திரிஷா
நடிகை திரிஷாவுக்கு வைர நகைகள் மீது கொள்ளை பிரியம். மார்க்கெட்டில் புது டிசைன் வைர நகை வந்தால் உடனே வாங்கி விடுவார். பொது நிகழ்ச்சிக்கும் வைர அணிகலன் அணிந்து தான் வருவார். அதனால் தான் ஜொலிக்கிறார் போலும்.
மஞ்சு வாரியார்
படம் முழுக்க வரும் கதாபாத்திரங்களை விட நான்கு சீன்களில் வந்தாலும் நச்சுனு பதிவு செய்யும் கதாபாத்திரமாக இருந்தால் நான் நடிக்க தயார் என்கிறார் மஞ்சு வாரியார்.
நிகிலா விமல்
மலையாள நடிகையான நிகிலா விமல் தமிழ் நன்றாக கற்று விட்டார். மாரி செல்வராஜின் வாழைப்படத்தில் அவர் நடித்திருக்கும் கேரக்டர் மறக்க முடியாதது என்கிறார் அவர்.
மீனாட்சி கோவிந்தராஜன்
நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். தற்சமயம் கன்னட நடிகர் ஒருவருடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது இவர் அடுத்த நடிக்கமிருக்கும் வெப் சீரியஸ் பிரமோஷனுக்கு என்கிறார்கள். அதே சமயம் அந்த நடிகரை அவர் காதலிக்கிறார் என்ற பேச்சும் வரத் தொடங்கி இருக்கிறது.
மாளவிகா மோகனன்
தங்கலான் படத்தில் மாளவிகா மோகனனுக்கு சண்டைக் காட்சிகள் நடிப்பது சிரமமாக இருந்தது நானும் அவரை நடிக்க வைக்க கொடூரமாக நடந்து கொண்டேன். ஒரு கட்டத்தில் அவர் அழ ஆரம்பித்தார். அதன் பிறகு அவருக்கு சிலம்பம் பயிற்சி தந்து அதன் பிறகு படப்பிடிப்பை தொடங்கினோம். சிறப்பாக நடித்தார் என்கிறார் இயக்குனர் பா. ரஞ்சித்.
ஷேன் நிகாம்
`மலையாளத்தில் பிரபலமாக உள்ள இளம் நடிகர் ஷேன் நிகாம் இவர் தமிழில் மெட்ராஸ்காரன் என்ற படத்தில் அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி ஐஸ்வர்யா தத்தா இயக்குனர் வாலி மோகன் தாஸ்.
சுட சுட
ராஜமவுலி
2000 கோடி பட்ஜெட்டில் மகாபாரதத்தை நாலு பாகங்களாக எடுக்க முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி.
தனுஷ்
அடுத்து இன்னொரு படத்தை இயக்கப் போகிறார் நடிகர் தனுஷ். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி என்று மூன்று மொழி ரசிகர்களை ஈர்க்கும் படமாக இது இருக்குமாம். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நித்யா மேனன் நடிக்க இருக்கிறார்கள்.
ரஜினி
கூலிப்பட ஹீரோ ரஜினிக்கு வில்லன் வேடமாம், இதுவரை சினிமாவில் அப்படி ஒரு வில்லனை பார்த்திருக்கவே மாட்டார்களாம்.
விக்ரம்
`நடிகர் விக்ரம் தற்சமயம் இளம் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். இவர்கள்தான் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கிறார்கள் என்பது விக்ரம் கணிப்பு.
Leave a comment
Upload