தொடர்கள்
விளையாட்டு
ஒலிம்பிக் 2024 - துவக்க விழா -மரியா சிவானந்தம்

20240619215200905.jpg

20240619214835143.jpgAll roads lead to Paris...

உலகத்தின் எல்லா சாலைகளும் பாரிஸ் நகரை நோக்கிச் செல்ல இருக்கின்றன . வரும் வாரத்தில் ஜூலை 26 ஆம் தேதி இந்த நகரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாக துவங்க இருக்கின்றன. உலக நாடுகளிடையே நேசத்தையும் , நட்பையும் வளர்க்கும் இந்த மெகா கொண்டாட்டத்தை எல்லா விளையாட்டு வீரர்களும், ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .

ஒலிம்பிக் விளையாட்டு 2800ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது .உலகத்தின் நாகரிக தொட்டில் என்று அழைக்கப்பட்டகிரேக்க நாட்டில் ஒலிம்பியா என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது .ஜீயஸின் சந்நிதியில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இந்த வீர விளையாட்டுகள் நிகழ்த்தப்பட்ட போட்டிகள் காலப் போக்கில் ரோமையின் எழுச்சிக்குப் பின் நிறுத்தப்பட்டன.

20240619215515520.jpg

நவீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான வித்திட்டவர் பிரான்ஸின் பியரி டி குபர்டீன். ஒலிம்பிக் போட்டிகளுக்கு புத்தாக்கம் தந்து முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளை ஏதென்ஸில் 1896ஆம் ஆண்டு நடத்தினார்.அதன் பின்னர் தொடர்ந்து (உலகப் போர்க் காலங்கள் தவிர்த்து) ஒலிம்பிக் நடத்தப்பட்டு வருகிறது .

ஒவ்வொரு லீப் வருடமும் , ஒலிம்பிக்கின் கோடை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதை நாம் அறிவோம் .அதைத் தவிர பாரா ஒலிம்பிக்ஸ் (மாற்றுத் திறனாளர்களுக்காக ) மற்றும் குளிர்கால ஒலிம்பிக்ஸ்களும் நடத்தப்படுகின்றன .

IOC யின் நிர்வாகக் குழு 2017ல் சுவிட்சர்லாந்தில் கூடி 2024ல் நடைப்பெற இருக்கும் 33வது ஒலிம்பிக் போட்டிகளை பாரிஸில் நடத்த முடிவெடுத்தது. மூன்றாவது முறையாக பாரிஸ் இந்த போட்டிகளை நடத்த இருக்கிறது .18000 கோடி செலவில் இந்த திருவிழா நடக்க இருக்கிறது .

20240619205057525.jpg

மிக பிரும்மாண்டமாக தொடங்க இருக்கும் இப்போட்டிகள் பாரிஸ் நகரில் ஸீன் நதிக்கரையில் தொடங்க இருக்கிறது . இந்த நதியில் விளையாட்டு வீரர்களைப் படகுகளில் ஏற்றிக் கொண்டு குதூகலமாக ,திறந்த வெளி அரங்கில் நடக்க இருக்கிறது . "Games Wide Open" என்ற ஸ்லோகன் பொருத்தமாகவே உள்ளது .

20240619204707608.jpg

ஒலிம்பிக் மரபுப்படி ஒலிம்பிக் சுடர் 100 நாட்களுக்கு முன்னதாக கிரீஸின் ஒலிம்பியாவில் இருந்து எடுத்து வரப்பட்டு , துவக்க விழாவுக்கு கொண்டு வரப்படுகிறது. ஆறு மில்லியன் பார்வையாளர்கள் இந்த விழாவில் பங்கெடுப்பார்கள்.

20240619204604618.jpg

பாரிஸ் மற்றும் சுற்றுப்புற நகரங்களில் 32 வகையான போட்டிகள் நடக்க உள்ளன . கொரானாவுக்குப் பிறகு நடக்கும் போட்டி என்பதால் , எல்லா நாடுகளும் ஆர்வத்துடன் கலந்துக் கொள்ள உள்ளன.206 நாடுகளில் இருந்து 10,500 விளையாட்டு வீரர்கள் கலந்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் இருந்து 117 விளையாட்டு வீரர்களும் அவர்களுக்கு உதவியாக 140 பேர் கொண்ட பெரிய குழுவும் செல்கிறது .தவிர, பாதுகாப்பு பணிக்காக நமது சி ஆர் பி எப் படையைச் சேர்ந்த வாஸ்ட் .டென்பி என்று அழைக்கப்படும் மோப்ப நாய்கள் பாரிஸ் பறந்துள்ளன.

20240619204745184.jpg

ஒலிம்பிக் சின்னமாக சிவப்பு , நீல வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள பிரஞ்சு மரபில் உள்ள பிரிஜியன் தொப்பி (Phrygian hats) வைக்கப்பட்டு உள்ளது. விளையாட்டு வழியாக ஒரு புதிய புரட்சியை நிகழ்த்த வேண்டும் என்ற கருத்தை எதிரொலிப்பதாக இந்த சின்னம் அமைக்கப்ட்டுள்ளது . .

20240619204256438.jpg

ஒலிம்பிக் 2024 இன் கருப்பொருள் கொண்டாட்டம் , பரிமாற்றம் , பகுத்தறிதல் மற்றும் தன்மயமாக்கல் (Celebration, Transfer, Rationalisation, Personalisation) என்பதாகும். விளையாட்டின் மூலம் உலக மக்களிடையே கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தும் விழா ஒலிம்பிக் என்பதில் ஐயமில்லை .

எல்லா கண்களும் பாரிஸ் நகரை ஆனந்தம் கலந்த ஆர்வத்துடன் உற்று நோக்குகின்றன. தம் நாடு முன்னணியில் நின்று தங்கமாக , வெள்ளியாக பதக்கங்களை வாரி வர வேண்டும் என்று உலக மக்கள் எதிர் பார்த்து நிற்கின்றனர்.

2024061921533654.jpg

ஒளிரும் நகரம் , காதலர்களின் சொர்க்கம், உலகின் பேஷன் தலை நகர் என்றெல்லாம் பெருமை கொண்ட பாரிஸ் நகரில் துவங்க இருக்கும் ஒலிம்பிக் விழா பல ஆயிரக்கணக்கான வீரர்களின் கனவுகளை தனதாக்கி கொண்டுள்ளது

எல்லா நாட்டின் முன்னணி விளையாட்டு வீரர்களும் உற்சாகத்துடன் பங்கு பெற இருக்கிறார்கள் .

அந்த வெற்றிச் செய்திகளை உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்துக் கொள்வோம்