்வப்பொழுது சமர்ப்பித்து வந்தேன் .
புவி சார் குறியீடு குழுவில் சுற்றுசூழல் , உணவு மற்றும் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு நேரடியாக இந்த குழுவுக்கு முன் நாம் சேகரித்த அனைத்து உண்மையான ஆக்கப்பூர்வமான தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் .
அந்த குழு ஒரு மினி கோர்ட் போல தான் .
நான் ஊட்டி வர்க்கியை பற்றி ஆரம்ப துவக்கம் முதல் இதுநாள் வரை உள்ள பிரபலத்தை அவ்வப்பொழுது எடுத்து கூறிவந்தேன் .
கொரோனா காலத்தில் ஆன் லைன் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு எல்லா தகவல்களும் கொடுத்தவண்ணம் இருந்தேன் .
வர்க்கி உருவானது பிரிட்டிஷ் காலத்தில் .
நவீன ஊட்டியை உருவாகின ஜான் சலீவன் மற்றும் பிரிட்டிஷார் வர்க்கியை பார்த்து சுவைத்து ஆச்சிரியப்பட்டுள்ளனர் என்றால் பாருங்களேன்" என்று நம்மை வியக்கவைத்தார் .
அந்த காலத்தில் டீ எஸ்டேட் மற்றும் பல வேலைகளுக்கு செல்பவர்களுக்காக அவசரம் மற்றும் பசியை போக்க அடுப்பு பேக்கரி ஏற்படுத்தி ரொட்டி , பப்ஸ் மற்றும் பிஸ்கட் தயாரித்து வந்தனர் .
பின் பிரட் பப்ஸ் செய்ய எப்படி மிக்ஸ் செய்வது போல புதிய பாணியில் மிக்ஸ் செய்து ரெடி செய்ய அதுவே வரக்கியானது !.
வேலைக்கு செல்பவர்கள் மிகவும் சுலபமாக காப்பியில் டிப் பண்ணி சாப்பிடுவார்கள் .மற்ற பிஸ்கட் ஊறி கரைந்துவிடும் வர்க்கியை அப்படியே டிப் செய்து சாப்பிடுவது அதன் ஸ்பெஷாலிட்டி சூப்பராக தொடர்கிறது".
என்று கூறி டெமோ செய்து காட்டினார் .
வர்க்கி ஒரு வெஜிடேரியன் தின் பண்டம் என்று சொன்னால் மிகையாகாது .
புவி சார் குறியீடு குழுவிடம் வர்க்கியின் முழு வரலாற்றை சமர்பித்தேன் .அதில் ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுப்பினார்கள் .
வர்க்கி தயாரிப்பில் மாட்டு கொழுப்பு சேர்க்கப்படுகிறது . சுத்தமில்லாத பேக்கிரிகள் உள்ளன என்று குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டன .
அதை எல்லாம் முறியடித்து புவி சார் குறியிடு கிடைக்க எட்டு வருடமாக போராடி வெற்றி பெற்றது ஒரு மிக பெரிய சாதனை என்கிறார் பாருக் .
அவ்வப்பொழுது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எங்கள் பேக்கிரிக்கு வந்து ஆராய்ந்து ரிப்போர்ட் கொடுத்து கொண்டே இருந்தனர் .
உலகத்தில் எங்குமே தயாரிக்க முடியாத வர்க்கி ஊட்டியில் மட்டும் தான் என்பது கிரேட் என்பதை உறுதி செய்தேன் .
நேரடியாக புவி சார் குறியீடு குழுவிடம் வர்க்கி தயாரித்து காட்டினேன் என்று கூறும் பாருக் ...
ஊட்டி தண்ணீர் மிகவும் சுத்தமானது TDS Total disolved solids அளவு மிக குறைவு அது தான் வர்க்கி தயரிப்புக்கு மிகவும் உதவுகிறது .
ஊட்டியின் காலநிலை அதில் மைதா மாவில் சுத்தமான தண்ணீர் மிக்ஸ் செய்யும் போது குளுட்டின் உருவாகி அது வர்க்கி கலவையை பதினெட்டு மணிநேரம் ஊறவைத்து பதப்படுத்தி பின் அடுப்பில் வைத்து பேக் செய்வதால் வர்க்கி சூப்பராக ரெடியாகும் .
இப்படி ஆக்கபூர்வமான தயாரிப்பு தகவல்களை சமர்ப்பித்து அனைத்தும் ஓகே ஆக கடந்த வருடம் மார்ச் 3 ஆம் தேதி ஊட்டி வர்க்கி புவி சார் குறியீடு அங்கீகாரம் கிடைத்தது .
இதற்கான சான்றிதழ் கடந்த 17-7-2024 வழங்க பட்டது .
ஊட்டி வர்க்கி 59 வது புவி சார் குறியீடு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது .
உலக அங்கீகாரம் கிடைக்க அந்த பெருமைக்குரிய சான்றிதழை எடுத்து கொண்டு நம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம் .
தமிழ்நாடு வணிக சங்கத்தின் மாநில தலைவர் விக்கிரம ராஜா தான் எங்களை முதல்வரிடம் அழைத்து சென்றார் .
நானும் என் மனைவி பாஸ்ரா மகன்கள் ஃபாய்ஸ் மற்றும் பயாஸ் முதல்வரை சந்தித்து சான்றிதழை காண்பிக்க பாராட்டு தெரிவித்தார் முதல்வர் .
முதல்வருக்கு வர்க்கி கொடுத்தீர்களா ? என்று கேட்க
அவசரத்தில் எடுத்து செலவில்லை அடுத்த சந்திப்பில் காட்டாயம் எடுத்து சென்று கொடுப்பேன் என்கிறார் .
புவிசார் குறியீடு மேப்பில் நீலகிரி தனியாக காட்டப்பட்டுள்ளது .
நீலகிரியில் உள்ள 150 வர்க்கி உற்பத்தியாளர்களுக்கு தனி புவி சார் குறியீடு எண் வழங்கப்படும் சங்க உறுப்பினர்கள் மிக சுத்தமான உணவு பாதுகாப்பான வர்க்கியை தவறாமல் உற்பத்தி செய்யவேண்டும் என்பது முக்கியம் .
எங்க பேக்கிரியில் வர்க்கி நவீன முறையில் தயாரிக்கிறோம் .
என் மனைவி பாஸ்ரா தலைமையில் பெண்களே வர்க்கி தயாரிப்பது கூடுதல் ஸ்பெஷாலிட்டி !.
இனி நீலகிரியை தவிர உலகில் எங்கும் வர்க்கி உற்பத்தி செய்ய முடியாது என்று காட்டமாக கூறும் பாருக் .
எங்க தயாரிப்பான ஊட்டி வர்க்கி புவி குறியீடுடன் அழகிய பேக்கிங்கில் விற்பனை செய்ய படுகிறது .
இது நீலகிரிக்கு கிடைத்த சிறந்த அங்கீகாரம் மற்றும் சாதனை என்று கூறும் பாருக் விரைவில் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறார்
.
பிரதமர் வர்கியை சுவைத்து தன் மன்கி பாத் நிகழ்ச்சியில் பேசினாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை !...
விரைவில் வெளிநாடுகளுக்கு ஊட்டி வர்க்கி ஏற்றுமதி செய்யும் முயற்சியில் பாருக் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
Leave a comment
Upload