சம்யுக்தா
மலையாளத்தில் அறிமுகம் என்றாலும் தெலுங்கு இந்தியில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் சம்யுக்தா மேனன். கஜோல் பிரபுதேவா ஆகியோருடன் இவர் நடிக்கும் 'மகரக்னி' என்ற படம் எக்கச்சக்க எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. மலையாளத்தில் ராம் தெலுங்கில் ஸ்வயம்பு ஆகிய படங்களில் நடிக்கிறார். அவரது இலக்கு தமிழ் படம் பெரிய ஹீரோவுடன் நடித்து தனது சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பது திட்டம்.
தமன்னா
அம்பானி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமன்னா கருப்பு மற்றும் தங்க நிறத்தில் டோரனி டிசைனில் அணிந்திருந்த லெஹங்காவிலை 3.85 லட்சமாம்.
ஜான்வி கபூர்
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இப்போது தெலுங்கில் ராம்சரண் நானி ஜூனியர் என்டிஆர் என்று பிஸி நடிகையாக தெலுங்கில் ஆகிவிட்டார், இருந்தாலும் தமிழில் நடிப்பதில் தான் அவருக்கு இப்போதும் விருப்பம்.
ராஷ்மிகா
நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் பேசப்படும் அளவுக்கு இருக்கும் நடிகை ராஷ்மிகா நமது செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.
கீர்த்தி சுரேஷ்
நான் நடிக்கும் ரகு தாத்தா படத்தில் இந்தி திணிப்பு பற்றி பேசப்படவில்லை கதையை தொடர்புபடுத்தும் வகையில் ஹிந்தி திணிப்பு ஒரு உதாரணமாக கையாளப்படுகிறது அவ்வளவுதான் என்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சுட சுட
மத கஜ ராஜா
விஷால் ,அஞ்சலி ,வரலட்சுமி சந்தானம் நடித்த படம் மத கஜ ராஜா. இந்த படம் வெளிவருமா என்ற சந்தேகம் கேசில் இருந்தது. இப்போது பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டதாம். செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகுது. அன்றுதான் விஜய் நடிக்கும் கோட் படமும் ரிலீஸ் ஆகிறது.
விஜய்
விஜய் நடிக்கும் கடைசி படத்தை இயக்கப் போவது இயக்குனர் எச். வினோத் என்பது உறுதி. கமலுக்கு சொன்ன கதை அவர் வேண்டாம் என்று சொன்னதால் அந்தக் கதையில் தான் விஜய் நடிக்க இருக்கிறாராம் சில மாற்றங்களுடன்.
விடுதலை 2
விடுதலை 2 இந்த ஆண்டு கடைசியில் தான் ரிலீஸ் ஆகுமாம். இந்த முறை சூரியை விட விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறதாம். அதேபோல் இது நடிக்கும் மஞ்சு வாரியார் கேரக்டர் வெயிட்டான கேரக்டர் என்கிறார்கள். இது தவிர அனுராக் காஷ்யப் நடிக்கிறாராம்.
நயன்தாரா
இப்போது எல்லாம் வீட்டில் தயாரிக்கப்படும் உணவை மட்டும்தான் நான் ரசித்து சாப்பிடுகிறேன். என் ஆரோக்கியத்திற்கு அது தான் காரணம் என் உணவு குறிப்பை வருங்காலத்தில் ரசிகர்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளேன் என்கிறார் நடிகை நயன்தாரா.
Leave a comment
Upload