தொடர்கள்
கவர் ஸ்டோரி
அம்பானி கல்யாணம் வைபோகமே - ராம்

20240620081051551.jpg

அம்பானி கல்யாணம்...வைபோகமே.....

கடந்த வாரம் நடந்து முடிந்த அம்பானி கல்யாணம் தான் டாக் ஆஃப் த வேர்ல்ட்

காமராஜர் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியாக நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். அவர் நண்பரின் மகள் திருமணத்திற்கு அழைக்கும் போது வரமாட்டேன் போ நிறைய வேலை இருக்கு என்று சொல்லி விட்டார்.

ஆனால் திருமண தினத்தன்று சொல்லாமல் கொள்ளாமல் வந்து விட்டார் முதல்வர் காமராஜ். அடடா வரமாட்டேன்னு சொல்லிட்டு வந்துட்டீங்களே என்ற நண்பரிடம் ஆமா, சொன்னா முதல்வர் வரார்னு ஏற்கனவே கடன் வாங்கி கல்யாணம் பண்ற எனக்காக இன்னும் கொஞ்சம் செலவு பண்ணியிருப்ப. அது வேண்டாம்னு தான் சொல்லலை என்றாராம்.

தாலி எடுத்துக் கொடுக்க சொல்லும் போது ஏய், நான் கல்யாணமே ஆகாதவன் யாராவது நல்லா வாழ்ந்துக்கிட்டுருக்கறவங்கள தாலி எடுத்து கொடுக்க சொல்லு என்று ஒதுங்கியதும் காமராஜ் தான்.

இப்படி, கஞ்சிக்கு இல்லாதவர்களே கடன் வாங்கி ஆடம்பரமாக கல்யாணம் செய்து கொடுக்கும் போது ஏன் முகேஷ் அம்பானி தன்னுடை செல்ல மகனுக்கு சிறப்பாக கல்யாணம் செய்வதை சமூக ஊடகங்களில் எதிர்க்க வேண்டும்.

அவர் என்ன கடன் வாங்கியா கல்யாணம் செய்கிறார். தன்னுடைய பணத்திலிருந்து ஐந்து சதவிகிதம் செலவழித்து ஒரு ஆடம்பர கல்யாணம் செய்வதில் என்ன தவறு.

காமராஜர் போல ஒதுங்காமல், கலந்து கொண்டு கலக்கினார் மோடி என்பது தனிச் செய்தி. ஆனால் காமராஜர் போல உடையில் எளிமையானவர் இல்லை மோடி. அது வேறு விஷயம்.

20240620081851662.jpeg

உலக பிரபலங்கள் எல்லாம் இந்த அம்பானி கல்யாணத்திற்கு படையெடுக்க, நேற்று பணக்காரரான அட்லீயெல்லாம் தன் மனைவியின் ஜாக்கெட்டில் ஆனந்த அம்பானி கல்யாண டிசைன் போட்டு போனதும் பலருக்கு வயிற்றெரிச்சல்.

20240620081514215.jpg

அட்லீ பாலிவுட் ஆட்களுக்கு ரொம்பவும் பிடித்த இயக்குனராகி விட்டார். அது போலவே நம்ம ஜோவும், சூர்யாவும், ரஜினியும் ஆட்டம் போட்டதும் பலருக்கு உறுத்தியது.

ஆனந்த் அம்பானி கடைக்குட்டி. ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி இரட்டையர்களை தொடர்ந்து கடைக்குட்டியாக பிறந்த ஆனந்த் அம்பானி மேல், முகேஷுக்கும், நீடாவுக்கும் ஏக பாசம்.

அது மட்டுமல்ல 29 வயதில் 200 கிலோ இருந்த ஆனந்த் அம்பானி பின்னர் கடும் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுடன் தன்னுடைய உடையை குறைத்து 100 கிலோவுக்கும் குறைவானது அவரது உடல் நலம் சார்ந்த விஷயம்.

ஆஸ்த்துமா பாதிப்பு உள்ள ஆனந்த் அம்பானி மீண்டும் உடல் போட்டு விட்டார் என்றாலும் அவரது உடல் நலம் சீராக இல்லாதது தான் காரணம். அவரே ஒரு பேட்டியில் பல விதமான பிரச்சினைகளை தாண்டி நான் வரும் போது என் பெற்றோர்கள் எனக்கு பின்புலமாக இருந்ததை என்னால் மறக்கவே முடியாது என்று கண்ணீர் சிந்தியிருக்கிறார்.

அப்படிப்பட்ட செல்ல மகனுக்கு ஐயாயிரம் கோடி என்ன இருபதாயிரம் கோடி கூட முகேஷ் செலவு பண்ணுவது தவறே இல்லை.

இன்றைய தேதிக்கு ஒரு சீரியல் செட் போட்டாலே லட்சக்கணக்கில் செலவாவதும், எப்போதுமே பக்கத்து வீட்டுக்காரன் பிரம்மாண்டமாக கல்யாணம் செய்தால் நம்ம வயிறுகளெல்லாம் பக பக வென எரிவதும் சாதாரண விஷயங்கள் தான்.

அம்பானி கல்யாணத்தில் ஐநூறு ஜோடிகளுக்கு இலவச கல்யாணம் செய்து வைத்து ஒரு வருடத்திற்கு மளிகை வாங்கி கொடுத்து சீர்வரிசையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள்.

நம்மூரில் சூப்பர் ஸ்டார் கல்யாணத்தில் வெஞ்சிரக் கிண்ணம் கூட யாருக்கும் கொடுக்கவில்லை என்பதும் நாம் அறியாததல்ல.

மேலும், தினமும் ஆயிரக்கணக்கான பேருக்கு நாற்பது நாளைக்கு சாப்பாடு போட்டிருக்கிறார்கள். சாப்பாடு என்றால் தொன்னையில் புளியோதரையும், தயிர்சாதமும் இல்லை. நல்ல கல்யாண சாப்பாடே போட்டிருக்கிறார்கள்.

உலக பணக்காரர்களையெல்லாம் இந்த இந்திய திருமணம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

அட, இந்தியாவில் தான் உலகிலேயே அதிக செலவு வாய்ந்த திருமணம் என்று வாய் பிளந்து நிற்கிறார்கள். இந்த செலவு எதோ கடலில் கரைத்த பெருங்காயம் அல்ல.

20240620081728356.jpg

இது வியாபார தந்திரம். இது இந்திய பொருளாதரத்தில் லேசாக மேம்படுத்தும் ஒரு வியாபாரமும் தான். ஐயாயிரம் கோடியில் எத்தனை குடும்பங்களுக்கு பணம் புழங்கியிருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.

இந்த பணம், காசு, குத்தாட்டம் இதையெல்லாம் விட நம்மை கவர்ந்தது நம் இந்திய திருமணங்களின் கலாச்சாரத்தை நீடா அம்பானி அனைவருக்கும் கடத்திய விதம் தான்.

கன்னிகா தானம் என்பது பெண்ணை தானம் செய்வதல்ல. அப்படி எந்த ஒரு பெற்றோரும் தன் பெண்ணை தானம் செய்ய முடியாது. ஏனெனில் நானும் ஒரு பெண். எனக்கும் ஒரு பெண் இருக்கிறாள்.

ராதிகா இன்னொரு பெண்ணாக எங்கள் வீட்டில் வளைய வருவாள். அவளை இருகரம் கொண்டு அணைத்து வரவேற்கிறேன் என்று பேசிய பேச்சில் அனைவரின் கண்களும் குளமாகிப் போனது.

அம்பானி கல்யாணம் அன்னிய கல்யாணம் இல்லை. நம்ம வீட்டு கல்யாணம். நம் பாரம்பரியத்தை பறைசாற்றும் கல்யாணம்.

முழுக் கல்யாண வீடியோ இங்கே....

ஆனந்த் அம்பானியை நம் வீட்டு பையனாகவும், ராதிகா மெர்ச்சண்டை நம் வீட்டு மருமளாகவும் பார்த்து மகிழ்ந்து போக வேண்டிய தருணம்.

அம்பானி கல்யாணம் வைபோகமே...........

20240620081803247.jpg

கல்யாணப் பொண்ணு ராதிகா மெர்ச்சண்ட் கண்களை கவர்ந்தார்னா அவரது சகோதரியும் தன் பங்குக்கு கலக்கி விட்டார்... அஞ்சலி மெர்ச்சண்ட்.....

2024062008200275.jpeg

2024062008203285.jpeg