தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20240626184436237.jpeg

பாஜகவின் நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் ராகுல்காந்தி விமர்சனம்.

அதுதானே கூட்டணி தர்மம் தமிழ்நாட்டில் போய் பாருங்கள்.

வடசென்னை வளர்ச்சிக்கு 4378 கோடியில் 218 பணிகள் அமைச்சர் சேகர்பாபு தகவல்.

எல்லாமே வெறும் தகவலாக தான் இருக்கிறது வடசென்னை வளரவே இல்லை அப்படியே தான் இருக்கிறது.

சிறைக்குத் திரும்பினார் செந்தில் பாலாஜி.

ஏதோ சாதனை படைத்து விட்டு போனது போல் செய்தி.

தொழில் முனைவோருக்கான முத்ரா கடன் வரம்பு இரட்டிப்பு.

ஆனா வங்கியில் போய் கேட்டா, உட்கார வைத்து பேசாமல் திருப்பி அனுப்புவாங்க அது அவங்க பாலிசி.

4.9% நிதி பற்றாக்குறை மத்திய நிதியமைச்சர்.

ஆனா நீங்க ஆந்திரா பீகாருக்கு மொத்த பணத்தையும் வாரி வழங்கிகிட்டதா பேசிக்கிறாங்க.

நீட் தேர்வு ரத்து இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

நல்ல வேடிக்கை இதன் பிறகு கவுன்சிலிங் ,அட்மிஷன் ,கல்லூரி எப்ப திறப்பாங்க ,பாடம் எப்ப நடத்துவாங்க மொத்தத்தில் வருங்கால டாக்டர்கள் நிலை பாவம்.

தமிழில் கடைகளில் பெயர் பலகைகள் முதல்வர் வேண்டுகோள்.

வேண்டுகோள் தானா உத்தரவு எல்லாம் போட அதிகாரம் இல்லையா !!

அமலாக்க துறையை கண்டித்து முதல்வர் சித்தராமையா போராட்டம்.

பாதிக்கப்பட்டோர் போராட்டம் நடத்துவாங்க தான்.

மின் கட்டணம் உயர்வுக்கு அதிமுகவே காரணம் அமைச்சர் தங்கம் தென்னரசு.

அதை குறைக்க காரணமா நீங்க ஏன் இருக்க கூடாது ?

ஆம்ஸ்ட்ராங் கொலையில் இரண்டு வழக்கறிஞர்கள் கைது

சட்டம் என் கையில் நினைச்சுட்டாங்க போல இருக்கு !!

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிர்மலா சீதாராமன் படித்தார் பா.சிதம்பரம்

ஏதோ பாராட்டு மாதிரி இது தெரியுது !!

பட்ஜெட் அறிவிப்பில் பரபரப்பு சம்பவங்கள்.

அறிவிப்பில் என்ன பரபரப்பு இருக்கப் போகிறது !!

பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு எதுவும் இல்லை ராகுல்காந்தி.

அதுக்குள்ள பட்ஜெட் படிச்சிட்டீங்களா !!

ஆண்டுக்கு மூன்று லட்சம் வரை வருமானத்துக்கு வரி இல்லை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதெல்லாம் இருக்கட்டும் அந்த 3 லட்சத்துக்கு வழி அத சொல்லுங்க சிஸ்டர் !!