கடந்த இரண்டு வாரமாக தென் மேற்கு பருவமழை கொட்டி கொண்டிருக்க இயல்பு வாழ்க்கை அனைவரையும் மிகவும் பாதித்தது .
புதிய நீலகிரி காலெக்டராக பொறுப்பேற்றார் லட்சுமி பாவே தன்னெரு .
அதிகமான மழை விஸ்வரூபம் எடுக்க நிலைமையை புரிந்து கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தார் .
மழை நான் ஸ்டாப்பாக பெய்து கொண்டே இருந்தது .
கடந்த ஞாயிற்று கிழமை சற்று எத்தனித்தது மழை .
மாலை திடீர் என்று காற்று வீச ஆரம்பித்தது .
இரவு விடிய விடிய காற்று வீச ஊட்டி சுற்று வட்டாரம் , மஞ்சூர் , குந்தா பகுதி முழுவதும் சூறாவளி காற்று வீசி அடித்தது .
பேய் காற்று என்பது இதுவா என்பது போல அனைவரும் ஷாக்கில் மூழ்கினார்கள் .மழை சுத்தமாக நிற்க சூறாவளி காற்று வெளுத்து வாங்கியது .
இரவு முழுவதும் வீசிய காற்றால் ராசட்சச மரங்கள் வேரோடு சாய்ந்து ஏகப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியது .
நிறைய கார்கள் மரத்தில் சிக்கி நொறுங்கின .
கூடலூரில் இருந்து சென்னைக்கு பயணித்த எஸ் இ டி சி விரைவு பேருந்து அனுமாபுரம் என்ற இடத்திற்கு வரும் பொழுது ஒரு ராட்சச மரம் பேருந்தின் மேல் விழ முன் பக்கம் மரத்தில் சிக்கி நொறுங்கியது நல்ல வேளை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை .
லாரிகள் , மினி பஸ்கள் என்று சூறாவளி காற்றால் மரங்கள் விழுந்து நொறுங்கின .
ஊட்டி , குந்தா, கோத்தகிரி தாலுக்கா பகுதி முழுவதும் மின்கம்பங்கள் விழுந்தன .
ஐம்பதுக்கும் மேற்பட்ட ட்ரான்ஸ் பார்மர்கள் வளைந்து நொறுங்கின .
நூறுக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தால் மின்சாரம் துண்டிக்க பட்டது .
இருநூறுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன பல சாலைகள் துண்டிக்க பட்டன .
பயங்கர சூறாவளி காற்றால் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தார் கலெக்டர் .
வனத்துறையினர் ,தீயணைப்பு துறையினர் மாற்றும் மின்சார ஊழியர்கள் கொடிய காற்று மற்றும் மழையில் இரவு பகலாக மரங்கள் வெட்டப்பட்டு ,மின்சார இணைப்பை சரிசெய்தது கொடூர இயற்கை பேரிடர் முன் ஒரு சவாலாகவே செய்து கொண்டிருக்கின்றனர் .
இந்த சவாலான பணியை செய்து முடித்து கொண்டிருக்கும் பணியாளர்களை காட்டாயமாக பாராட்டி கௌரவ படுத்தவேண்டும் என்பது நீலகிரி வாசிகளின் வேண்டுகோள் .
37 வருடத்திற்கு பின் இப்படி பட்ட சூறாவளி காற்று ஊட்டியை சூறையாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
தற்போது பழைய காலத்து தென் மேற்கு பருவ மழை பெய்து கொண்டிருக்க ..
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவே தன்னெரு மற்றும் அதிகாரிகள் துரிதமாக செயல் பட்டுக்கொண்டிருப்பதால் எந்த உயிர் சேதமும் இல்லை என்பது ஆறுதலான விஷயம் .
அதே சமயம் பயங்கர காற்றால் உள்ளுர் வாசிகள் நடுக்கத்தில் நடுங்கி கொண்டிருக்கிறார்கள் .
Leave a comment
Upload