இந்தியா கோப்பையை கைப்பற்றியது என்ற சாதனை ஒரு பக்கம் என்றால், ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் T20 க்கே குட் பை சொன்ன வேதனையும் சேர்ந்து கொண்டது இந்த டோர்னமெண்ட்டின் ஹைலைட்..
2011ல் ஆட்டக்காரராக மிஸ் செய்திருந்தாலும் ராஹுல் திராவிட் அணியின் கோச்சாக இருந்து இந்த கோப்பையைப் பெற்றிருப்பதற்கு தனக்கு சந்தோஷமளிக்கிறது என்று சசின் டெண்டுல்கர் கூறினார்.
டாஸில் வெற்றி பெற்ற இந்தியாவின் ரோஹித் ஷர்மா பேட்டிங்க் செய்ய முடிவெடுத்து 176 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய தென்னாஃப்ரிகா ஸ்டெடியாகத்தான் சொல்லப் போனால் 15. 2 ஓவர் இருக்கையில் அவர்களது ஸ்கோர்.
28 பந்துகளில் 27 ரன்கள் வேண்டும் அப்போதைய ஸ்கோர் 150/4, செட்டிலாகிப்போன எமகாதக பேட்டர்ஸ் க்ளாசன் & மில்லர். இதுக்கு முந்தைய ஓவர் அக்ஸர் படேலோடது. சொளையா 24 ஓட்டங்களைத் தந்துவிட்டார்.
அங்க போர்டுல யாருக்கு வெற்றி எவ்வளோ சான்ஸ் என்ற நிலவரப்படி
தென்னாப்பிரிக்காவ்க்கு 96.90% நம்ம இந்தியாவிற்கு போனா போகிறது என்பதுபோல் 3.10%.
கொஞ்சம் அசை போடுங்கள் நிலைமையை.
இ(அ)ங்கேந்து எப்படீப்பா வெறி வந்தது நம்மவங்களுக்கு.
சூரியக் குமாரின் ரெண்டு காட்சுகள், ஹார்திக் பண்ட்யாவோட கடைசீ ஓவர்ல ரெண்டு விக்கெட்ஸ்..
அந்த மில்லரத் தூக்குனது, அந்த காடா ரபடாவத் தூக்குனது...
எதைச் சொல்ல எதை விட….
உள்ளம் சிலிர்க்கிறது. பதை பதைக்கிறது.
140 கோடி பேரோட தில்லுங்க லப் டப்னு அடிக்காம டப டபன்னு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சிருக்கும். இருதயம் வீக்கானவங்க டீ வீய ஆஃப் பண்ணிட்டு பிரார்த்தாயில் இறங்கியிருப்பார்கள் கையில் இருந்த நகங்கள் வயித்துக்குளே….இதுதான் NAIL – BITING மேட்ச்ங்கறதா..
அப்புறம் என்ன….
ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது
சென்றார்கள், வென்றார்கள்,
இனி வெற்றிக் கொண்டாட்டங்களே....
ரோஹித் ஷர்மா ஹார்திக்கை தூக்கிக்கொண்டு ……அந்த கடைசி ஓவர் சாகசத்திற்காக….
நான் ஓண்ணையும் பண்ணலப்பா எங்கிறாரா ஹார்திக்?
பும்ரா தனது ஸ்போர்ட்ஸ் ப்ரெசன்டர் மனைவி மற்றும் அங்கதன் என்னும் மகனுடன்.
ஆக்ஸர் படேல், ரிஷப் பந்த், சிராஜ் கொண்டாட்ட களிப்பில்
இப்போது மிஸ்டர் அமைதி, முன்பு சுவர் அடக்கமான தம்ஸ் அப்புடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்
விடுவார்களா ?? தங்களது கோச் ராஹுல் டிராவிடை மகிழ்ச்சியின் மிகுதியில் தூக்கிப் போட்டு……..
நம்ம sky அதான் சூரியகுமார் யாதவ் பிடித்த மில்லரின் கேட்ச் தான் மேட்சின் டர்னிங்க் பாயிண்ட்.
வெற்றிக் களிப்பில் இந்திய மூவர்ணக் கொடியுடன் தன்னை தானே செல்ஃபி எடுத்து கொள்கிறார்.
மண்ணை உண்ட வாயால்...
விண்ணை வெல்ல வா.....
Leave a comment
Upload