தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

முந்துகிறார்

( லைட்பாய்க்கு ரொம்ப குறை. எவ்ளோ நடிகைகள் படம் அனுப்பறேன் ஒரே ஒரு தபா அட்டைல வெக்க கூடாதா ?? இது தான் அட்டைப் படம். போதுமா லைட் பாய் ? )

20240606092412161.jpeg

நடிகைகள் திரிஷா ,நயன்தாரா இருவரும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும் இப்போது தான் அவர்கள் 10 கோடியை தொட்டு இருக்கிறார்கள். ஆனால் 2016-இல் கன்னட சினிமாவில் அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. புஷ்பா படம் மூலம் பிரபலமானார் தற்சமயம் இந்தியில் சல்மான் கானுடன் இந்தியில் சிக்கந்தர் படத்தில் நடிக்கிறார். அதற்கு அவர் வாங்கும் சம்பளம் 13 கோடி. சினிமாவுக்கு வந்து ஏழு ஆண்டுகளில் சீனியர் நடிகைகளான திரிஷா நயன்தாராவை சம்பள விஷயத்தில் பின்னுக்கு தள்ளிவிட்டு முந்துகிறார் ராஷ்மிகா. புஷ்பா படம் இரண்டாம் பாகம் வந்ததும் என் சம்பளம் 15 கோடியாக உயரும் என்று இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டாராம் ராஷ்மிகா.

நயன்தாரா

20240606092447243.jpeg

இந்தியில் இன்னொரு பட வாய்ப்பு நயன்தாராவுக்கு வந்தது. ஆனால், ஓவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கதை சொல்லுவதற்கு முன்பே தயாரிப்பு நிறுவனம் நிபந்தனைப் போட வேண்டாம் என்று மறுத்து விட்டார் நயன்தாரா

சந்தானத்தின் சந்தேகம்

20240606092548559.jpeg

நாமும் நகைச்சுவை நடிகராக இருந்து இதுவரை படங்கள் நடித்து விட்டோம். ஆனால் குறிப்பிட்டு சொல்லும் படி எதுவும் சாதித்ததாக தெரியவில்லை. ஆனால் இரண்டே இரண்டு படங்களில் நடித்த சூரி மட்டும் இன்று பேசும் பொருளாகி விட்டார் இது எப்படி என்பது தான் அவரின் சந்தேகம் அவர் நல்ல கதை நல்ல டைரக்டர் என்று தேர்ந்தெடுத்து நடித்தார் என்பது கூட தெரியாத அப்பாவியாக இருக்கிறார் சந்தானம்.

அனிருத்

2024060609284027.jpg

தமிழ் தெலுங்கு இந்தி படங்களின் இசையமைத்து வரும் அனிருத் தனக்கு கிடைக்கும் வருமானத்தை முதலீடு செய்வது பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது நயன்தாரா தனது டிவைன் ஃபுட்ஸ் நிறுவனத்தில் பங்குதாரர் ஆக்கிவிட்டார். இது தவிர இன்னொரு காபி நிறுவனம் அனிருத் பங்குதாரராக சேர்த்துக் கொண்டிருக்கிறது இசையோடு தொழிலும் தீவிரம் காட்டுகிறார் அனிருத்.

வாஸ்கோடகாமா

20240606093011753.jpg

நகுல் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் வாஸ்கோடகாமா. இது ஒரு காமெடி படம் என்கிறார் இயக்குனர் ஆர் ஜி கிருஷ்ணன். இந்தப் படத்தில் நகுலுக்கு ஜோடி அர்த்தனா பினு .ஆகஸ்ட் 2 இந்த படம் ரிலீஸ்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

20240606093049989.jpeg

தமிழ் தெலுங்கு மலையாள படங்களில் தொடர்ந்து பிஸியாக இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அதே சமயம் கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டும் அவர் தேர்ந்தெடுக்கிறார். தெலுங்கில் ஹீரோ வெங்கடேஷ் ஜோடியாக தேர்வாகி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் வெங்கடேஷுக்கு இரண்டு பேர் ஜோடி. ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொருவர் மீனாட்சி சவுத்ரி. இது ஆக்சன் திரில்லர் படமாம்.

தமன்னா

20240606093121782.jpeg

நடிகை தமன்னா ஜான் ஆபிரகாம் உடன் வேதா என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். இது ஆகஸ்ட் 15 ரிலீஸ். இது தவிர ஹிந்தியில் ஸ்ட்ரி2 தெலுங்கில் ஓடேலா 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்சமயம் தமன்னாவுக்கு கடன் ஜாஸ்தி ஆகிவிட்டது போல் தெரிகிறது. மும்பை அந்தேரி பகுதியில் அவருக்கு மூன்று வீடுகள் உள்ளன. அவற்றை இந்தியன் வங்கியில் அடமானம் வைத்து 7.84 கோடி கடன் வாங்கி இருக்கிறார். இது தவிர 6000 சதுர அடியில் ஒரு அலுவலகத்தை வாடகைக்கு எடுத்திருக்கிறார் அதற்கு மாத வாடகை 18 லட்சம் இதெல்லாம் எதற்கு என்று தெரியவில்லை

வில்லன் பிரிதிவிராஜ்

20240606093249793.jpg

இயக்குனர் ராஜமௌலி ஆக்சன் அட்வென்ச்சர் கதை ஒன்றை மகேஷ் பாபு வைத்து எடுக்க இருக்கிறார். இதில் மகேஷ்பாபு அனுமானை நினைவுட்டுவது போல் அவரது கேரக்டர் இருக்குமாம். இதில் வில்லன் வேடத்தில் பிரித்திவிராஜ் நடிக்கிறார். வில்லன் என்றால் கெட்டவன் என்று நினைக்கக் கூடாதாம்அவர் பக்கமும் ஒரு நியாயம் இருப்பது போல் அந்த கேரக்டர் இருக்கும் என்கிறார் ராஜமௌலி.

திஷா பதானி

20240606093413268.jpeg

சூர்யாவுக்கு ஜோடியாக கங்குவா படத்தில் நடித்திருக்கும் திஷா பதானி தந்தை போலீஸ் அதிகாரி. அம்மா சுகாதாரத் துறையில் இன்ஸ்பெக்டர் சகோதரி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்ணல் இவரும் விமானப்படை பைலட்டாக விருப்பப்பட்டாராம் ஆனால் சினிமா இவரை இழுத்து வந்து விட்டதாம்.இப்போதைக்கு முன்னணி நடிகை என்ற பெயருக்கு ஆசைப்படுகிறார் திஷா பதானி

நிவேதா தாமஸ்

20240606093840918.jpeg

தர்பார் படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ் மூன்று வருடமாக அவருக்கு எந்தப் பட வாய்ப்பு வரவில்லை அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றெல்லாம் வதந்தி வந்தது. இப்போது ரானா டகுபதி தயாரித்துள்ள சின்ன கதா காடு என்ற தெலுங்கு படத்தில் நடிக்கிறார்

சாக்க்ஷி அகர்வால்

20240606093523723.jpeg

சாக்க்ஷி அகர்வால் தற்சமயம் ஐந்து படங்களில் கமிட்டாகி இருக்கிறார். தனது சிக்ஸ் பேக் படங்களை வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்து வருகிறார் இவர்.

ஸ்ரேயா சரண்

20240606093733619.jpg

42 வயதிலும் கவர்ச்சி குறையாமல் அதே அழகோடு இருக்கும் ஸ்ரேயா சரண் சமீபத்தில் ஒரு விருது விழாவிற்கு கருப்பு நிற கவர்ச்சி ஆடை அணிந்து சென்றிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் இப்போது வலைதளத்தில் ரசிகர்களை படுத்தியிருக்கிறது. விழா மேடைக்கு இப்படியா வருவது என்று அவரைக் காய்ச்சி எடுத்திருக்கிறார்கள் ஒரு சிலர்.

ரைசா வில்சன்

20240606093808326.jpeg

ரைசா வில்சன் தமிழில் கடைசியாக நடித்தது கருங்காப்பியம் தற்சமயம் தெலுங்கில் திசேஸ் என்ற படத்தில் நடிக்கிறார். கவர்ச்சியான புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு விட்டு இப்படி எல்லாம் படங்கள் வெளியிட்டால்தான் பட வாய்ப்பு எனக்கு வருகிறது இதுதான் 100 சதவீதம் உண்மை என்று உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார் ரைசா வில்சன்.