தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா- லைட் பாய்

ராஷ்மிகா மந்தனா

20240620121049482.jpeg

மும்பையில் இப்போது பிரபல நடிகையாகி விட்டார் ராஷ்மிகா. மும்பை விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள பிகு பண்ணாமல் எல்லோருக்கும் போட்டோவுக்கு போஸ் கொடுத்து செல்பி எடுக்க அனுமதித்தார் ரசிகர்கள் முக்கியம் என்று யாரோ சொல்லி இருக்கிறார்கள் போலும்.

மஞ்சிமா மோகன்

2024061919135373.jpg

குண்டு கத்திரிக்காய் அளவுக்கு வெயிட் போட்டு இருந்த மஞ்சிமா மோகன் தற்போது தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு மெலிந்து விட்டார். நான் இப்போது ரொம்ப ஸ்லிம் என்று புகைப்படங்களை சமூக வலைதளத்தில் போட்டு தயாரிப்பாளர்களுக்கு தகவல் அனுப்பி இருக்கிறார் மஞ்சிமா மோகன்.

சம்யுக்தா

20240619191541721.jpeg

வாத்தி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சம்யுக்தா. அதன் பிறகு தெலுங்கு படம் ஹாலிவுட் என பிசியானவர் தற்சமயம் இந்தியில் மகா ராக்னி என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது ..புடவையிலேயே எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டி இந்த படத்தில் நடித்திருக்கிறார் சம்யுக்தா.

தென்னிந்திய நடிகர்கள் ஆதிக்கம்

20240619191830570.jpg

இந்தி பட உலகில் தற்சமயம் ரஜினி, தனுஷ் ,சூர்யா ,விஜய் சேதுபதி,பிரபாஸ் பகத் பாஸில் என்று தென்னிந்திய நடிகர்களின் ஆதிக்கம் இந்தி பட உலகில் தற்சமயம் அதிகமாகி விட்டது. இந்திப்பட தயாரிப்பாளர்களும் பான் இந்தியா படமாக இவர்களை வைத்து தயாரித்தால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நல்ல வியாபாரம் என்று நம்புகிறார்கள்.

ஸ்பிரிட்

20240619192618380.jpeg

கல்கியின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்துக்கு ஸ்பிரிட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். பிரபாஸுக்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா. 300 கோடி செலவில் இந்த படம் தயாரிக்கப்படுகிறது. இது பிரபாஸில் 25வது படம்.

ரச்சிதா மகாலட்சுமி

20240619193445748.jpg

இந்தியன் 2 படத்தை பார்த்துவிட்டு ரச்சிதா மகாலட்சுமி ரொம்ப எதிர்பார்ப்புடன் பார்த்து ஏமாந்து போயிட்டேன். இதற்கு இந்தியன் முதல் பாகத்தை மீண்டும் ரீலீஸ் பண்ணிருக்கலாம் என்று சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சுட சுட

மெய்யழகன்

கார்த்தி, அரவிந்த்சாமி நடிக்கும் படம் மெய்யழகன். இது கார்த்தியின் 27-வது படம். ஜோதிகா சூர்யா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம். செப்டம்பர் 27 ரிலீஸ். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடி ஸ்ரீ திவ்யா.

அமரன்

கமலஹாசன் ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படம் அமரன். சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிக்கும் இந்த படம் அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாகிறது.

வரலட்சுமி

நடிகை வரலட்சுமி சரத்குமார் மும்பையை சேர்ந்த நிக்கோலாய் சச் தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மணமக்கள் செய்தியாளர்களை சந்தித்தார்கள் வரலட்சுமி பேசும்போது நிக்கோலாய் என் காதல், சினிமா என் உயிர் எனவே நடிப்பை தொடர்வேன் என்று சொல்லி இருக்கிறார்.

விக்ரம்

ரொம்பவும் ரொமான்ஸ் காட்சிகள் இருந்தால் வேண்டாம் என்று மறுத்து விடுகிறார் நடிகர் விக்ரம். இப்போது எனக்கு வயது 57 நெருக்கமான காதல் காட்சிகள் என்றால் சமூக வலைதளத்தில் ஏகத்துக்கு என்னை கலாய்ப்பார்கள் வேண்டாம் என்று மென்மையாக மறுத்து விடுகிறார்.